Published:Updated:

ஆகஸ்ட் மாதம் கார், பைக்குகளின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கிறது?!

Kona EV SUV ( Hyundai Motor India )

வாகன உற்பத்தியாளர்கள் தமது தயாரிப்புகளின் விலையை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஆகஸ்ட் மாதம் கார், பைக்குகளின் விலை எவ்வளவு உயர்ந்திருக்கிறது?!

வாகன உற்பத்தியாளர்கள் தமது தயாரிப்புகளின் விலையை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

Published:Updated:
Kona EV SUV ( Hyundai Motor India )

இந்தியாவில் தொடர்ச்சியாகச் சரிந்திருக்கும் வாகன விற்பனை மற்றும் பண்டிகை காலத்தைக் கருத்தில்கொண்டு, வரவிருக்கும் புதிய வாகனங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் வாகன உற்பத்தியாளர்கள் தமது தயாரிப்புகளின் விலையை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

வழக்கமான மூலப் பொருள்களின் விலையேற்றம், சீரற்ற பொருளாதாரச் சூழல், டூ-வீலர்களில் கட்டாயமாக்கப்பட்டிருக்கும் CBS மற்றும் ABS ஆகியவற்றைத் தாண்டி, அதிகரித்திருக்கும் மூன்றாம் நபருக்கான காப்பீட்டுத் தொகை, அமலுக்கு வந்திருக்கும் AIS-145 விதிக்கேற்ப கார்களை மேம்படுத்துதல், BS-6 மாசு விதிகளுக்கு ஏற்ப கார்களின் இன்ஜினை ரீ-டியூன் செய்தல் என டூ-வீலர்களைவிட கார்களின் விலை உயர்வதற்கான காரணங்கள் அதிகரித்திருக்கின்றன.

இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்துவரும் மாருதி சுஸூகி நிறுவனம் ஆல்ட்டோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட், டிசையர், பெலினோ, எர்டிகா ஆகிய கார்களின் BS-6 வெர்ஷன்களை ஏற்கெனவே அறிமுகப்படுத்திவிட்டது. கூடவே, அவற்றின் விலையையும் கணிசமாக ஏறிவிட்டது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா

Venue Compact SUV
Venue Compact SUV
Hyundai

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த மாதத்தின் தொடக்கத்திலிருந்து, தனது கார்களின் விலையை 9,200 ரூபாய் வரை அதிகரித்திருக்கிறது ஹூண்டாய் மோட்டார்ஸ். இதில் இந்த நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் வென்யூ காம்பேக்ட் எஸ்யூவி ஆகியவை கிடையாது.

AIS-145 விதிகளின்படி ஜூலை 1, 2019 முதலாகத் தயாரிக்கப்பட்ட கார்களில், ஒரு காற்றுப்பை, பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைண்டர் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டது தெரிந்ததே. ஆனால், அறிமுக விலையில் வெளிவந்த வென்யூவின் புக்கிங் எண்ணிக்கை 50 ஆயிரம் கார்களைக் கடந்திருக்கும் நிலையில், இதன் விலை விரைவில் அதிகரிக்கப்படலாம். மேலும், எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி 12%-ல் இருந்து 5%-ஆகக் குறைக்கப்பட்டிருக்கும் சூழலில், கோனாவின் விலை 1.59 லட்ச ரூபாய் குறைந்திருக்கிறது! இதன் புக்கிங் 130 கார்களைத் தாண்டியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட்

XUV 5OO
XUV 5OO
Mahindra

`பலவிதமான வாகனங்களையும் தயாரிக்கும் நிறுவனம்' எனும் பெருமைக்குச் சொந்தக்காரரான மஹிந்திரா, தனது பாசஞ்சர் வகை வாகனங்களின் விலைகளை 36 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. AIS-145 விதிகளுக்கேற்ப கார்களை மேம்படுத்தியதே இதற்கான காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதில் மராத்ஸோ மற்றும் XUV 5OO ஆகியவற்றின் விலைகள் குறைந்த அளவில் ஏறியிருந்தால், ஸ்கார்ப்பியோ - பொலேரோ - TUV 3OO - KUV 1OO NXT ஆகியவற்றின் விலை அதிகளவில் ஏற்றம் காணவுள்ளது. இதில் பொலெரோ பவர் ப்ளஸ், `இந்தியாவில் முதன்முதலாக BS-6 சான்றிதழ் பெற்றிருக்கும் யுட்டிலிட்டி வாகனம்' என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் AIS-145 விதிகளின்படி அப்கிரேடு செய்யப்பட்டிருப்பதால், பொலேரோ பவர் ப்ளஸ் எஸ்யூவியின் விலை 30 ஆயிரம் ரூபாய் உயர்ந்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பஜாஜ் ஆட்டோ

பிளாட்டினா 100 KS DTS-i மாடல் முதல் டொமினார் D400 வரை எனத் தான் தயாரிக்கும் டூ-வீலர்களின் (பல்ஸர், பிளாட்டினா, டிஸ்கவர், டொமினார்) டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகளை, 400 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது பஜாஜ் ஆட்டோ. கடந்த ஏப்ரல் மாதம் டொமினார் D400 பைக்கின் பேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக விலை வெளியானது. இந்நிலையில், அதன் விலை தற்போது 6 ஆயிரம் ரூபாய் ஏற்றம் கண்டிருக்கிறது. முன்னே சொன்ன மாடல்களின் புதிய விலைப்பட்டியல் (சென்னை ஆன்ரோடு விலைகள்) பின்வருமாறு.

CT 110 ES CBS
CT 110 ES CBS
Bajaj Auto Limited

பல்ஸர் Neon 150 ABS: 88,378 ரூபாய் (பழைய விலை: 83,548 ரூபாய்)

பல்ஸர் 150 Std ABS: 1,03,444 ரூபாய் (பழைய விலை: 1,02,614 ரூபாய்)

பல்ஸர் 150 Twin Disc ABS: 1,06,894 ரூபாய் (பழைய விலை: 1,06,050 ரூபாய்)

பல்ஸர் 180F Neon ABS: 1,15,606 ரூபாய் (பழைய விலை: 1,14,805 ரூபாய்)

பல்ஸர் 220F ABS: 1.28,518 ரூபாய் (பழைய விலை: 1,27,892 ரூபாய்)

பல்ஸர் NS160 TD ABS: 1,14,219 ரூபாய் (பழைய விலை: 1,13,423 ரூபாய்)

பல்ஸர் NS200 ABS: 1,35,150 ரூபாய் (பழைய விலை: 1,34,516 ரூபாய்)

பிளாட்டினா 100 (KS) CBS: 53,321 ரூபாய் (பழைய விலை: 53,018 ரூபாய்)

பிளாட்டினா 100 (ES) CBS: 62,213 ரூபாய் (பழைய விலை: 61,870 ரூபாய்)

பிளாட்டினா 110 (Drum) CBS: 64,513 ரூபாய் (பழைய விலை: 64,159)

பிளாட்டினா 110 H-Gear (Disc) CBS: 70,464 ரூபாய் (பழைய விலை: 69,152 ரூபாய்)

Dominar D400
Dominar D400
Bajaj

டிஸ்கவர் 125 (Drum) CBS: 73,222 ரூபாய் (பழைய விலை: 72,444 ரூபாய்)

டிஸ்கவர் 125 (Disc) CBS: 77,843 ரூபாய் (பழைய விலை: 77,044 ரூபாய்)

CT 110 (ES) CBS: 57,113 ரூபாய் (பழைய விலை: 56,954 ரூபாய்)

டொமினார் D400 ABS: 2,17,597 ரூபாய் (பழைய விலை: 2,11,101 ரூபாய்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism