Published:Updated:

மெர்சல் காட்டும் டாடாவின் அல்ட்ராஸ்... பெலினோ, i20, ஜாஸ், கிளான்ஸா கார்களை முந்துமா?

அல்ட்ராஸ் VS Rivals
அல்ட்ராஸ் VS Rivals ( Autocar India )

பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் டயர் பதித்திருக்கும் அல்ட்ராஸ், பெலினோ, i20, ஜாஸ், கிளான்ஸா ஆகியவற்றுடன் போட்டிபோடுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அல்ட்ராஸை அறிமுகப்படுத்தியிருக்கிறது டாடா மோட்டார்ஸ். கடந்த 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் 45X கான்செப்ட்டாகக் காட்சிபடுத்தப்பட்ட இந்த கார், தற்போது BS-6 1.2 லிட்டர் பெட்ரோல்/1.5 லிட்டர்டீசல் இன்ஜின்களுடன்கூடிய Production வெர்ஷனாக வெளிவந்துவிட்டது; லேட்டாக ஆனால் லேட்டஸ்ட்டாக பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் டயர் பதித்திருக்கும் அல்ட்ராஸ், பெலினோ, i20, ஜாஸ், கிளான்ஸா ஆகியவற்றுடன் போட்டி போடுகிறது. இதில் பெலினோ - கிளான்ஸா ஆகியவற்றில் BS-6 பெட்ரோல் இன்ஜின்கள் இருக்கின்றன. ஜாஸ் மற்றும் i20 ஆகியவற்றில் BS-6 இன்ஜின்கள் இனிமேல்தான் வரும். போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது வசதிகள் - பாதுகாப்பு அம்சங்கள், இன்ஜின் - மைலேஜ், அளவுகள் - இடவசதி ஆகியவற்றில் அல்ட்ராஸ் எப்படி இருக்கிறது?

அளவுகள்

Tata Altroz
Tata Altroz
Autocar India
விலை ரூ.1.56 கோடி... ஆடி A8 லக்ஸரி செடானில் அப்படி  என்னதான் இருக்கு?

ALFA எனப்படும் (Agile, Light, Flexible, Advanced) டாடாவின் லேட்டஸ்ட் பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் டாடா கார் அல்ட்ராஸ் ஆகும். பெலினோ/கிளான்ஸா ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக நீளமான கார் இதுதான் (3,990மிமீ). அதேபோல முன்னே சொன்ன கார்களுடன் ஒப்பிட்டால், இரண்டாவது எடை குறைவான கார் அல்ட்ராஸ்தான் (1,026 - 1,150 கிலோ). கார் பார்க்க தாழ்வாக இருந்தாலும், போதுமான உயரம் இருக்கிறது (1,523மிமீ). மற்றபடி போட்டியாளர்களைவிட அதிகமான 1,755மிமீ அகலத்துடன் இருப்பதால், பின்பக்கத்தில் 3 பேருக்கான இடவசதி இருக்கும். 2,501மிமீ வீல்பேஸ் இதர கார்களைவிடக் குறைவாக இருந்தாலும், Flat Floor அந்தக் குறைபாட்டைச் சரி செய்யும் என நம்பலாம். 90 டிகிரியில் திறக்கும் கதவுகள் இருப்பதால், அல்ட்ராஸுக்குக்குள்ளே செல்வதும் வெளியேறுவதும் சௌகரியமான விஷயமாகவே இருக்கும் எனலாம். ஜாஸுக்கு அடுத்தபடியாக, அதிக பூட் ஸ்பேஸுடன் (345 லிட்டர்) அசத்துகிறது அல்ட்ராஸ். தவிர டூயல் டோன் பெயின்ட் ஃபினிஷ், டாடாவில் மட்டுமே கிடைக்கிறது. எந்த காரிலும் Shark Fin Antenna இல்லாதது மைனஸ்.

