Published:Updated:

டெஸ்ட்டிங்கில் ரெனோ க்விட் பேஸ்லிஃப்ட்... என்ன ஸ்பெஷல்?!

BS-6 மற்றும் Pedestrian Safety விதிகளுக்கேற்ப தயாரிக்கப்பட்டிருக்கும் ஆல்ட்டோ விற்பனைக்கு வந்துவிட்ட சூழலில், க்விட்டின் பேஸ்லிஃப்ட் மாடல் தற்போது டெஸ்ட்டிங்கில் இருப்பது தெரியவந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

க்விட்... மாருதி சுஸூகி ஆல்ட்டோ மற்றும் ஹூண்டாய் இயான் ஆகிய கார்களுக்குப் போட்டியாக வெளிவந்த இந்த பட்ஜெட் ஹேட்ச்பேக், எஸ்யூவி/க்ராஸ் ஓவர் டிசைனில், கடந்த 2015-ம் ஆண்டு கலக்கலாகக் களமிறங்கியது தெரிந்ததே. ஃபுல் டிஜிட்டல் மீட்டர், ரிவர்ஸ் கேமரா - ஆப்பிள் கார் ப்ளே/ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்ட்டிவிட்டி உடனான டச் ஸ்க்ரீன் சிஸ்டம், ஒன் டச் லேன் சேஞ்ச் இண்டிகேட்டர்கள் மற்றும் வேகத்தை அடிப்படையாகக் கொண்ட வால்யூம் கன்ட்ரோல், ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 12V பாயின்ட், 4 வருடம்/1 லட்சம் கி.மீ வாரன்ட்டி மற்றும் இலவச RSA, ELR சீட் பெல்ட்டுகள் போன்ற சிறப்பம்சங்கள் இருந்தாலும், மேக் இன் இந்தியா கோட்பாடுகளின்படி, 98 சதவிகிதம் உள்நாட்டு உதிரிப்பாகங்களுடன் க்விட் தயாரிக்கப்பட்டதால், அதன் விலை மற்றும் பராமரிப்புச் செலவுகள் போட்டியாளர்களைவிட குறைவாக இருந்தன!

Kwid
Kwid
Renault India

இடையே 1.0 லிட்டர் SCe இன்ஜின், Creep வசதியுடன்கூடிய AMT கியர்பாக்ஸ், க்ளைம்பர் வேரியன்ட், பல ஸ்பெஷல் எடிஷன்கள் என மாற்றம் முன்னேற்றங்களை ரெனோ இந்த பட்ஜெட் காரில் அவ்வப்போது செய்துகொண்டே இருந்ததால், க்விட்டின் விற்பனை தேக்கமடையாமல் இருந்தது. இயானின் விற்பனை மற்றும் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகமான க்விட், ஏப்ரல் மற்றும் ஜுனில் அமலுக்கு வந்த புதிய பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டிருந்ததால், அதுதான் இந்த காரின் மாடர்ன் மற்றும் பாதுகாப்பான வெர்ஷனாகப் பெயர் பெற்றிருக்கிறது. அடுத்த ஆண்டில் வரவிருக்கும் BS-6 மற்றும் Pedestrian Safety விதிகளுக்கேற்ப தயாரிக்கப்பட்டிருக்கும் ஆல்ட்டோ விற்பனைக்கு வந்துவிட்ட சூழலில், க்விட்டின் பேஸ்லிஃப்ட் மாடல் தற்போது டெஸ்ட்டிங்கில் இருப்பது தெரியவந்துள்ளது. செங்கல்பட்டில் இதனைப் படம்பிடித்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான ஜெகதிஷ் பிரபாகரன்.

Kwid Facelift
Kwid Facelift
Reader

ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, 2019 ஷாங்காய் மோட்டார் ஷோவில் ரெனோ காட்சிபடுத்திய K-ZE எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் போல கார் இருப்பது தெளிவாகிறது. இதில் ஹேரியர் - வென்யூ - ஹெக்டர் ஆகிய லேட்டஸ்ட் கார்களில் இருப்பதுபோலவே LED DRL கிரில்லுக்கு அருகேயும், பம்பரின் கீழ்ப்பகுதியில் புரொஜெக்டர் ஹெட்லைட்டும் இடம்பெற்றுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்பக்க-பின்பக்க பம்பர்கள், வீல்களில் பொருத்தப்பட்டுள்ள Hub Caps, டெயில் லைட்ஸ் ஆகியவை புதிது; டயர்கள் கொஞ்சம் பெரிதாக இருப்பதுபோல தெரிவதால், ஒருவேளை இதில் 14 இன்ச் வீல்கள் இருக்கலாம்! விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கும் க்ராஷ் டெஸ்ட் மற்றும் Pedestrian Safety விதிகளின்படி, காரின் கட்டுமானம் மேம்படுத்தப்பட்டிருக்கலாம்.

Kwid Facelift
Kwid Facelift
Reader
Kwid Facelift
Kwid Facelift
Reader

இதில் Defogger மற்றும் வைப்பர் உடனான பின்பக்க விண்ட் ஷீல்டு ஆகியவை இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால், ஸ்பை படங்களில் காணப்படும் காரில் அது மிஸ்ஸிங்; டேஷ்போர்டு அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை எனினும், கேபின் அப்ஹோல்சரியில் மாற்றமிருக்கலாம். K-ZE/ட்ரைபர் ஆகிய கார்களில் இருப்பதுபோன்ற டிஜிட்டல் மீட்டர், எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மிரர்கள், 8 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், புதிய ஸ்டீயரிங் வீல், பின்பக்க பவர் விண்டோ ஆகியவை இருப்பதற்கான சாத்தியம் இருக்கிறது. 3 சிலிண்டர் இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணியில் எந்த மாற்றமும் இருக்காது. என்றாலும் அவை BS-6 விதிகளின்படி இருக்குமா என்பது போகப்போகத் தெரியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு