Election bannerElection banner
Published:Updated:

க்ரெட்டாவைவிட குறைவான விலை... வெல்கம் கிக்ஸ் டர்போ!

Kicks Turbo
Kicks Turbo ( Nissan India )

மைக்ரா - சன்னி - டெரானோ ஆகியவற்றின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. டெரானோவுக்கு மாற்றாக கிக்ஸ் பார்க்கப்பட்டாலும், இதர் கார்களுக்கான Replacement வருமா என்பது சந்தேகமே! ஒருவேளை புதிய மைக்ரா மற்றும் சன்னி ஆகியவை இந்தியாவுக்கு வந்தால் நிலைமை மாறலாம்.

ரெனோ- நிஸான் குழுமம்... கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், ரெனோ மட்டுமே பங்கேற்றது. அங்கே ட்ரைபர் AMT, டஸ்ட்டர் டர்போ, எலெக்ட்ரிக் க்விட், Zoe EV, பல்வேறு கான்செப்ட் கார்கள் என, கலர்ஃபுல்லாக இந்த நிறுவனத்தின் ஸ்டால் இருந்தது. இதன் கூட்டாளிகளான நிஸான் மற்றும் டட்ஸன் வராதது வியப்பாகவே இருந்தது என்றாலும், சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதி என இது சொல்லப்பட்டது. நிஸானைப் பொறுத்தவரை, மைக்ரா - சன்னி - டெரானோ ஆகியவற்றின் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது.

Go Plus
Go Plus
Datsun India

டெரானோவுக்கு மாற்றாக கிக்ஸ் பார்க்கப்பட்டாலும், இதர கார்களுக்கான Replacement வருமா என்பது சந்தேகமே. ஒருவேளை புதிய மைக்ரா மற்றும் அதை அடிப்படையாகக் கொண்ட சன்னி ஆகியவை இந்தியாவுக்கு வந்தால் நிலைமை மாறலாம். குறைவான விற்பனை காரணமாக, நம் நாட்டில் டட்ஸனின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது எனப் பேச்சு எழுந்தது தெரிந்ததே (இன்னும் கோ க்ராஸ் வரவில்லை). ஆனால், ரெடி-கோ ஃபேஸ்லிஃப்ட்டின் டீசர்கள் வந்தபிறகு, அந்த அதிர்வலை அடங்கியிருக்கிறது. இந்தச் சூழலில் ரெனோ - நிஸான் குழுமம் புதிய தயாரிப்புகளைக் களமிறக்கியுள்ளார்கள்.

`1 லட்ச ரூபாய் விலை குறைந்த W800..!' - கவாஸாகியின் அதிரடி முடிவு

ட்ரைபர் EASY-R AMT

Triber EASY-R AMT
Triber EASY-R AMT
Renault India

3 வேரியன்ட்களில் (RXL AMT, RXT AMT, RXZ AMT), 6.18 - 7.22 லட்ச ரூபாய் இந்திய எக்ஸ்-ஷோரூம் அறிமுக விலையில் வந்திருக்கிறது ட்ரைபர் EASY-R. 5 ஸ்பீடு MT உடனான மாடலைவிட 44,000 ரூபாய் அதிக விலையில் வந்திருக்கும் 5 ஸ்பீடு AMT மாடலின் புக்கிங் மற்றும் டெஸ்ட் டிரைவ் பணிகள் தொடங்கிவிட்டன. அடுத்த மாதம் முதலாக டெலிவரிகள் தொடங்கப்படலாம். இதில் வழங்கப்படும் 1.0 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின், 72bhp பவர் - 9.6kgm - 20kpl அராய் மைலேஜ் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. மற்றபடி டிசைன் மற்றும் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. அனேகமாக கொரோனாவால் நிலவும் ஊடரங்கு உத்தரவு முடிந்த பிறகு, சுமார் 100bhp பவர் - 16kgm டார்க்கைத் தரும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட ட்ரைபர் வெளியாகலாம். இதன் விலையில் டட்ஸன் கோ ப்ளஸ்தான் பிரதானப் போட்டியாளர். கூடவே சில ஹேட்ச்பேக்குகளும் உண்டு.

டட்ஸன் கோ & கோ ப்ளஸ் BS-6

Go Hatchback
Go Hatchback
Datsun India

முறையே 3.99 - 6.45 லட்ச ரூபாய் மற்றும் 4.20 - 6.90 லட்ச ரூபாய்க்கு (விலைகள் அனைத்தும் சென்னை எக்ஸ்-ஷோரூம்), கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களின் BS-6 மாடல்களைக் களமிறக்கிவிட்டது டட்ஸன். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 68bhp பவர் - 10.4kgm டார்க் - 19.02கிமீ அராய் மைலேஜ் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது (மைக்ரா ஆக்டிவில் இருந்த அதே டியூனிங்). இதுவே CVT உடனான மாடல் என்றால், 77bhp பவர் மற்றும் 10.4kgm டார்க் ஆகியவற்றை இதே 3 சிலிண்டர் இன்ஜின் தருகிறது (மைக்ராவில் இருந்த அதே டியூனிங்). இதன் தோற்றம் மற்றும் வசதிகளில் எந்த மாறுதலும் இல்லை. மற்றபடி வாடிக்கையாளர்களின் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில்கொண்டு, 'Buy Now and Pay in 2021', 100% ஃபைனான்ஸ், குறைவான EMI எனும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சான்ட்ரோ, வேகன்-ஆர், டியாகோ, செலெரியோ ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது கோ ஹேட்ச்பேக்.

நிஸான் கிக்ஸ் BS-6

கிக்ஸ் டர்போ
கிக்ஸ் டர்போ
Nissan India

மொத்தம் 8 வேரியன்ட்களில், 9.5 - 14.15 லட்ச ரூபாய் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளி வந்திருக்கிறது கிக்ஸ் BS-6. 1.5 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களின் விலை, BS-4 மாடலைவிட 5,000 ரூபாய் குறைவு என்பது கவனிக்கத்தக்கது. இதுவே 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் - 6 ஸ்பீடு MT & CVT பொருத்தப்பட்ட மாடல்களின் விலை, கியா செல்ட்டோஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா ஆகியவற்றைவிட மிகவும் குறைவு என்பதுதான் மாஸ்டர் ஸ்ட்ரோக். ஏனெனில், அவற்றில் இருப்பதைவிட 100சிசி சிறிய இன்ஜினாக இருந்தாலும், 16bhp அதிக பவர் & இணையான டார்க் (25.4kgm) கிடைப்பது செம. 2 வருடம்/50,000 கிமீ ஸ்டாண்டர்டு வாரன்ட்டி வழங்கப்பட்டாலும், அதை 5 வருடம்/1 லட்சம் கிமீக்கு நீட்டித்துக்கொள்ள முடியும். 2 வருடத்துக்கான RSA காருடன் கிடைக்கும் நிலையில், தற்போது Pre Annual Maintanence பேக்கேஜ் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இது 2,099 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு