Published:Updated:

டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களின் நஷ்டத்தைக் குறைக்க புது டெலிமேட்டிக்ஸ் கருவி!

டிரான்ஸ்போர்ட்
டிரான்ஸ்போர்ட்

ஷெல் ஆயில் நிறுவனம், டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களுக்காகப் புதிய டெலிமேட்டிக்ஸ் கருவி மற்றும் அதைச் சார்ந்த சேவையை Fleet Solutions என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

உலக அளவில் மிகப்பெரிய ஆயில் நிறுவனங்களுள் ஒன்று ஷெல். 10 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் இயங்கிவரும் இந்த நிறுவனம், தற்போது டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களுக்கு ப்ளீட் மேனேஜ்மென்ட் (Fleet managment) புதிய கருவி மற்றும் சேவையை உருவாக்கியுள்ளது. 

ஷெல் ப்ரீப்பெய்டு கார்டு
ஷெல் ப்ரீப்பெய்டு கார்டு

ஏற்கெனவே, ஐரோப்பிய மற்றும் துபாய் போன்ற நாடுகளில் இயங்கிவரும் டெலிமேட்டிக்ஸ் சேவையின் நீட்சியே இந்தப் புதிய ஃபிளீட் சொல்யூஷன்ஸ். நேற்று, இதை அறிமுகப்படுத்தியபோது, ஃபிளீட் சொல்யூஷனுக்கான ஆசிய இயக்குநர் ஸெயின் ஹேக், ``இந்தத் தொழில்நுட்பம், ஐரோப்பிய நாடுகளில் 10 முதல் 15 சதவிகித அளவுக்கு டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களின் லாபத்தை உயர்த்தியிருக்கிறது" என்றார். 

இந்தச் சேவையைப் பெறுபவர்களுக்கு, ஷெல் நிறுவனத்தின் ப்ரீப்பெய்டு கார்டு மற்றும் டெலிமேட்டிக்ஸ் கருவி கொடுக்கப்படுகிறது. ஒரு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் எத்தனை வாகனங்கள் இருக்கின்றனவோ, அத்தனை கார்டு மற்றும் கருவியைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த ப்ரீப்பெய்டு கார்டு, ஷெல் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்குகளில் மட்டுமே செல்லுபடியாகும். இதில், முன்பே தேவையான பணத்தை லோடு செய்து வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பிக்கொள்ளலாம். இந்த கார்டின் முக்கியமான நோக்கம், டீசல் களவுபோவதைத் தடுப்பதே.

ஸெயின் ஹக் (Zain Hak), தீப்தி பேல்(Deepti Behl), சஞ்சய் வர்கீ (Sanjay Varkey), பர்மிந்தர் கோலி (Parminder Kohli)
ஸெயின் ஹக் (Zain Hak), தீப்தி பேல்(Deepti Behl), சஞ்சய் வர்கீ (Sanjay Varkey), பர்மிந்தர் கோலி (Parminder Kohli)
Shell Leaders

டெலிமேட்டிக்ஸ் கருவி, வாகனத்தை எப்போதும் கண்காணித்துக்கொண்டே இருக்கும். இது, டீசல் டேங்க்கிற்குக் கீழே பொருத்தப்படுவதால், எவ்வளவு டீசல் நிரப்புகிறோம், எரிபொருள் எப்படி, எங்கே அதிகம் செலவாகிறது போன்ற தகவல்களை இந்த டெலிமேட்டிக்ஸ் கொடுக்கும். அதுமட்டுமல்ல, வாகனம் இருக்கும் இடம், ஓட்டுநர் எப்படி வாகனத்தை ஓட்டுகிறார் என்பதுபோன்ற தகவல்களையும் கொடுக்கும். எல்லாத் தகவல்களையும் நாம் கிளவுட் தொழில்நுட்பம் மூலமாக எங்கிருந்து வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம்.

டிரைவிங் மட்டுமல்ல, வாகனத்தின் சென்சார்கள், சர்வீஸ், பிஎஸ்-6 வாகனங்களில் ஆட்-ப்ளூ செயல்பாடு போன்றவற்றையும் இது கண்காணிக்கிறது. ஷெல் கார்டில் ஒரு இடத்தில் பெட்ரோல் நிரப்புகிறார்கள், வாகனம் வேறோர் இடத்தில் இருக்கிறது என்றால், பணம் எடுப்பதற்கு முன்பு அலர்ட் அனுப்பப்படும். அதைவைத்து, உங்கள் கார்டு அல்லது எரிபொருள் பணம் களவாடப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். அதுமட்டுமல்ல, தொலைதூரப் பயணம் செல்லும் டிரைவர்களுக்குப் பணம் திருட்டு என்பது பெரிய பிரச்னையாக இருக்கும். இப்படி டிஜிட்டல் முறையில் பணத்தைக் கொண்டுபோகும்போது, திருட்டு குறையவும் வாய்ப்பு உள்ளது.

ஒரு பயணத்தைத் திட்டமிடும்போதே, எங்கெங்கு எரிபொருள் நிலையங்கள் இருக்கின்றன, எப்போது எரிபொருள் நிரப்ப வேண்டும், டிரைவர் வேகமாகச் செல்கிறாரா பொறுமையாகச் செல்கிறாரா என்பதையெல்லாம் இதில் பார்த்துக்கொள்ளலாம். ஓட்டுநர்களின் வேலையைச் சுலபமாக்க, அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை இந்தத் தரவின் அடிப்படையில் கொடுக்க முடியும்.

ஷெல் எரிபொருள் நிலையம்
ஷெல் எரிபொருள் நிலையம்

இந்த சர்வீஸ் ஒரு பக்கம் இருக்க, ஷெல் நிறுவனம் இந்தியாவில் டைனாஃபிளெக்ஸ் (Dynaflex) என்ற தொழில்நுட்பம் கொண்ட டீசலை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த BS-6 டீசல், பழைய BS-3, BS-4 வாகனங்களிலும்கூட பயன்படுத்தலாம். "இரண்டு விதமான அடிட்டிவ் இருப்பதால், இது இன்ஜினில் கார்பன் அசுத்தங்களைத் தங்கவிடாமல் இன்ஜினைச் சுத்திகரிக்கிறது.

சஞ்சய் வர்கீ, பர்மிந்தர் கோலி, ஸெயின் ஹேக்
சஞ்சய் வர்கீ, பர்மிந்தர் கோலி, ஸெயின் ஹேக்
Shell Leaders

அதுமட்டுமல்ல, இது பழைய இன்ஜின்களுக்குத் தேவையான கூடுதல் லூப்ரிகேஷனையும் கொடுக்கிறது" என்கிறார், ஷெல் இந்தியா ஃபிளீட் சொல்யூஷனின் பொது மேலாளர் சஞ்ஜய் வர்கீ. ஷெல் நிறுவனத்தின் ஆராய்ச்சியின்படி, டைனாஃபிளெக்ஸ் டீசல் பயன்படுத்துவதால் மட்டுமே 3 சதவிகிதம் காஸ்ட் ஆஃப் ஓனர்ஷிப் குறைகிறதாம்.

``இந்தியாவில், இந்த ஃபிளீட் சொல்யூஷன் தொழில்நுட்பத்தை ஓர் ஆண்டுக்கு மேலாக டெஸ்ட் செய்திருப்பதில் 3-5% நஷ்டத்தை இது குறைத்திருக்கிறது. இன்னும் அதிக தரவுகள் கிடைத்தால், அதன் அடிப்படையில் ஒவ்வொரு நிறுவனமும் எப்படி லாபத்தைக் கூட்ட முடியும் என்பதை நாங்களே கற்றுக்கொடுப்போம்" என்கிறார்  ஸெயின் ஹேக்.

முன்னணியில் தமிழக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்... 'சாஸ்' துறையில் சாதனை!

தற்போது 40 நகரங்களில் ஷெல்லின் எரிபொருள் நிலையங்கள் இருக்கின்றன. அதிலும், தென் இந்தியாவில்தான் அதிக பங்க்குகள் உண்டு. இந்தியாவின் டிரான்ஸ்போர்ட் தொழில் கிட்டத்தட்ட முறைசாரா தொழில் வடிவத்திலேயே இயங்கும் நிலையில், இதுபோன்ற தொழில்நுட்பங்கள் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு