Published:Updated:

"பெட்ரோலுக்கு எக்ஸ்ட்ரா பணம் வாங்கமாட்டேன்!"

நடமாடும் பஞ்சர் கடை
பிரீமியம் ஸ்டோரி
நடமாடும் பஞ்சர் கடை

பேட்டி: நடமாடும் பஞ்சர் கடை

"பெட்ரோலுக்கு எக்ஸ்ட்ரா பணம் வாங்கமாட்டேன்!"

பேட்டி: நடமாடும் பஞ்சர் கடை

Published:Updated:
நடமாடும் பஞ்சர் கடை
பிரீமியம் ஸ்டோரி
நடமாடும் பஞ்சர் கடை

புதுச்சேரியைச் சுற்றி உங்கள் பைக் எங்கே பஞ்சர் ஆனாலும், கவலையே படத் தேவையில்லை. ஒரே ஒரு போன் கால் போதும்; அடுத்த சில நிமிடங்களில் பஞ்சர் உபகரணங்களுடன் உங்களைத் தேடி வருவார் நவீன். 22 வயதே ஆன நவீன், ஒரு டிப்ளமோ இன்ஜீனியர். புதுச்சேரியில் ஓடி ஓடி பஞ்சர் போட்டுக் கொண்டிருந்த நவீனை, பஞ்சர் கிட்டும் கையுமாகப் பிடித்தேன்.

‘‘இந்த மொபைல் பஞ்சர் ஷாப் ஐடியா எப்படி வந்தது நவீன்?’’

‘‘தட்டாஞ்சாவடி எனும் இடத்தில் விவிபி நகரில் வாடகைக்கு ஒரு இடத்தைப் பிடித்து பஞ்சர் கடை அமைத்து பல ஆண்டுகளாகத் தொழில் செய்து வந்தார் என் அப்பா. நானும் அவருக்கு உதவியாக இருப்பேன். ஒரு தடவை லாக்டௌன் சமயத்தில் டோல்கேட் அருகில் ஒரு வாகனம் பஞ்சர் ஆகிவிட்டது. அதில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். லாக்டெளன் என்பதால், அப்போது பஞ்சர் கடைகள் இல்லை. அப்போது அருகிலிருந்த ஒருவர், எங்களது தொலைபேசி எண்ணைக் கொடுத்து, என்னைத் தொடர்பு கொள்ளச் செய்தார். நான் எங்கள் கடையில் இருந்து பழுது நீக்கும் கருவிகளை எடுத்துக்கொண்டு அங்கு செல்வதற்கு நேரமாகிவிட்டது. அவர்கள் மருத்துவமனைக்குத் தாமதமாகச் சென்றதால், அப்பெண்மணிக்குச் சிஸேரியன் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. அப்போதுதான் எனக்குத் தோன்றியது, நாம் சிறிது நேரம் முன்பே அங்கு சென்றிருந்தால், அவர்களுக்குச் சுகப்பிரசவம் நடந்திருக்கும். அந்த வேதனையில் முடிவானதுதான் இந்த மொபைல் பஞ்சர் ஷாப்.

பாண்டிச்சேரி மொபைல் பஞ்சர் நவீன்
பாண்டிச்சேரி மொபைல் பஞ்சர் நவீன்

இதற்காகவே ஒரு பழைய ஹீரோ ஹோண்டா பைக்கில் ஏர் டேங்க், பழுது நீக்கத் தேவையான கருவிகள், எமர்ஜென்சி கிட் போன்றவற்றை இணைத்து ஒரு அட்டகாசமான வாகனத்தை ரெடி செய்திருக்கிறார் நவீன். இந்த ஃபிட்டிங்ஸ்க்காக மட்டும் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்தாராம்.

‘‘முன்பெல்லாம் எங்கள் கடையில் மட்டுமே நாங்கள் பழுது சரி செய்து கொடுப்போம். அப்போது வருமானம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்காது. தற்போது வாடிக்கையாளரின் இடத்துக்கே சென்று அவர்களுக்குப் பழுது நீக்கித் தருவதால், நான் கேட்பதை விட அதிகமாகவே கொடுக்கிறார்கள். அவர்களுக்கு அவசர நிலையில் உதவும்போது என்னை வாழ்த்தி, நான் வந்து போகும் பெட்ரோல் செலவைக்கூட சிலர் கொடுக்கிறார்கள்!’’ எனும் நவீன், கார்/பைக் இரண்டுக்குமே பஞ்சர் போடுகிறார். ஒரு பஞ்சருக்கு 100 முதல் 150 ரூபாய் வரை வாங்குகிறார். காருக்கு என்றால், 200 – 250 ரூபாய். ட்யூப் டயர் / ட்யூப்லெஸ் டயர் இரண்டிலுமே கில்லியாக இருக்கிறார் நவீன்!

நடமாடும் பஞ்சர் கடை
நடமாடும் பஞ்சர் கடை

‘‘புதுச்சேரி ஓகே… அதைத் தாண்டி எவ்வளவு தூரம் உங்கள் பஞ்சர் கடை வரும்?’’ என்றால்… ‘‘இதுவரை பாண்டிச்சேரியை மட்டும்தான் கவர் செஞ்சுக்கிட்டிருக்கேன். அதைத் தாண்டி 5 – 10 கிமீ வரை வேணும்னா வரலாம்!’’ எனும் நவீன், பெட்ரோலுக்கு என்று தனியாக ஏதும் சார்ஜ் செய்வதில்லையாம்.

‘‘பெட்ரோல் விக்கிற விலையில இது எப்படிக் கட்டுப்படியாகுது நவீன்?’’ என்றேன். ‘‘சில பேர் ரொம்ப எமர்ஜென்ஸி நேரங்கள்ல நான் போய் பஞ்சர் போட்டுக் கொடுத்ததுக்கு எக்ஸ்ட்ராவாகவே பணம் குடுப்பாங்க. சில பேர் பெட்ரோலுக்கும் கொடுத்திருக்காங்க. அவங்களாக் கொடுத்தா வேணாம்னு சொல்லமாட்டேன்.’’ என்கிறார் அப்பாவியாக.

இனிமேல் பாண்டிச்சேரி முழுக்க பஞ்சர் பயமில்லாம சுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism