Published:Updated:

Ola: பற்றி எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்; 'பாதுகாப்பு முதன்மையானது' - விளக்கமளித்த ஓலா நிறுவனம்!

Ola scooter catches fire

புனேவில் எங்களது ஸ்கூட்டர் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியை நாங்கள் அறிவோம். மேலும் அதன் மூல காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். மேலும் இதுகுறித்த விபரங்களை அடுத்த சில நாட்களில் பகிர்கிறோம்

Ola: பற்றி எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்; 'பாதுகாப்பு முதன்மையானது' - விளக்கமளித்த ஓலா நிறுவனம்!

புனேவில் எங்களது ஸ்கூட்டர் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியை நாங்கள் அறிவோம். மேலும் அதன் மூல காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். மேலும் இதுகுறித்த விபரங்களை அடுத்த சில நாட்களில் பகிர்கிறோம்

Published:Updated:
Ola scooter catches fire
புனேவில் சாலையோரம் நின்றிருந்த ஓலா எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் வைரலாகி வருகிறது. நீல நிற ஓலா எஸ் 1 எலக்ட்ரானிக் ஸ்கூட்டர் சாலையோரம் கடைக்கு முன்புறம் நிறுத்தப்பட்டிருந்தது. திடீரென வெள்ளைப் புகை ஸ்கூட்டரின் பின்புறம் இருந்து வெளிவந்தது. அதன் பின் ஸ்கூட்டர் தீப்பிடித்து எறியத் தொடங்கியது. அந்தக் காட்சியை மக்கள் வீடியோ எடுத்து சமூக வளைதளத்தில், ஓலா நிறுவனத்தைக் குறிப்பிட்டுப் பதிவிட்டனர். வீடியோவும் வைரலானது. இதனைத் தொடர்ந்து அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்திருக்கிறது.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஓலா நிறுவனம் தங்களது எலக்ரிக் ஸ்கூட்டர் s1 மற்றும் s1 pro வகையை 2021 ஆகஸ்ட் 15-ல் இந்திய சந்தையில் களமிறக்கியது. S1 வகை ரூபாய் 99,999-க்கும் s1 pro வகை ரூபாய் 1,29,999-க்கும் விற்கப்பட்டது. Ola s1 மணிக்கு 121 கிமீ வேகமும் 2.98 கிலோ வாட் பேட்டரி திறனும், 121 கிலோ எடையும் கொண்டது. அதேபோல் ola s1 pro மணிக்கு181 கிமீ வேகமும் 3.97 கிலோ வாட் பேட்டரி திறனும்,125 கிலோ எடையும் கொண்டது.

Ola s1 இரண்டு விதம் கொண்டுள்ளது. ஒன்று நார்மல் மற்றொன்று ஸ்போர்ட்ஸ். S1 pro மூன்று விதங்களை கொண்டுள்ளது, நார்மல், ஹய்பர், ஸ்போர்ட்ஸ். Ola s1 ன் அடுத்த நிலையாக ola s1 pro அமைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் புனேவில் சாலை ஓரம் நின்றிருந்த ஓலா எஸ் 1 வகை தீப்பிடித்து எறிந்தது குறித்து ஓலா நிறுவனம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"புனேவில் எங்களது ஸ்கூட்டர் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியை நாங்கள் அறிவோம். மேலும் அதன் மூல காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். மேலும் இதுகுறித்த விபரங்களை அடுத்த சில நாட்களில் பகிர்கிறோம். எங்களது வாடிக்கையாளருடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம், அவர் பாதுகாப்பாகவும் உள்ளார். ஓலா நிறுவனம் வாகன பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிக்கிறது அதற்கு நாங்கள் கடமையும் பட்டுள்ளோம். இந்தச் சம்பவத்தைத் தீவிரமாக எடுத்து அதற்கான தக்க நடவடிக்கைகளை வகுத்து வரும் நாட்களில் அதை வெளியிடுவோம்" என்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ஓலா நிறுவன சிஇஓ பாவிஷ் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் " பாதுகாப்பு முதன்மையானது. நாங்கள் அதை விசாரித்து வருகிறோம். சரிசெய்வோம் " என்று குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism