Published:Updated:

ரத்தன் டாடாவுக்கும் காதல் தோல்வி உண்டு பாஸ்... இந்திய ஆட்டோமொபைல் துறையின் பிதாமகன் உருவான கதை!

 Ratan Tata
News
Ratan Tata

நீங்கள் ஏதோ ஒரு மல்ட்டி ப்ளக்ஸ் காம்ப்ளக்ஸுக்குப் போய் ஏதாவது ஒரு பொருளை வாங்கினால்… அது டாடா குழுமத்தின் தயாரிப்பாக இருக்கலாம். அதற்குக் காரணம் ரத்தன் டாடா!

90’ஸ் ஸ்டைலில் ஒருவரைக் கலாய்ப்பதற்கென்று சில விதிமுறைகள் உண்டு. ஒருவர் தன்னை அழகாக இருப்பதாக நினைத்துக் கொண்டால், ‘பெரிய கமல்ஹாசன் இவரு’ என்று கலாய்ப்பார்கள். மேசையில் தாளம் போடுபவரை ‘பெரிய இசைஞானி’ என்று கலாய்ப்போம். அதேபோல் ‘கன்னாபின்னா’ என்று செலவு செய்யும் ஒருவரைக் கலாய்க்க வேண்டுமென்றால்… ‘பெரிய டாடா பிர்லா இவரு’ என்பார்கள்.

நிஜம்தான்; 80ஸ் கிட்ஸுக்கு டாடா-பிர்லா என்றால்தான் தெரியும். அதில் பிர்லா குடும்பத்தை விடுத்து டாடா என்றால் ரத்தன் டாடா. மில்லினியல் மக்களுக்கு இவரை இப்படித்தான் தெரியும். 1937 டிசம்பர் 28–ல் பிறந்த டாடாவுக்கு இன்று 84–வது பிறந்த நாள்.

 Ratan Tata
Ratan Tata

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் உப்பு, டீ, இரும்பு, தாது, தங்க நகைகள், கைக்கடிகாரம், கார், விமானம் என எல்லாவற்றிலும் டாடா ஹாய் சொல்வார். இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட தனது தொழிலை உலகளவில் பேச வைத்தவர் ரத்தன் டாடா.

டாடா குழுத்தின் நிறுவனர் Jamsetji Tata. அதன் பிறகு JRD Tata - அப்புறம் ரத்தன் டாடா. அதாவது, டாடா குழுமங்களின் மூன்றாவது தலைவர் ரத்தன் டாடா. சூரத் நகரில் நாவல் – டாடா சுனு தம்பதியருக்குப் பிறந்த ரத்தன் டாடா, ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் மேற்படிப்புப் படித்தவர். பிறகு ஐபிஎம் நிறுவனத்தில் பணி.

‘‘ஏழையாப் பொறக்குறது நம்ம தப்பு இல்லை; ஆனா ஏழையா செத்தா அது நம்ம தப்பு’’ என்று ஒரு திரைப்படத்தில் வசனம் வரும்! ரத்தன் டாடா ஏழையாகப் பிறக்கவில்லை; ‘பார்ன் வித் கோல்டு ஸ்பூன்’ என்றாலும், அந்தப் பணத்தைத் தக்க வைத்து இரட்டிப்பாக்குவதிலும் பெரிய மேதாவித்தனம் வேண்டும். அப்படிப்பட்ட மேதாவிதான் ரத்தன் டாடா.

டாடா நானோவுடன்...
டாடா நானோவுடன்...

ஹார்வர்டில் இருந்து திரும்ப இந்தியாவுக்குத் திரும்பிய அவர், தனது குடும்ப வணிகத்தில் இறங்கினார். கடும் உழைப்பு. 31 ஆண்டுகள் கடுமையான உழைப்புக்குப் பிறகு, 1991–ல் டாடா குழுத்தின் 3-வது தலைவரானார். ரத்தன் டாடா தலைவரான பிறகு டாடா குழுமம் இன்னும் வெறித்தனமான வளர்ச்சியைக் கண்டது என்பது நிஜம். ஐடி துறையில் TCS நிறுவனத்தின் ஆண்டு வருமானம் மட்டும் எவ்வளவு தெரியுமா?! ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 7,465 கோடி ரூபாய். TCS நிறுவனம் மட்டும் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு அளித்துக் கொண்டிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
இது தவிர டாடா நிறுவனம் தொடாத துறைகளே இல்லை. இரும்பு, கெமிக்கல், உணவு என்று எதையுமே விடவில்லை. அதை அப்படியே கீழே விழாமல் காப்பாற்றி வருபவர் ரத்தன் டாடா. நீங்கள் ஏதோ ஒரு மல்ட்டி ப்ளக்ஸ் காம்ப்ளக்ஸுக்குப் போய் ஏதாவது ஒரு பொருளை வாங்கினால்… அது டாடா குழுமத்தின் தயாரிப்பாக இருக்கலாம்.

எல்லாவற்றையும் விட டாடா கார்கள், மிகவும் பிரசித்தம். 1 லட்ச ரூபாய்க்கு ஒரு 200 சிசி பைக்கே வாங்க முடியாத சூழலில், 1 லட்ச ரூபாய்க்கு ஒரு 625 சிசி கார் கொண்டு வந்ததெல்லாம் வரலாற்றையும், இந்திய ஆட்டோமொபைல் துறையையும் மாற்றிய நிகழ்வு! ஃபெராரி, பென்ஸ், ஸ்கைலர்க், ஜாகுவார், ஃப்ரீலேண்டர் என்று வெரைட்டியாக கார்கள் வைத்திருந்தாலும் – உள்ளூரில் நடக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கு, தனது தயாரிப்பான நானோ அல்லது நெக்ஸானில்தான் பயணிப்பாராம் ரத்தன் டாடா.

ஜம்ஷெட்டி டாடா சிலைக்கு முன்பு JRD டாடாவுடன் ரத்தன் டாடா...
ஜம்ஷெட்டி டாடா சிலைக்கு முன்பு JRD டாடாவுடன் ரத்தன் டாடா...

அதைத் தவிர, குளோபல் என்கேப் எனும் க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி, இப்போது இந்தியாவின் பாதுகாப்பு மிக்க கார்களாக வலம் வருகின்றன டாடா கார்கள். இந்தியாவில் குறைந்த விலையில் பாதுகாப்பான கார்கள் வாங்க வேண்டுமென்றால், டாடா கார்களைத் தவிர உங்களுக்கு வேறு ஆப்ஷன் கிடைக்காது. ஃபோக்ஸ்வான், ஸ்கோடா, ரெனோ போன்ற பெரிய ஜெர்மன், இத்தாலியத் தயாரிப்புகளுக்கு இணையாக டாடா கார்கள் அசால்ட்டாக 5 ஸ்டார் ரேட்டிங் வாங்குவது ஆட்டோமொபைல் துறையில் வாவ் விஷயம்தான். இது தவிர ஜாகுவார், லேண்ட்ரோவர் போன்ற கார் ஜாம்பவான் நிறுவனங்களும் இப்போது டாடா வசம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுவாக பிசினஸ் புள்ளிகள் ஒரு மாதிரி மூடி டைப்பாக இருப்பார்கள்; சிரிக்க மாட்டார்கள்; அழ மாட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ரத்தன் டாடாவும் தனது இளமையில் காதலித்துத் தோல்வி கண்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ‘‘அடிக்கடி அவளின் நினைவுகள் வந்துபோகும்’’ என்று தனது காதலியைப் பற்றி அவரே ஒரு விழாவில் சிரித்தபடி பேசியிருக்கிறார். ‘‘என் தாய் – தந்தையரின் விவாகரத்து என்னை இடியச் செய்தது’’ என்று கண்ணீர் கலங்கவும் செய்திருக்கிறார்.

பென்ஸில் ரத்தன் டாடா
பென்ஸில் ரத்தன் டாடா

டாடாவுக்கு இளகிய மனசு மட்டும் இல்லை; தேசப்பற்றும் கோபமும் அதிகமாக இருக்கும். ஒரு முறை பாகிஸ்தான் அரசு, டாடாவின் சுமோ கார்களுக்குப் பெரிய ஆர்டர் ஒன்றை ஆஃபராகக் கொடுக்க, ‘‘எனது தயாரிப்பு ஒன்றுகூட பாகிஸ்தானில் விற்கக் கூடாது’’ என்று பல கோடி ரூபாய் ஆர்டரை நிராகரித்தவர் டாடா.

உலகின் பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்திருந்தாலும், கர்வம் என்பது துளிகூட இல்லாதவர்கள் டாடா தலைவர்கள் என்பதற்கு ஒரு குட்டிக் கதை உதாரணம். இந்தக் குட்டிக் கதையைச் சொன்னவர், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.

‘‘அப்போது நான் பீக்கில் இருந்த நேரம். விமானப் பயணம் ஒன்றில் எனது பக்கத்தில் மிகவும் பவ்யமாக ஒருவர் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். பார்ப்பதற்கு ஏதோ மிடில் க்ளாஸ் மாதிரி தெரிந்தார். ஆனால், நன்கு படித்தவர் போலவும் இருந்தார். எல்லோரும் நான் பாலிவுட் ஸ்டார் என்று தெரிந்து, என்னிடம் ஆட்டோகிராஃப் வாங்கும்போது, அவர் அதை எதையுமே கண்டுகொள்ளாமல் இருந்தது எனக்கு ஒரு மாதிரி இருந்தது. டீ குடிக்கும்போது அவரைப் பார்த்துச் சிரித்தேன். பதிலுக்கு ‘ஹலோ’ சொன்ன அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

‘‘நீங்கள் சினிமா பார்ப்பீர்களா...’’

‘‘இல்லை; பல ஆண்டுகள் ஆகிவிட்டன!’’

‘‘பை தி வே… மை நேம் இஸ் அமிதாப் பச்சன். பாலிவுட் ஸ்டார்’’

‘‘வாவ்... கிரேட். நைஸ் டு மீட் யூ. I am JRD டாடா!’’ என்றார்.

JRD டாடா, அமிதாப் பச்சன்
JRD டாடா, அமிதாப் பச்சன்

அப்படியே ஆடிப் போய்விட்டேன். அதுவரை நான்தான் பெரிய ஆள் என்றிருந்தேன். இப்படி எளிமையாக இருப்பதால்தான் அவர் எல்லாவற்றையும்விடப் பெரியவர் என்று நினைத்துக் கொண்டேன்!’’ என்று அமிதாப் பச்சன் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

அப்படிப்பட்ட JRD டாடாவின் சீடர்தான் ரத்தன் டாடா. பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் எளிமையாகட்டும், தொழிலாளர்களிடம் பழகும் கனிவாகட்டும் - குருவுக்குக் கொஞ்சமும் சளைக்காமல் இருப்பவர்தான் ரத்தன் டாடா என்பது பல இடங்களில் நிரூபணமாகி இருக்கிறது.

அதேபோல், விமர்சனங்களையும் அதிகம் சந்தித்தவர் ரத்தன் டாடா. கடந்த ஆண்டு சைரஸ் மிஸ்ட்ரி என்பவரை டாடா சன்ஸ் குழுமத்தில் இருந்து நீக்கியபோதும், தானே தொடங்கிய ஏர் இந்தியா விமான நிறுவனத்தை மீண்டும் பல கோடிகளுக்கு வாங்கியபோதும் பல விமர்சனங்களைச் சந்தித்தார் ரத்தன் டாடா.
அமிதாப்புடன் ரத்தன் டாடா
அமிதாப்புடன் ரத்தன் டாடா

ராஜ்யசபா எம்பியும், பா.ஜ.க தலைவருமான சுப்ரமணியன் சுவாமி இப்படிச் சொல்லியிருந்தார். ‘‘ரத்தன் டாடா நேர்மையானவர் இல்லை; அவர் ஒரு ஊழல் பேர்வழி. டாடா நிறுவனம் அழுகிப் போன நிறுவனம்!’’ என்று கடுமையாகத் தாக்கிய போதும் அமைதியாக இருந்தவர் ரத்தன் டாடா.

‘‘உங்கள் மீது எறியப்படும் கற்களைக் கொண்டு கட்டடம் எழுப்பப் பழகுங்கள்!’’ என்று சொன்னவர் ரத்தன் டாடா. ஆனால், அவர் இதையெல்லாம் வைரக் கற்களாக மாற்றிவிடுவார் என்பது பல பேருக்குத் தெரியவில்லை என்பதே உண்மை!

ஹேப்பி பர்த்டே டாடா!