Published:Updated:

ஹூண்டாய் ஃப்ளூயிடிக் டிசைனின் தந்தை!

ஹூண்டாய் ஃப்ளூயிடிக்
பிரீமியம் ஸ்டோரி
ஹூண்டாய் ஃப்ளூயிடிக்

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 36

ஹூண்டாய் ஃப்ளூயிடிக் டிசைனின் தந்தை!

தொடர்: நாம் பிடிக்க வேண்டிய கடைசி பஸ் - 36

Published:Updated:
ஹூண்டாய் ஃப்ளூயிடிக்
பிரீமியம் ஸ்டோரி
ஹூண்டாய் ஃப்ளூயிடிக்

பெரு வெற்றி என்பது எந்த ஒரு தொழில்துறையிலும் அரிது. அதிலும் முதலீடு மிக அதிகம் பிடிக்கும் ஆட்டோமொபைல் துறையில் வெற்றி அரிதிலும் அரிது. எல்லாவற்றிலும் அரிதினும் அரிது கிடைத்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வது.

இன்று கொரிய நிறுவனங்களின் ஆகப் பெரிய சவால், கிடைத்த வெற்றியை நெடுங்காலத்துக்குத் தக்க வைத்துக் கொள்வதே! ஏனென்றால், இந்த நிறுவனங்களின் மேல் அதிக அளவிலான மார்க்கெட், கொரிய எல்லைகளுக்கு வெளியிலும் இந்தியா, அமெரிக்கா போன்ற பெரிய பரப்புள்ள தேசங்களை நம்பித்தான் இருக்கின்றன.

ஒரு பக்கம், ஜப்பான் என்னும் சீனியர் தாதா. மறு பக்கம், சீனா என்னும் பூதம். இந்த இரு வலிமையான போட்டியாளர்களுக்கு இடையில், கொரிய நிறுவனங்கள் ஆடும் ஆட்டம், ஒரு பெரும் சவாலான ஆட்டம்தான். இது கிட்டத்தட்ட இரு மலைகளுக்கு இடையே, அந்தரத்தில் கம்பியில் நடக்கும் வித்தையைப் போன்றது.

இந்த வித்தையின் மொத்த சூட்சுமமும், அந்தரத்தில் வித்தை காட்டுகிறவர் கையில் இருக்கும் அந்தக் கழியில்தான் இருக்கிறது. தன் உடல் எடையையும், காற்றின் எதிர் விசையையும் பேலன்ஸ் செய்யும் அந்தக் கோலை ஆங்கிலத்தில் `பேலன்ஸ் போல்’ (Balance Pole) என்பார்கள்.

ஹூண்டாய் ஃப்ளூயிடிக் டிசைனின் தந்தை!

உலக ஆட்டோமொபைல் வர்த்தகப் போட்டியில், ஹூண்டாய் ஒரு `tight rope walker’ என்கிற வித்தைக்காரன் மாதிரிதான். அது கையில் பிடித்திருக்கும் `பேலன்ஸ் போல்' என்பது, இங்கே டிசைன். இதை ஹூண்டாய் மிக நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறது என்பதை, 2020 மார்ச் மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்திய i20 கான்செப்ட் நிரூபிக்கிறது. புதிய i20-ன் டிசைன் லாங்வேஜ், ஐரோப்பிய டிசைன் வல்லுநர்களைப் புருவம் உயர்த்த வைத்தது. இந்த வடிவமைப்பு ஸ்டைலை, ஹூண்டாய் ‘sensuous sportiness’ என்கிறது. இந்தக் கோட்பாடு, அடிப்படையில் நான்கு தூண்களின் மேல் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. 1.ப்ரப்போர்ஷன்;

2.ஹார்மோனி; 3.ஸ்டைலிங்; 4.டெக்னாலஜி. இந்த நான்கும் விஷுவல் மொழியில் பரிமாறப்பட்டிருக்கின்றன.

தங்க விகிதத்தில் கிரில், ஹெட்லைட், வெகுகவர்ச்சியான பம்பர் ஸ்கூப், அதில் நேர்த்தியாகப் பொருத்தப்பட்ட ஃபாக் லேம்ப் எனக் கிறங்கடிக்கும் முன்னழகு! நீண்ட வீல்பேஸ். புடைத்து நிற்கும் ஷார்ப்பான ஷோல்டர் லைன் ,போர்வீரனின் வாளை நினைவுபடுத்தும் கேரக்டர் லைன் என அசத்தலான பக்கவாட்டுத் தோற்றம். பேக் லைட் உடன் இணைந்த டெய்ல் லாம்ப்கள் என எல்லாமே ஒரு புதிய அழகியல் முயற்சி. இதை ஒரு `ஸ்டைலிங் புரட்சி’ என்று சொல்வதற்கு எல்லா தகுதிகளும் உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹூண்டாய் ஃப்ளூயிடிக் டிசைனின் தந்தை!

ஆசியாவிலிருந்து வந்து ஒரு நிறுவனம் பத்தோடு பதினொன்றாக இருந்துவிட்டுப் போகாமல், துணிந்து ஐரோப்பிய –அமெரிக்க மண்ணில் நின்று அடிக்கிற அதிசயத்தை மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்களே அதிசயித்து எழுதுகிறார்கள். ஹூண்டாயின் இந்தச் சாதனைகளுக்கு முதுகெலும்பாக இருப்பது டிசைன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உலகின் மூன்று முக்கிய இடங்களில் தன் டிசைன் மையங்களை நிறுவியிருக்கிறது ஹூண்டாய்.

1.Namyang Design Center - கொரியாவில் கியாவின் பிறப்பிடம் இதுதான்.

2.US design center, Los Angeles டிசைன் ஸ்டூடியோ. (தற்போது இது கலிஃபோர்னியாவில் இயங்குகிறது)

3.ஜெர்மனியின் ஃபிரான்க்பர்ட்டில்

Europe Design Center.

- இப்படி மூன்று டிசைன் சென்டர்களை தொலைநோக்குச் சிந்தனையோடு அமைத்திருக்கிறது ஹூண்டாய்.

ஹூண்டாய் ஃப்ளூயிடிக் டிசைனின் தந்தை!

2007-ல்தான் ஹூண்டாய், தனது கார் டிசைனை Country Centric-காகக் கொண்டு செயலாற்ற முனைந்தது. இந்த நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். தனது அமெரிக்க டிசைன் சென்டருக்கான புதிய தலைவரைத் தேர்ந்தேடுத்து, முற்றிலும் புதிய சொனாட்டாவை, புதிய டிசைன் கோட்பாட்டுடன் அறிமுகப்படுத்தி அசத்துவதைத் திட்டமாக வைத்திருந்தது ஹூண்டாய்.

அமெரிக்காவில் புகழ்பெற்ற செலபிரிட்டி டிசைனர் யாரையாவது பிடித்துப் போடாமல், நாம்யாங் டிசைன் சென்டரில் இருந்து அவர்கள் நாட்டவரிடமே பொறுப்பை ஒப்படைக்க தலைமை முடிவெடுத்தது. அப்படி 2007-ல் பொறுப்பேற்றுக் கொண்டவர் Oh Suk-Geun. அப்படி அவர் முன்னெடுத்த ஒரு சாதனை மற்றும் சோதனை முயற்சிதான் fluidic design philosophy.

2009-ல் புதிய fluidic design language-ல் வெளிவந்த ஹூண்டாய் சொனாட்டா பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதற்கு முன் சொனாட்டா ஒரு நல்ல கார் என்ற பெயரை அமெரிக்காவில் பெற்றிருந்தது. மற்ற அமெரிக்க கார்களும் சொனாட்டாவும், வடிவமைப்பில் பெரிய வித்தியாசம் இல்லாமல் இருந்தன.

இப்போது அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சொனாட்டாவோ, ஒரு வேற்றுக்கிரகவாசியாகத் தோற்றமளித்தது. இது உள்ளூர் இன்ஜினீயர்கள், டிசைனர்கள், மார்க்கெட்டிங் மேனேஜர்கள் என பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. முதல் பார்வையில் இதை ஒரு அழகிய கார் டிசைனாக ஏற்கவே முடியாத நிலைதான். ஆனால் இதைப் பற்றிப் பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை டிசைன் டைரக்டர் Oh Suk-Geun. டிசைனில் புரட்சிகரமாப் பல முன்னெடுப்புகளைச் சுதந்திரமாகச் செய்தார். இயற்கை நிகழ்வுகளையும், ஓவியம், சிற்பம் உள்ளிட்ட கலை நிகழ்வுகளையும் கார் டிசைன் உத்திகளாக மாற்றிக் காட்டினார். இதுதான் `fluidic sculpture’ என்று புகழப்பட்டது.

பாலைவனங்களின் மணல்மேடு களும், அவற்றின் டைனமிக் வளைவுகளும், வேகமாக நகரும் அலையாடும் தண்ணீரின் வடிவங்களும், பறவைகளின் இலகுவான - மிருதுவான மிதக்கும் உருவ அமைப்புகளும், மேற்சொன்ன அனைத்தும் காற்றோடு ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தங்களும் கலந்த கலவைதான் fluidic sculpture. ஆகவே, இது ஒரு புதிய அனுபவமாக வாடிக்கையாளர்களால் கொண்டாடப்படும் என்று நிர்வாகத்திடம் எடுத்துச் சொல்லிச் சம்மதம் பெற்றார். இப்படி ஒரு கான்செப்ட் ஸ்கெட்ச்சிலிருந்து உண்மையான உருப்பெற, நீண்ட நேரம் க்ளே மாடலர்களோடு நேரம் செலவிட்டார் Oh Suk-Geun. நிலையாக நிறுத்தப்பட்டிருந்தாலும், கார் நகர்ந்து கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வடிக்கப்பட்ட டிசைன் மொழியே fluidic sculpture.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடின உழைப்பு வீண்போகவில்லை. அதிர்ச்சியூட்டும் அளவுக்குத் தனித்துக் காணப்பட்ட 6-வது தலைமுறை சொனாட்டா, மக்களால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டது. உள்ளுக்குள் வெறுத்த வடிவமைப்பாளர்களும் பொறியாளர்களும், இந்தப் புதிய வகை அழகியலை விரும்பி ஏற்றுக் கொண்டதோடு, மற்ற கார் மாடல்களிலும் இதையே முன்னுதாரணமாகக் கொண்டு வடிவமைத்தனர். ஹூண்டாய் கார்கள் அனைத்துக்கும் ஃப்ளூயிடிக் டிசைன் என்பது அடையாளமாக மாறிப் போனது. இந்தப் புள்ளியிலிருந்து ஹூண்டாய் கார்கள் பெரும் புகழும், வணிக வெற்றியும் பெற்றுத் தந்தன.

எக்ஸ்டீரியர் ஸ்டைலிங்கில் மட்டுமல்லாது, இந்த ஃப்ளூயிடிக் டிசைனை இன்டீரியர் டிசைனிலும் தொடர்ந்தது ஹூண்டாய். சொனாட்டாவின் வெற்றிக்கு சில தொழில்நுட்ப முன்னெடுப்புகளும் பெருங்காரணம் என்றாலும், இதற்கு முன்பிருந்த கொரிய கார்கள் மீதிருந்த ஏளனப் பார்வையை முற்றிலும் இந்தப் புதிய டிசைன் யுக்திதான் நீக்கியது.

சொனாட்டாவின் அடையாளம் `orchid stroke' என்றால், புதிய எலான்ட்ரா, `wind craft’ என்ற அடைமொழியோடு ஒரு புது லுக் காட்டியது. உலகின் பெரிய கார் நிறுவனங்கள், தங்கள் கிரில் டிசைனைத் தனித்துவமாக அடையாளப்படுத்தி வருவதுபோல, ஹூண்டாய் ஒரு தனித்துவமான கிரில் அடையாளத்தைப் பதிவு செய்தது. ஹூண்டாயின் இந்த அழகியல் பிடிவாதம், மக்களுக்கும் பிடித்திருக்கிறது.

மெர்சிடீஸ், பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற கார்களில் இருக்கும் வசதிகளையும், எக்யூப்மென்ட் லிஸ்ட்டையும் சராசரி மக்களின் கார்களில் சாத்தியமாக்கியது, ஹூண்டாயின் எலெக்ட்ரானிக் சாதனை. வயர்லெஸ் சார்ஜிங், போஸ் ஸ்பீக்கர்ஸை சின்ன i20-ல் எதிர்பார்த்திருப்போமா?

`Tight rope walking’ பழகியது கொரியா; `balancing pole’-யைப் புரிந்து கொண்டது ஹூண்டாய்!

(வடிவமைப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism