Published:Updated:

கர்வ்… நெக்ஸானைவிட அதிக தூரம் போகும் டாடாவின் புது எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவி!

டாடா கர்வ்
பிரீமியம் ஸ்டோரி
டாடா கர்வ்

டாடா கர்வ் எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவி

கர்வ்… நெக்ஸானைவிட அதிக தூரம் போகும் டாடாவின் புது எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவி!

டாடா கர்வ் எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவி

Published:Updated:
டாடா கர்வ்
பிரீமியம் ஸ்டோரி
டாடா கர்வ்

நன்றாக நினைவிருக்கிறது. ‘விஜய்’யின் ‘பீஸ்ட்’ பட டீஸர் வைரலாகிக் கொண்டிருந்தபோதுதான் இன்னொரு டீஸரும் வைரலாகிக் கொண்டிருந்தது. அது டாடா மோட்டார்ஸின் புது கார்… கர்வ்! அதுவும் ஒரு எலெக்ட்ரிக் கார்…அதுவும் மில்லினியல் டிசைனில் டிஜிட்டல் டிசைன் மொழியில் வரப்போகும் கார்… டாடாவின் ஜெனரேஷன் 2 EV Architecture-ல் தயாராகப் போகும் மிட் சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி… அட, சிங்கிள் சார்ஜில் 400 கிமீ வரை பறக்கப் போகும் ஒரு பட்ஜெட் ப்ரீமியம் எலெக்ட்ரிக் கார்… என்று கர்வ்வைப் பற்றி ஏகப்பட்ட ஹைலைட்ஸ்கள் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

பிப்ரவரி 2022 ஆட்டோ எக்ஸ்போவில் இதைக் காட்சிப்படுத்துவதாகத்தான் டாடா திட்டம் வைத்திருந்தது. கொரோனோ எங்கே நடத்த விட்டது? இப்போது கர்வை தொடாமல் பார்க்க மட்டும் ஏற்பாடு செய்திருந்தது டாடா!

கர்வ்… நெக்ஸானைவிட அதிக தூரம் போகும் டாடாவின் புது எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவி!


இது நெக்ஸானுக்கு ஒரு படி மேலேயும், ஹேரியருக்கு ஒரு படி கீழேயும் பொசிஷன் செய்யப்பட இருக்கிறது இந்த எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவி! இதன் டிசைனை அப்படித்தான் செதுக்கியிருக்கிறார்கள். சரிந்து விழும் இதன் கூரையே இதற்குச் சாட்சி!

வெளித்தோற்றம்:

இரண்டு ஹெல்டைட்டையும் இணைப்பதுபோல நீளும் இதன் LED ஹெட்லைட் Bar… அருமை! தூரத்தில் இருந்து பார்த்தால்… நெக்ஸானைவிட நன்றாகவே சிரிப்பதுபோல் இருக்கிறது கர்வ். பம்பரை அழகாகச் செதுக்கியிருக் கிறார்கள். காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும்விதமாக இதன் போனட்டையும் முகப்பையும் வடிவமைத்திருக்கிறார்கள். ஹெட்லைட்ஸுக்கு ஒரு முக்கோண வடிவ ஹவுஸிங் கொடுத்திருப்பது புதுமை. அலாய் வீல்கள்… வேற லெவலில் இருக்கின்றன.

கர்வ்… நெக்ஸானைவிட அதிக தூரம் போகும் டாடாவின் புது எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவி!


சரிந்து விழும் அந்த கூபேவைப் பறைசாற்றும் கூரை, ஸ்போர்ட்ஸ் விரும்பிகளுக்கு நிச்சயம் பிடிக்கும். உறுதியான ஷோல்டர் லைன்கள், சதுர வடிவில் வீல்களுக்கான ஆர்ச்சுகள், பாடி கிளாடிங் போன்ற மற்ற கட்டுமஸ்தான விஷயங்கள்… இதை ஒரு எஸ்யூவி என்று சொல்கின்றன. அதாவது – ஒரே காரில் கூபே, எஸ்யூவி – இப்படி டிசைன் செய்ய டாடாவால்தான் முடியும்போல!

இந்த டாடா ஜெனரேஷன் 2 EV Architecture–ன் புதுமை, டிசைனில் மட்டுமில்லை; உள்ளேயும் இருக்கிறது. பலவிதமான பாடி ஸ்டைல்களும் சில பல பவர்ட்ரெய்ன் ஆப்ஷன்களும் கொண்டதுதான் இந்த டிசைன் மொழி. ஜென் 1–ல் ரெடியான நெக்ஸானுக்கு அடுத்த லெவலில் இருக்க வேண்டும் என்பதற்காக, எடை அதிகமான பேட்டரிகளையும் எலெக்ட்ரிக் மோட்டார்களையும் தாங்க வேண்டும் என்பதற்காக, இன்னும் கட்டுமஸ்தாக ரெடியாகி இருக்கிறது கர்வ். ஆல்வீல் டிரைவ் ஆப்ஷனும் கொடுப்பார்களாம்.

உள்ளேயும் ப்ரீமியத்தை அள்ளித் தெளித்திருக்கிறார்கள் டாடா டிசைனர்கள். எலெக்ட்ரிக் என்பதாலோ என்னவோ… நீல நிற ஆம்பியன்ட் லைட்டிங் செட்அப் மனசுக்கு இதமாக இருக்கிறது. கசகசவென டிசைன்கள் குழப்பியடிக்கவில்லை. சிம்பிள் அண்ட் நீட்டாக டிசைன் செய்யப்பட்ட அந்த 3 லேயர் கொண்ட டேஷ்போர்டு, அற்புதம். இதன் மேல் லேயரில் கொஞ்சம் ஃபேப்ரிக் வேலைப்பாடுகளும் நச்! கேபினின் அகலம் முழுக்க கவர் செய்வது மாதிரி ஒரு எல்இடி லைட் ஸ்ட்ரிப் பயணம் செய்வது… நன்றாகவே இருக்கிறது. கீழேயும் ஆங்குலர் வடிவில் புது டிசைன் அருமை. அட, சன்ரூஃபும் இருந்தது கர்வ்வில்!

இது கான்செப்ட் மாடல்தான். இருந்தாலும், இதிலுள்ள பல டிசைன் வேலைப்பாடுகள் மற்றும் வசதிகள், விற்பனைக்கு வரும் மாடலிலும் இருக்கும் என்கிறது டாடா.
இது கான்செப்ட் மாடல்தான். இருந்தாலும், இதிலுள்ள பல டிசைன் வேலைப்பாடுகள் மற்றும் வசதிகள், விற்பனைக்கு வரும் மாடலிலும் இருக்கும் என்கிறது டாடா.இந்த டிசைனின் தனித்துவமாக ஒரு இரண்டு விஷயங்களைச் சொல்லலாம். இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்ட டச் ஸ்க்ரீன். இரண்டுமே ஃப்ரீ ஸ்டாண்டிங் ஸ்டைலில் ஸ்போர்ட்டியாக இருக்கின்றன. சென்டர் கன்ஸோலும் மிதக்கும் ஸ்டைலில் டிசைன் செய்திருக்கிறார்கள். க்ளைமேட் கன்ட்ரோல் ஸ்விட்ச்சுக்கும், அந்த கியர் நாபுக்கும், ஆர்ம்ரெஸ்ட்டுக்கும் மட்டும் ஒரு சின்ன இடைவெளி கொடுத்திருப்பது வித்தியாசம். கியர் நாபைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். இதில் ஜாகுவார் கார்கள் மாதிரி ரோட்டரி கியர் நாப் கொடுத்திருக்கிறார்கள். ஸ்போர்ட்டி ஸ்டைலை இன்னும் கூட்டுகிறது அந்த 2 ஸ்போக் ஸ்டீயரிங் வீல்.

கூபே காரில் பயப்படக்கூடிய ஒரு விஷயம் – பின் பக்கப் பயணிகளின் ஹெட்ரூம். இந்த கர்வ் காரில் அப்படி ஒரு சிக்கல் ஏற்படாமல் பார்த்துப் பார்த்து டிசைன் செய்திருக்கிறார்கள் டாடா டிசைனர்கள். உட்கார்ந்து பார்த்தேன்… தலை இடிக்கவில்லை. ஹெட்ரூமும் பக்கா!

கர்வ்… நெக்ஸானைவிட அதிக தூரம் போகும் டாடாவின் புது எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவி!பேட்டரி மற்றும் ரேஞ்ச்சில்தான் கர்வ் சொல்லியடிக்கக் காத்திருக்கிறது. பேட்டரி விஷயங்களைப் பக்காவாக நமக்கு டாடா சொல்லவில்லை என்றாலும்… கர்வ்வின் பேட்டரி திறனும் பவரும் அதிகமாகவே இருக்கும். இதனால் ஓட்டுதலில் நிச்சயம் தெறி காட்டும். ஆல்வீல் டிரைவ் என்பதால், ஆஃப்ரோடும் செய்து கொள்ளலாம். நெக்ஸான் சிங்கிள் சார்ஜ் ரேஞ்ச் 312 கிமீ என்றால்… இதில் 400 – 500 கிமீ வரை போகலாம்!

இதை மிட் சைஸ் எஸ்யூவி எனும் செக்மென்ட்டில் பொசிஷன் செய்திருக்கிறது டாடா மோட்டார்ஸ். கியா செல்ட்டோஸ், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வாகன் டைகூன், ஹூண்டாய் க்ரெட்டா போன்ற மிட் சைஸ் எஸ்யூவிகள் உலவும் பேட்டையில்தான் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கர்வ் களம் காணயிருக்கிறது.இது கான்செப்ட் மாடல்தான். இருந்தாலும், இதிலுள்ள பல டிசைன் வேலைப்பாடுகள் மற்றும் வசதிகள், விற்பனைக்கு வரும் மாடலிலும் இருக்கும் என்கிறது டாடா.

Scoop News

இந்த கர்வ் காரை முதலில் எலெக்ட்ரிக் காராக இறக்கிவிட்டு, அப்புறம்தான் ICE (Internal Combustion Engine) கொண்ட மாடலைக் கொண்டு வரவிருக்கிறதாம் டாடா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism