Published:Updated:

அன்பு வணக்கம்!

ஆசிரியர் பக்கம்
பிரீமியம் ஸ்டோரி
ஆசிரியர் பக்கம்

பொதுவாக ஒரு கார் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டால், காதும் காதும் வைத்தாற்போலத்தான் அந்தச் சம்பவம் நடக்கும். ஃபோக்ஸ்வாகன் போலோ சாதாரண கார் இல்லை என்பதால்...

அன்பு வணக்கம்!

பொதுவாக ஒரு கார் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டால், காதும் காதும் வைத்தாற்போலத்தான் அந்தச் சம்பவம் நடக்கும். ஃபோக்ஸ்வாகன் போலோ சாதாரண கார் இல்லை என்பதால்...

Published:Updated:
ஆசிரியர் பக்கம்
பிரீமியம் ஸ்டோரி
ஆசிரியர் பக்கம்

கொரோனா காலத்துக்கு முன்பு ஆட்டோமொபைல் துறை எப்படிச் சுறுசுறுப்பாக இருந்ததோ, அந்த அளவுக்கு... இல்லை இல்லை... அதற்கும் மேலாக கடந்த ஏப்ரல் மாதம் அது சுறுசுறுப்பாக இருந்தது. ஒரே நாளில் வெவ்வேறு நகரங்களில் வெவ்வேறு கார்களின் அறிமுகங்கள். டெஸ்ட் டிரைவ்ஸ் என்று மோட்டார் விகடன் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்கள் சுழன்று கொண்டே இருந்தார்கள். ஊடகங்களைச் சந்திப்பதையே தவிர்த்து வந்த கார் கம்பெனியின் உயர் அதிகாரிகள், தாமாக முன்வந்து தங்கள் கம்பெனியின் எதிர்காலத் திட்டத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டார்கள். இரண்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகமாக இருக்கும் கான்செப்ட் கார்களைக்கூடக் காட்சிப்படுத்தினார்கள். இந்த நடவடிக்கைகளில் இருந்து வெளிப்படும் செய்தி என்னவென்றால், எந்த செக்மென்ட்டில் கார் வாங்கப் போகும் வாடிக்கையாளராக இருந்தாலும், பஞ்சமே இல்லாமல் அவர்களுக்கு நிறைய சாய்ஸ் கிடைக்கப் போகின்றன என்பதுதான்.

கார் கம்பெனிகள் இப்படி ஒரு ரூட் எடுத்துச் செல்ல... இரு சக்கர வாகனத் தயாரிப்பாளர்களோ, தங்கள் வாகனங்களின் முழுவீச்சையும் பராக்கிரமத்தையும் வாடிக்கையாளர்களுக்கு உணர்த்த சாகசங்கள் நிறைந்த பலவிதமான பயணங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பந்தய மைதானங்கள், நெடுஞ்சாலைகள், மலை அடிவாரங்கள், காட்டுப்பாதைகள் என்று நடைபெற்ற இந்தப் பயணங்களில் மோட்டார் விகடன் குழுவினரும் கலந்து கொண்டு அந்த பரவசத்தைச் சுவைத்தார்கள்.

நமது ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த மாதம் கிடைத்த அத்தனை சிலிர்ப்பான அனுபவங்களையும் இந்த அச்சு இதழின் வாயிலாக மட்டுமே கடத்திவிட முடியாது என்பதை நீங்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வீர்கள். அதனால்தான் இந்த அனுபவங்கள் அனைத்தையும் மோட்டார் விகடன் யூட்யூப் சேனலிலும் சுடச்சுடப் பதிவேற்றியிருக்கிறோம்.

பொதுவாக ஒரு கார் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டால், காதும் காதும் வைத்தாற்போலத்தான் அந்தச் சம்பவம் நடக்கும். ஃபோக்ஸ்வாகன் போலோ சாதாரண கார் இல்லை என்பதால்... அது நிறுத்தப்பட்ட நிகழ்வைக்கூட ஒரு கொண்டாட்டத்தோடு நடத்தியது ஃபோக்ஸ்வாகன். இதன் தயாரிப்பு நிறுத்தப்படுவதை ஒட்டி லெஜெண்ட் என்ற ஸ்பெஷல் எடிஷனை அது சென்னை ரேஸ் ட்ராக்கில் அறிமுகம் செய்ததோடு, போலோ கப் ரேஸ் கார்களை ட்ராக்கில் ஓட்டவும் மோட்டார் விகடனின் ஆசிரியர் குழுவுக்கு மட்டுமல்ல, வாசகர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்தது. அந்தக் காணொளியும் மோட்டார் விகடன் யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்திருக்கிறோம்.

கண்டுகளியுங்கள். கருத்துக்களைப் பகிருங்கள்!

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism