Published:Updated:

நாளை முதல் தமிழ்நாட்டில் விற்பனைக்கு வருகிறது இந்தியாவின் முதல் இன்டர்நெட் பைக்... ரிவோல்ட்!

ரிவோல்ட் RV400
ரிவோல்ட் RV400

மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் ஒருவரான ராகுல் ஷர்மாவின் நிறுவனம்தான் இந்த ரிவோல்ட்.

இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் எலெக்ட்ரிக் பைக் ரிவோல்ட் RV400. செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்குவதாகச் சொல்லப்படும் இந்த பைக் பிரபல மொபைல் ஃபோன் நிறுவனமான மைக்ரேமேக்ஸின் தயாரிப்பு. 2019-ம் ஆண்டு இந்தியாவில், டெல்லி, புனே மற்றும் மும்பையில் ஓடிக்கொண்டிருக்கும் ரிவோல்ட் இப்போது சென்னைக்கு வருகிறது. அகமதாபாத், ஹைதராபாத்தில் கடை திறந்த கையோடு அண்ணாநகர் மற்றும் வேளச்சேரியில் நாளை புதிய கடைகளைத் திறக்கவுள்ளார்கள்.

ரிவோல்ட் RV400
ரிவோல்ட் RV400

முதல் பைக்காக, RV400 எனும் மாடலை விற்பனைக்குக் கொண்டு வருகிறார்கள். ரிவோல்ட் மற்ற எலெக்ட்ரிக் பைக்குகளைப்போல இல்லாமல் இதை ஒரு வாடகை பைக் போல மாதக் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தவேண்டும் என்பது இந்தியாவில் ஒரு தனித்துவமான பிசினஸ் கான்செப்ட்.

LED லைட்ஸ், 17 இன்ச் வீல், கீலெஸ் ஸ்டார்ட், எக்கோ/சிட்டி/ஸ்போர்ட் என மூன்று டிரைவிங் மோடுகள், 3 kW மோட்டார், இரண்டு டிஸ்க் பிரேக், 3.4kWh லித்தியம் அயான் பேட்டரி மற்றும் 156 கி.மீ ரேஞ்ச் கொண்ட மாடல் இது. எடை வெறும் 109 கிலோதான்.

ரிவோல்ட் RV400
ரிவோல்ட் RV400

இன்டர்நெட் கார் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த ரிவோல்ட் 4ஜி வசதி கொண்ட இன்டர்நெட் பைக். ரிவோல்ட் எனும் ஆப்பை இன்ஸ்டால் செய்து லாகின் செய்தால் போதும் பைக்கின் மொத்த கன்ட்ரோலும் கைப்பேசியில். அதிகபட்சம் 85 கி.மீ டாப் ஸ்பீடு செல்லக்கூடியது இந்த பைக். நடுவழியில் எங்காவது பேட்டரி தீர்ந்துவிட்டால் மொபைலை எடுத்து பேட்டரி ஆர்டர் செய்துகொள்ளலாம். வந்து மாற்றிக் கொடுத்து விடுவார்கள். இல்லையென்றால் பேட்டரியை நாமே கழற்றி சார்ஜ் போட்டுவிடலாம்.

Revolt RV400
Revolt RV400

பல வசதிகளுடன், புதிய பிசினஸ் யுக்தியுடன் களமிறங்கும் ரிவோல்ட் நிறுவனம் இப்போதைக்குச் சென்னையில் தனது கிளையை ஆரம்பிக்கிறது. விரைவில் கோவை, மதுரை போன்ற இடங்களிலும் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்கள். ரிவோல்ட் பைக்கை ஓட்ட விரும்புபவர்கள் நாளை முதல் சென்னையில் டெஸ்ட் ரைடு செய்துகொள்ளலாம்.

அடுத்த கட்டுரைக்கு