Published:Updated:

டெஸ்ட்டிங்கில் 7 சீட் ஹேரியர்... என்ன எதிர்பார்க்கலாம்?!

Tata Buzzard
Tata Buzzard ( Facebook )

ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, காரின் முன்பக்கம் மற்றும் பக்கவாட்டில் சி-பில்லர் வரை பார்க்க ஹேரியர் போலவே இருக்கிறது பஸ்ஸார்டு. இதனால், ஹேரியர் மற்றும் பஸ்ஸார்டின் வீல்பேஸ் ஒன்றுதான் என்பது தெரிகிறது (2,741மிமீ).

பஸ்ஸார்டு... 2019 ஜெனிவா மோட்டார் ஷோவில் டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்திய எஸ்யூவிதான் இது; ஹேரியரின் சீட்டராக பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் இந்த காரை, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்குக் கொண்டுவர அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. தற்போதைய சூழலில், ''டாடாவின் விலை அதிகமான கார்'' என்ற பெருமையை, இப்போதுவரை ஹெக்ஸா தன்வசம் வைத்திருக்கிறது. விரைவில் பஸ்ஸார்டு அந்த இடத்தைப் பிடிக்கும் எனத் தகவல் வந்துள்ளது. அதாவது, 2017-ம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகமான ஹெக்ஸாவின் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளது!

7 Seat Harrier
7 Seat Harrier
Tata Motors

மோனோகாக் சேஸி அமைப்பை அடிப்படையாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் Alfa மற்றும் Omega ப்ளாட்ஃபார்மில், லேடர் ஃபிரேமைக் கொண்ட இந்த 7 சீட் எஸ்யூவி கட்டமைக்க இயலாது என்பது ஒரு காரணம். மேலும், இதிலிருக்கும் 2.2 லிட்டர் Varicor 400 டர்போ டீசல் இன்ஜினை, BS-6 டியூனிங்கிற்குப் பிறகு தனது கமர்ஷியல் வாகனங்களில் டாடா மோட்டார்ஸ் பயன்படுத்த உள்ளதாகத் தெரியவந்திருக்கிறது.

இந்த நிலையில், தற்போது தீவிரமான டெஸ்ட்டிங்கில் இருக்கும் 7 சீட் ஹேரியரை, சிங்கநல்லூர் சாலையில் படம்பிடித்திருக்கிறார், கோவையைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான ஶ்ரீ தன்வன்த். இந்த மாடல், நிச்சயம் வேறு பெயரில்தான் வெளியாகும். இதனால் சமீபத்தில் களமிறங்கிய எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்குச் சமமான சைஸில், 7 சீட் ஹேரியர் வெளிவரலாம். டேஷ்போர்டில் மாற்றமில்லாவிட்டாலும், கடைசி வரிசைக்கு என ஏசி வென்ட், சார்ஜிங் பாயின்ட், கப் ஹோல்டர், ஹெட்ரெஸ்ட் இருக்கலாம்.

Tata Buzzard
Tata Buzzard
Facebook

ஹேரியர் - பஸ்ஸார்டு... என்ன வித்தியாசம்?

ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, காரின் முன்பக்கம் மற்றும் பக்கவாட்டில் சி-பில்லர் வரை பார்க்க ஹேரியர் போலவே இருக்கிறது பஸ்ஸார்டு. LED DRL மற்றும் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், அகலமான கிரில் மற்றும் ஏர் டேம், இண்டிகேட்டர்களுடன்கூடிய ரியர் வியூ மிரர்கள், கதவுகள் ஆகியவை அதற்கான உதாரணம்.

இதனால், ஹேரியர் மற்றும் பஸ்ஸார்டின் வீல்பேஸ் ஒன்றுதான் என்பது தெரிகிறது (2,741மி.மீ). ஜெனிவாவில் காட்சிக்கு இருந்த காரில், ஹெக்ஸா போல 19 இன்ச் அலாய் வீல்கள் இருந்தன. ஆனால், டெஸ்ட்டிங்கில் இருந்த காரில், ஹேரியரின் அதே 17 இன்ச் அலாய் வீல்களே உள்ளன;

7 Seat Harrier
7 Seat Harrier
Facebook

மற்றபடி பெரிய LED டெயில் லைட், ரூஃப் ரெயில், வித்தியாசமான டி-பில்லர் - குவார்ட்டர் கிளாஸ் - விண்ட் ஷீல்டு ஆகியவை, ஹேரியருடன் ஒப்பிடும்போது டிசைன் மாற்றங்களாக இருக்கும். கூடுதலாக ஒரு வரிசை இருக்கை சேர்க்கப்படுவதால், அவர்களுக்கான லெக்ரூம் மற்றும் ஹெட்ரூமை மனத்தில்வைத்து, காரின் நீளம் (62மி.மீ) மற்றும் உயரம் (80மி.மீ) அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்ஜின் மற்றும் வசதிகளில் என்ன மாற்றம் இருக்கும்?

6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர, ஹூண்டாயின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (டார்க் கன்வெர்ட்டர்) இதில் ஆப்ஷனலாக வழங்கப்படும்.
Buzzard
Buzzard
Facebook

ஹேரியர் போலவே, பஸ்ஸார்டும் டாடாவின் Omega ப்ளாட்ஃபார்மில்தான் (லேண்ட்ரோவரின் D8 ப்ளாட்ஃபார்ம்தான் அடிப்படை) தயாரிக்கப்படும். அடுத்த ஆண்டில்தான் இந்தியாவில் டயர் பதிக்க உள்ளதால், BS-6 மாசு விதிகளுக்குட்பட்ட இன்ஜினுடன்தான் இந்த எஸ்யூவி வரும்.

ஹேரியரில் இருக்கும் அதே 2.0 லிட்டர் Kryotec டர்போ டீசல் இன்ஜினே என்றாலும், அது ஹெக்டருக்கு இணையான 170bhp பவர் மற்றும் 35kgm டார்க்கை வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர, ஹூண்டாயின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (டார்க் கன்வெர்ட்டர்) இதில் ஆப்ஷனலாக வழங்கப்படும்.

Harrier Dual Tone
Harrier Dual Tone
Tata Motors

இதே செட்-அப், BS-6 ஹேரியரிலும் இடம்பிடித்திருக்கும். ஹெக்டரில் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 48V ஹைபிரிட் சிஸ்டம் இருக்கும் சூழலில், பஸ்ஸார்டில் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வருவதற்கான வாய்ப்பிருக்கிறது; 4 வீல் டிரைவ், சன்ரூஃப், பின்பக்க டிஸ்க் பிரேக், முன்பக்க சீட்களை எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்வது போன்ற சிறப்பம்சங்கள், 7 சீட் ஹேரியரில் இருக்குமா என்பது போகப்போகத் தெரியும். கடந்த வாரத்தில், டூயல் டோன் ஃபினிஷ் கொண்ட ஹேரியரை (முன்பைவிட 20 ஆயிரம் ரூபாய் விலை அதிகம்) வெளியிட்ட டாடா மோட்டார்ஸ், மற்ற வேரியன்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலையை 30,000 ரூபாய் அதிகரித்துவிட்டது!

அடுத்த கட்டுரைக்கு