Published:Updated:

#REMeteor350 இனி தண்டர்பேர்டு இல்லை... 2 லட்சம் ரூபாய்க்கு மீட்டியார் பைக்கை வாங்கலாமா?!

Royal Enfield Meteor 350
News
Royal Enfield Meteor 350

ராயல் என்ஃபீல்டின் புது பைக்கான மீட்டியார் எப்படியிருக்கிறது... இதன் ப்ளஸ் மைனஸ் என்ன?!

தண்டர்பேர்டு பிரியர்களுக்கு ஒரு சோகமான விஷயம்... இனிமேல் தண்டர்பேர்டு கிடையாது. அதற்கு மாற்றாகத்தான் மீட்டியார் எனும் 350 சிசி பைக்கைக் களம் இறக்கி இருக்கிறது ராயல் என்ஃபீல்டு. புல்லட் பிரியர்களைக் கவரும் விதமாக அதே ‘டப் டுப்’ பீட்டுடன், தண்டர்பேர்டு டிசைனில் இருந்து ரொம்பவும் விலகிப் போகாமல் இருக்கும் மீட்டியார்தான் இந்த ஆண்டின் சிறந்த பைக்குக்கான முக்கியமான போட்டியாளர். 350 சிசியில் வந்திருக்கும் மீட்டியாரை, இரண்டு வாரங்கள் தொடர்ந்து ஓட்டிப்பார்த்தோம். Meteor 350 பைக்கை வாங்கலாமா, ப்ளஸ் மைனஸ் என்ன?
மீட்டியார் 350 சிசி
மீட்டியார் 350 சிசி

ப்ளஸ்

 • மீட்டியாரின் முதல் ப்ளஸ் இதன் டிசைன்தான். இது ஒரு க்ரூஸர் என்பதால், நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்றபடி இதன் டிரைவிங் பொசிஷன், உயரம் குறைவானவர்களும் ஓட்டும்படி பழைய தண்டர்பேர்டில் இருந்து குறைக்கப்பட்டிருக்கிறது (765மிமீ).

 • காற்று முகத்தில் அறையாமல் தடுக்க விண்ட்ஷீல்டு, பின் பக்கம் அமர்பவர்களுக்கு பேக் ரெஸ்ட் என பக்கா க்ரூஸர் பைக்காக இருப்பது இதன் முதல் ப்ளஸ். ஆனால், இவை எல்லாம் டாப் எண்டான SuperNova வேரியன்ட்டில் மட்டும்தான்.

 • பழைய தண்டர்பேர்டில் ஸ்போக் வீல்கள்தான் இருந்தன. ஆனால், மீட்டியாரில் 10 ஸ்போக் அலாய் வீல்கள் இருப்பது பைக்கின் ஸ்டைலைக் கூட்டுகிறது. ட்யூப்லெஸ் டயர்கள் இருப்பதால், பஞ்சர் ஆனாலும் தள்ளிக்கொண்ட போக வேண்டிய அவசியம் இதில் இல்லை.

 • தண்டர்பேர்டை(197)விட 6 கிலோ எடை குறைந்திருப்பதால், (191 கிலோ), பழசைவிட ஹேண்ட்லிங் கொஞ்சம் முன்னேற்றம் கண்டிருக்கிறது. இதன் டயர்களின் செக்ஷனும் அதிகம். (மு/பி): 100/90–19/140/70–17). அதேபோல், இரண்டு பக்கமும் டிஸ்க் (300/270மிமீ), டூயல் சேனல் ஏபிஎஸ் இருப்பதும் பெரிய ப்ளஸ்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விண்ட் ஷீல்டு
விண்ட் ஷீல்டு
191 கிலோ
191 கிலோ
 • தண்டர்பேர்டில் ஸ்விட்ச்களின் தரம் பற்றி ஒரு குறை இருந்து வந்தது. மீட்டியாரில் இப்போது ஒட்டுமொத்தத் தரம் கொஞ்சம் மெருகேறி இருக்கிறது. கண்ணாடிகள், பெட்ரோல் டேங்க் என அங்கங்கே இருக்கும் க்ரோம் ஃபினிஷே இதற்கு உதாரணம். முக்கியமாக, கார்களில் இருப்பதுபோல், அந்த ரோட்டரி கியர் நாப் பயன்படுத்த வசதியாக இருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
 • வசதிகளிலும் ராயல் என்ஃபீல்டு அடுத்த லெவலுக்கு வந்து விட்டது. மீட்டியார் ஒரு கனெக்டட் பைக். அதாவது, கார்கள்போல் மொபைல் ஆப் மூலம் மீட்டியாரை கனெக்ட் செய்து கொள்ளலாம். இரட்டை டயல்களில் இரட்டை ட்ரிப் மீட்டர், ஃப்யூல் மீட்டர், கியர் இண்டிகேட்டர் என எல்லாமே ப்ராக்டிக்கலாக இருக்கிறது. வலது பக்க டயலில் இன்பில்ட் நேவிகேஷன் அருமை. போகும் இடத்தை கூகுள் மேப்பில் பார்த்துக் கொண்டே ஓட்டலாம். மேலும் இதில் மொபைல் நோட்டிஃபிகேஷன்கள் வராமல் இருப்பது ப்ளஸ். ரைடருக்கு கவனச் சிதறல் ஏற்படாது.

 • புல்லட்கள் என்றால், அதிர்வுகள்தானே படுத்தி எடுக்கும். கை, கால்களில் தட தடவென உதறும். மீட்டியாருக்கு இதற்குத்தான் பெரிய லைக் போட வேண்டும். பழைய புல்லட்களில் புஷ் ராடு வால்வ் சிஸ்டம் இருக்கும். இதில் SOHC கேம்ஷாஃப்ட்டில் 2 வால்வ் உண்டு. போர் மற்றும் ஸ்ட்ரோக் அளவுகளில் பெரிய மாற்றம் ஏற்படுத்தி இருப்பதால், மீட்டியாரின் இன்ஜின், மெல்லிசை மீட்டுவது போல் இருக்கிறது. 100 கிமீ-க்கு மேல் போனால்கூட, அதிர்வுகள் அவ்வளவாகத் தெரியவில்லை என்பதுதான் பெரிய ப்ளஸ்.

கனெக்டட் பைக்
கனெக்டட் பைக்
சீட் உயரம் 765 மிமீ
சீட் உயரம் 765 மிமீ
 • நமக்குத் தெரிந்து ராயல் எஃன்பீல்டு தவிர வேறெந்த ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இப்படி ஒரு வசதி செய்திருக்குமா என்று தெரியவில்லை. பைக் கஸ்டமைசேஷன்தான் அது. அதாவது, நமக்குப் பிடித்த கலர்களில், டூயல் டோன் – ட்ரிப்பிள் டோன், விண்ட் ஷீல்டு, அலாய் ஃபுட்பெக், டூர் அடிக்க ஸேடில் பேக், பேக் ரெஸ்ட் என நமக்குப் பிடித்த ஆக்சஸரீஸ்களை ஃபிட் செய்து நீங்களே உங்கள் பைக்கை டிசைன் செய்து கொள்ளலாம். இப்படி மொத்தம் 5 லட்சம் காம்பினேஷன்களைத் தருகிறது RE. மொபைல் ஆப்பில் இதை நீங்கள் செலெக்ட் செய்து பேமென்ட் செலுத்திவிட்டால், இரண்டே நாட்களில் RE தொழிற்சாலையில் நீங்கள் விரும்பும் கலரில் உங்கள் பைக் ரெடி ஆகிக் கொண்டிருக்கும்.

Rotary Switch
Rotary Switch

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மைனஸ்

 • புரொஜெக்டர் ஹெட்லைட்டை காலி செய்துவிட்டது ராயல் என்ஃபீல்டு. சாதாரண ஹாலோஜன் பல்புகள்தான் மீட்டியாரில். அதற்குப் பதிலாக வட்ட வடிவமாக LED DRL மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்.

 • 20 லிட்டராக இருந்த தண்டர்பேர்டின் பெட்ரோல் டேங்க்கை, மீட்டியாரில் 15 லிட்டராகக் குறைத்திருக்கிறார்கள். லாங் ரைடின்போது, அடிக்கடி பெட்ரோல் பங்குக்கு விசிட் அடிக்கவேண்டியிருக்கும்.

 • இன்ஜினில் அதிர்வுகள் இல்லையென்றாலும், புல்லட் பிரியர்களுக்கு மீட்டியாரின் பெர்ஃபாமன்ஸ் எந்தளவு பிடிக்கும் என்று தெரியவில்லை. கொஞ்சம் தட்டையாகத்தான் இருக்கிறது. 0–வில் இருந்து 100 கிமீ வேகத்தை, மீட்டியார் பொறுமையாக 17.8 விநாடிகளில்தான் கடக்கிறது. அதேபோல், டாப் ஸ்பீடும் 120 கிமீதான். அதற்கு மேல் பறக்க முடியவில்லை.

LED DRL
LED DRL
கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மிமீ
கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மிமீ
 • 350 சிசி பைக்குகளை ஒப்பிடுகையில், இதன் பவரும் (20.2bhp) குறைவுதான். 250 சிசிகளான டொமினார், ஜிக்ஸர் போன்றவற்றிலேயே 26.5bhp –க்கு மேல்தான் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். Fuel Injection இன்ஜின்தான் என்றாலும், ஆயில்கூல்டு இருந்திருக்கலாம். இதில் ஏர்கூல்டுதான்.

 • இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் வெறும் 170 மிமீதான். ஹிமாயலன், இம்பல்ஸ் போன்றவற்றை ஒப்பிடும்போது, இது முழுமையான அட்வென்ச்சரோ, ஆஃப்ரோடரோ இல்லை. வெறும் க்ரூஸர்தான்.

 • க்ரூஸிங் பைக் பிரியர்கள் டேக்கோ மீட்டரை மிகவும் மிஸ் செய்வார்கள். அதாவது, எத்தனை ஆர்பிஎம்–ல் பைக் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் டேக்கோ மீட்டர், மீட்டியாரில் இல்லை.

 • பின் சீட்டுக்கு பேக் ரெஸ்ட் இருந்தாலும், இது கொஞ்சம் குறுகலாகவும், தட்டையாகவும் இருப்பதால், நீண்ட தூரப் பயணங்களுக்கு பில்லியன் ரைடர்கள் பாவம். அதிலும் உயரமானவர்கள் என்றால் நிலைமை கொஞ்சம் சிரமம் தான்.

 • முக்கியமாக அட்வென்ச்சர் பிரியர்கள் கேஸ் சஸ்பென்ஷனை எதிர்பார்த்திருப்பார்கள். மீட்டியாரில் பின்பக்கம் வழக்கம்போல் டபுள் ஷாக் ஸ்ப்ரிங் அப்ஸார்பரைக் கொடுத்துவிட்டார்கள்.

பில்லியனர் சீட்டு
பில்லியனர் சீட்டு
5 ஸ்பீடு கியர்பாக்ஸ்
5 ஸ்பீடு கியர்பாக்ஸ்
 • 350 சிசி மீட்டியாரின் விலை அதிகம்தான். எல்லா பைக்குகளுமே BS-6–க்கு அப்டேட் ஆகும்போது, இது பெரிய குறை இல்லை. அதற்காகத்தான், Fireball, Stellar, SuperNova என 3 வேரியன்ட்களில் வருகிறது மீட்டியார். டாப் எண்டான SuperNova பைக்கின் சென்னை ஆன்ரோடு விலை 2.14 லட்சம். இது க்ளாஸிக்கைவிட சில ஆயிரங்கள் அதிகம்தான். இதற்கு ஓர் ஐடியா சொல்லவா? 1.96 லட்சத்துக்குள் Fireball மாடலை வாங்கி, சூப்பர்நோவா போல் மாடிஃபை செய்து கொள்ளுங்களேன்!