Published:Updated:

காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் நிஸான்... செப்டம்பர் மாதம் அறிமுகமாகிறது புதிய கார்!

காம்பேக்ட் எஸ்யூவி
காம்பேக்ட் எஸ்யூவி ( Nissan India )

Contrast பெயின்ட், Floating ரூஃப், க்ராஸ் ஓவர் Profile, LED லைட்டிங் என மாடர்ன் அம்சங்களையும் இரண்டாம் தலைமுறை Juke-ன் தாக்கத்தையும் இதில் பார்க்க முடிகிறது.

போட்டிமிகுந்த காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில், லேட்டாக ஆனால் லேட்டஸ்ட்டாக நுழையவிருக்கிறது நிஸான். EM2 என்ற குறியிட்டுப் பெயரைக் கொண்ட இந்த கார், நெக்ஸான் - விட்டாரா பிரெஸ்ஸா - XUV3OO - வென்யூ - எக்கோஸ்போர்ட் ஆகியவற்றுடன் போட்டி போடவுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பரில் வரப்போகும் இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் டீசர்களை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது நிஸான்.

காம்பேக்ட் எஸ்யூவி
காம்பேக்ட் எஸ்யூவி
Nissan India

Contrast பெயின்ட், Floating ரூஃப், க்ராஸ் ஓவர் Profile, LED லைட்டிங் என மாடர்ன் அம்சங்களையும், இரண்டாம் தலைமுறை Juke-ன் தாக்கத்தையும் இதில் பார்க்க முடிகிறது. இது ரெனோவின் காம்பேக்ட் எஸ்யூவி (குறியிட்டுப் பெயர்: HBC) தயாரிக்கப்படவுள்ள அதே CMF-A பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் எனத் தகவல் வந்திருக்கிறது. ட்ரைபருக்கு அடுத்தபடியாக வரவிருக்கும் இந்த காரும் 2020-ம் ஆண்டில் 'டயர்' பதிக்கவுள்ளது.

இதர நிஸான் கார்களில் பொதுவாகக் காணப்படும் சிறப்பம்சங்கள், இந்த காம்பேக்ட் எஸ்யூவிக்கும் இடம் பெயரலாம். Nissan Connect அதற்கான சிறந்த உதாரணமாக இருக்கலாம். 1 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் (HR10), 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் அறிமுகமாக உள்ளது. இதே இன்ஜினும் கியர் பாக்ஸும் ரெனோவின் ட்ரைபர் மற்றும் காம்பேக்ட் எஸ்யூவியிலும் பயன்படுத்தப்படுவதற்கு அதிக சாத்தியம் உள்ளது.

இசைக்கருவிக்குள் ஒளிந்து தப்பிய ஜப்பான் நிஸான் முன்னாள் சி.இ.ஓ கார்லோஸ் கோன்! ஏன், எப்படி?

இந்த இன்ஜின் 78% உள்நாட்டுப் பாகங்களுடன் தயாரிக்கப்படுகிறது. இதில் டீசல் இன்ஜின் இருக்காது என்றே தெரிகிறது. டட்ஸனில் இருந்து ஒரு Compact எஸ்யூவி வரும் எனப் பேச்சுகள் எழுந்த நிலையில் (Go Cross), நிஸானிடமிருந்து அது வரப்போவது நல்ல விஷயம்தான்! முதற்கட்டமாக கிக்ஸ் CVT (டஸ்ட்டரின் அதே செட்-அப்பாக இருக்கலாம்) மற்றும் டட்ஸன் ரெடி-கோ ஃபேஸ்லிஃப்ட் (BS-6 வெர்ஷன்) ஆகியவை நிஸானிடமிருந்து வெளியாகப்போகின்றன.

அடுத்த கட்டுரைக்கு