Altroz Rear
Altroz Rear
Autocar India
புதிய வண்ணங்களில் 2020 கேடிஎம் பைக்ஸ்... என்ன ப்ளஸ், என்ன மிஸ்ஸிங்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெளிப்புற மற்றும் உட்புற வசதிகள்

Altroz Cabin
Altroz Cabin
Autocar India

அனைத்து பிரிமியம் ஹேட்ச்பேக்குகளின் வெளிப்புறத்திலும் முன்பக்க பனி விளக்குகள், பின்பக்க வைப்பர், அலாய் வீல்கள், ரிவர்ஸ் கேமரா, பார்க்கிங் சென்சார், ஸ்பாய்லர் ஆகியவை பொதுவான அம்சங்கள் ஆகும். மற்ற கார்களில் இருக்கக்கூடிய 16 இன்ச் அலாய் வீல்கள், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், LED DRL போன்ற வசதிகள் ஜாஸில் மிஸ்ஸிங் என்பது மைனஸ். உட்புறத்தைப் பொறுத்தவரை ஆப்பிள்/ஆண்ட்ராய்டு மற்றும் வாய்ஸ் கமாண்ட் உடனான டச் ஸ்க்ரீன் சிஸ்டம், முன்பக்க ஆர்ம்ரெஸ்ட், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஃபேப்ரிக் சீட் அப்ஹேல்சரி, எலெக்ட்ரிக் மிரர்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட், பலவித கன்ட்ரோல்களுடன்கூடிய ஸ்டீயரிங் வீல் ஆகியவை அனைத்திலும் இடம்பெற்றுள்ளன.

Digi - Analogue Meter
Digi - Analogue Meter
Autocar India

அல்ட்ராஸ் லேட்டஸ்ட் மாடல் என்பதை அனலாக் - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆம்பியன்ட் லைட்டிங், ஃபிளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் ஆகியவை உணர்த்திவிடுகின்றன. ஆனால் இண்டிகேட்டர்களுடன்கூடிய ரியர் வியூ மிரர்கள் காணவில்லை. அல்ட்ராஸ் மற்றும் i20-ல் மட்டுமே ரியர் ஏசி வென்ட்கள் இருக்கின்றன; ஜாஸ் மற்றும் அல்ட்ராஸில் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளது. ஆனால், ஜாஸில் மட்டுமே டச் ஏசி கன்ட்ரோல்கள் மற்றும் Magic Seats இருப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

பெட்ரோல் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்

Altroz-90 Degree Doors
Altroz-90 Degree Doors
Autocar India

அனைத்து பிரிமியம் ஹேட்ச்பேக்குகளிலும் இருப்பது 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்தான். பெலினோ RS-ல் மட்டுமே டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கிறது (இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது). 86bhp பவர் - 11.3kgm டார்க் - 19.05கிமீ அராய் மைலேஜ் தரும் அல்ட்ராஸ், பவர் மற்றும் மைலேஜில் இரண்டாமிடத்திலும் - டார்க்கில் போட்டியாளர்களுக்குச் சமமாகவும் இருக்கிறது. பெலினோ மற்றும் கிளான்ஸாவில் இருக்கும் K12C பெட்ரோல் இன்ஜின், ஜாஸுக்கு இணையாக 90bhp பவரைத் தருகிறது.

Tailgate
Tailgate
Autocar India

இந்த மைல்டு ஹைபிரிட் இன்ஜின், அதிக அராய் மைலேஜைக் கொண்டிருக்கிறது (23.87கிமீ). இவை எடை குறைவான கார்கள் என்பதும் இதற்கு உறுதுணையாக இருக்கின்றன (ஒரு டன்னுக்கும் குறைவு). இங்கிருப்பதிலேயே எடை அதிகமான காராக இருக்கும் i20 (1,080 - 1200 கிலோ), அராய் மைலேஜில் பின்தங்கிவிடுகிறது (18.24 கிமீ). அல்ட்ராஸ் தவிர அனைத்து கார்களிலும் CVT ஆப்ஷன் இருக்கிறது. டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை, பின்னாளில் டாடா அறிமுகப்படுத்தும் எனத் தகவல் வந்திருக்கிறது. ஒருவேளை அல்ட்ராஸ் JTP வந்தால், அதில் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படலாம்.

டீசல் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்

1.5 L Revotorq Engine
1.5 L Revotorq Engine
Autocar India

கிளான்ஸாவில் டீசல் இன்ஜின் கிடையாது என்பதுடன், BS-6 அவதாரத்தில் பெலினோ டீசல் (1.3 லிட்டர் DDiS 190) வராது என மாருதி சுஸூகி தெரிவித்துவிட்டது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் காட்சிபடுத்தப்படப் போகும் புதிய i20 காரில், 1.5 லிட்டர் BS-6 டீசல் இன்ஜினை எதிர்பார்க்கலாம் (BS-4 மாடலின் அராய் மைலேஜ் இங்கிருப்பதிலேயே குறைவு - 21.76கிமீ). இது இப்போதைய மாடல் போலவே, போட்டியாளர்களைவிட அதிக டார்க்கைத் தரலாம்.

Boot Space
Boot Space
Autocar India

அமேஸ் மற்றும் ஜாஸில் இருக்கும் 1.5 லிட்டர் BS-6 டீசல் இன்ஜின், BS-6 விதிகளுக்கு மேம்படுத்தப்படலாம். ஜாஸ் மற்றும் பெலினோ, அதிக அராய் மைலேஜைக் கொண்டுள்ளன (27.3கிமீ). பெலினோ, அல்ட்ராஸ் தவிர மற்ற கார்களின் டீசல் மாடல்களில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. 90bhp பவர் - 20kgm - 25.11கிமீ அராய் மைலேஜைத் தரும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் அல்ட்ராஸில் பொருத்தப்பட்டுள்ளது. இது நெக்ஸானில் இருப்பதுதான் என்றாலும், பவர்-டார்க் மற்றும் கியர் எண்ணிக்கையில் பெரும் சரிவைச் சந்தித்திருக்கிறது.

பாதுகாப்பு வசதிகள் மற்றும் விலை

GNCAP Crash Test
GNCAP Crash Test
Tata Motors

2 காற்றுப்பைகள், ஏபிஎஸ், EBD ஆகியவை அனைத்து பிரிமியம் ஹேட்ச்பேக்குகளிலும் உள்ளன. இதில் ஜாஸில் மட்டுமே ISOFIX, பின்பக்க அட்ஜெஸ்டபிள் ஹெட்ரெஸ்ட்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ் இல்லை என்பது பெரிய மைனஸ். அல்ட்ராஸில் மட்டுமே ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் - CSC, i20-ல் மட்டுமே 6 காற்றுப்பைகளும் உள்ளன. Global NCAP கிராஷ் டெஸ்ட்டில் அல்ட்ராஸ் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருப்பது செம! BS-6 இன்ஜின்களுடன் வந்திருந்தாலும், போட்டி கார்களைவிடக் குறைவான விலையில் டாடாவின் கார் உள்ளது (5.29 – 9.29 லட்சம், சென்னை எக்ஸ்-ஷோரூம்.

Altroz - Tata
Altroz - Tata
Tata Motors

ஆனால், பெட்ரோல் டாப் வேரியன்ட்டைப் பொறுத்தவரை, குறைவான விலையில் கிடைக்கக்கூடிய கார் கிளான்ஸாதான் (7.05 – 9 லட்சம், சென்னை எக்ஸ்-ஷோரூம்). இருவிதமான பெட்ரோல் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் பெலினோ கிடைத்தாலும், அதன் விலை கொஞ்சம் கூடுதல்தான் (5.71 – 9.03 லட்சம், சென்னை எக்ஸ்-ஷோரூம்); ஆனால் BS-4 அவதாரத்திலேயே அதிக விலையில் இருக்கும் ஜாஸ் மற்றும் i20, BS-6 அவதாரத்தில் இன்னும் விலை உயர்வைப் பெறக்கூடிய சாத்தியத்தைப் பெற்றுள்ளது! ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஸ்டைலான டிசைன் மற்றும் கேபின் - அசத்தலான விலை மற்றும் இடவசதி - போதுமான வசதிகள் மற்றும் பர்ஃபாமன்ஸ் - சிறப்பான ஒட்டுதல் அனுபவம் மற்றும் பாதுகாப்பு என ஆல்ரவுண்டராக அசத்துகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு