Published:Updated:

BS-6 சுஸூகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டர் எப்படி இருக்கு? ஃபர்ஸ்ட் லுக் ரிப்போர்ட்!

Access 125 BS-6
Access 125 BS-6 ( Suzuki India )

எதிர்பார்த்தபடியே இங்கும் கார்புரேட்டருக்குப் பதிலாக ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன், சில புதிய வசதிகளும் ஸ்கூட்டரில் இடம்பிடித்துள்ளன.

ஆக்ஸஸ் 125... சுஸூகியின் இந்த ஃபேமிலி ஸ்கூட்டர்தான், இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிகளவில் விற்பனையாகும் ஸ்கூட்டர்களின் பட்டியலில், ஆக்டிவா 5G மற்றும் ஜூபிட்டருக்கு அடுத்தபடியாக, மூன்றாவது இடத்தைத் தொடர்ச்சியாக வகித்துவருகிறது!

`ஆல்ட்டோ ஏன், லம்போகினிபோல இல்லை' கார் டிசைன்களின் அடிப்படை விஷயங்கள்!

2016-ம் ஆண்டிலேயே இந்த மாடல் அறிமுகமாகியிருந்தாலும், புதிய கலர்கள் மற்றும் வசதிகள் மற்றும் ஸ்பெஷல் எடிஷன்கள் வழியே ஆக்ஸஸைப் புத்துணர்ச்சியுடன் அந்த நிறுவனம் வைத்திருந்தது எனலாம். ஏப்ரல் 1, 2020 முதலாக நாடெங்கும் BS-6 மாசு விதிகள் அமலுக்கு வரும் நிலையில், ஃபேஸினோ 125 - ஆக்டிவா 125 - வெஸ்பா/ஏப்ரிலியா எனப் போட்டியாளர்கள் அதற்கு ஏற்கெனவே தயாராகிவிட்டார்கள்; இந்தச் சூழலில், BS-6 விதிகளுக்குட்பட்டு தயாரிக்கப்பட்ட ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரை, சுஸூகி தற்போது களமிறக்கிவிட்டது. எதிர்பார்த்தபடியே இங்கும் கார்புரேட்டருக்குப் பதிலாக ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன், சில புதிய வசதிகளும் இந்த ஸ்கூட்டரில் இடம்பிடித்துள்ளன.

டிசைன் மற்றும் வசதிகள்

மேலோட்டமாகப் பார்க்கும்போது, BS-4 ஆக்ஸஸுக்கும் BS-6 வெர்ஷனுக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை (முன்பைவிட அகலம் 35மிமீ அதிகரித்துவிட்டது). ஆனால், புதிய ஸ்கூட்டரை உற்றுநோக்கும்போது, குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தெரிகின்றன. LED ஹெட்லைட் அதற்கான உதாரணங்களில் ஒன்று. மேலும் தற்போது பெட்ரோல் டேங்க்கின் மூடி, டெயில் லைட்டுக்கு மேலே சென்றுவிட்டது; ஆனால், அதை ஸ்கூட்டரின் சாவி துவாரம் வழியே இயக்கமுடியாது என்பது ஒரு நெருடல். ஸ்பெஷல் எடிஷனில் வழங்கப்பட்டிருக்கும் நீல நிறம் செம. சிறிய டிஜிட்டல் ஸ்க்ரீனுடன் கூடிய ஸ்பீடோமீட்டர் தொடர்கிறது என்றாலும், அதன் வடிவமைப்பு மாறியிருக்கிறது. இதில் வழக்கமான இரட்டை ட்ரிப் மீட்டர்கள் மற்றும் ஆயில் சேஞ்ச் இண்டிகேட்டருடன், கூடுதலாக Eco Assist Illumination வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

Access 125 BS-6
Access 125 BS-6
Suzuki India

மற்றபடி சென்ட்ரல் லாக் சாவி துவாரம், Easy Start சிஸ்டம், முன்பக்க ஸ்டோரேஜ், யுஎஸ்பி பாயின்ட் போன்ற வசதிகள் தொடர்வது ப்ளஸ். ஆனால், போட்டியாளர்களில் இருக்கும் சில வசதிகளான சைடு ஸ்டாண்ட் கட் ஆஃப் ஸ்விட்ச், சீட்டுக்கு அடியே லைட், ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம், பாஸ் லைட் ஸ்விட்ச், LED DRL போன்றவை இல்லாதது மைனஸ்தான். ஆக்ஸசரிஸில் உள்ள க்ரோம் பேக்கேஜ் மற்றும் வைஸர் ஆகியவை, ஸ்கூட்டரின் லுக்கை மாற்றிக் காட்டலாம்.

இன்ஜின் பர்ஃபாமன்ஸ் மற்றும் மெக்கானிக்கல்ஸ்

Access 125 BS-6
Access 125 BS-6
Suzuki India

போட்டி நிறுவனங்கள் எல்லாம் புதிய இன்ஜின்களைக் கொண்டுவரும் நிலையில், BS-4 வெர்ஷனில் இருந்த இன்ஜினையே BS-6க்கு அப்டேட் செய்திருக்கிறது சுஸூகி. இந்த 124சிசி SEP இன்ஜினின் பவரில் மாற்றமில்லாவிட்டாலும், அது வெளிப்படும் ஆர்பிஎம் மாறியிருக்கிறது (8.7bhp@6,750rpm). அதேநேரத்தில் டார்க்கும் அது வெளியாகும் ஆர்பிஎம்மும் மாற்றம் கண்டுள்ளன (1kgm@5,500rpm). பெட்ரோல் டேங்க்கின் அளவும் 5.6 லிட்டரிலிருந்து 5 லிட்டராகச் சுருங்கிவிட்டது! இதன் மைலேஜ் குறித்து சுஸுகி அதிகாரபூர்வமாக எதுவும் சொல்லவில்லை. இந்த இடர்பாடுகளை, கார்புரேட்டருக்குப் பதிலாக இடம்பிடித்திருக்கும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் சரிசெய்துவிடும் என நம்பலாம். BS-6 மாடலில் இரு ஆக்ஸிலரேட்டர் கேபிள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், த்ராட்டில் ரெஸ்பான்ஸ் சிறப்பாக இருக்கலாம். BS-4 மாடலைவிட BS-6 ஆக்ஸஸின் எடை 2-3 கிலோ எடை அதிகரித்திருக்கிறது. இது வாகனத்தின் ஓட்டுதலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது இனிதான் தெரியவரும். மற்றபடி பிரேக்ஸ், சேஸி, வீல்கள், சஸ்பென்ஷன், பேட்டரி ஆகிய டெக்னிக்கல் அம்சங்களில் எந்த வித்தியாசமும் இல்லை.

விலை மற்றும் போட்டியாளர்கள்

Access 125 BS-6
Access 125 BS-6
Suzuki India
சிட்டியில் ஓட்ட சின்ன பல்ஸர்! | Bajaj Pulsar 125 Neon Review | #MotorVikatan

5 வேரியன்ட்கள் மற்றும் 7 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் ஆக்ஸஸ் 125 BS-6 ஸ்கூட்டரின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.68,285 முதல் ரூ.72,985 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இது 3 வேரியன்ட்கள் மற்றும் 6 கலர்களில் கிடைத்த BS-4 ஆக்ஸஸைவிடச் சராசரியாக ர்.6,300 அதிகம்! இது ஆக்டிவா 125 மற்றும் வெஸ்பா/ஏப்ரிலியா ஸ்கூட்டர்களைவிட விலை குறைவு என்றாலும், ஃபேஸினோ 125 விட இது அதிகமே; இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஸ்கூட்டரின் தோற்றம் மற்றும் சிறப்பம்சங்களில் கணிசமான மாறுதல்களை சுஸூகி செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. தவிர `எடை குறைவான 125சிசி ஸ்கூட்டர்' என்ற பெருமையை, ஆக்ஸிஸமிருந்து ஃபேஸினொ தட்டிப் பறித்திருப்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். எனவே ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, போட்டியாளர்களிடமிருந்து BS-6 ஆக்ஸஸ் எப்படி தனித்து நிற்கிறது என்பது, அந்த ஸ்கூட்டரை ஓட்டிப் பார்க்கும்போது தெரிந்துவிடும்.

அடுத்த கட்டுரைக்கு