Published:Updated:

டாடாவின் புதிய மைக்ரோ எஸ்யூவி (H2X)... எப்படி இருக்கும்? #AutoExpo2020

H2X Concept
H2X Concept ( Tata Motors )

ரெனோ க்விட் - மாருதி சுஸூகி S-பிரெஸ்ஸோ - மஹிந்திரா KUV100 NXT ஆகிய மைக்ரோ எஸ்யூவிகளைவிட அளவில் பெரிதாக இருக்கிறது H2X.

நாளை டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020 தொடங்கப்போகும் சூழலில், கடந்த ஒரு வாரமாகவே அதுகுறித்த பேச்சுகளைச் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பார்க்கமுடிகிறது. அதை உறுதிபடுத்தும் விதமாக, ட்விட்டரில் பல்வேறு டீசர்களை டாடா மோட்டார்ஸ் (Passenger/Commercial Segment) வெளியிட்டுவருகிறது. அதில் ஒரு காரின் படங்களை வெவ்வேறு கோணங்களில் தொடர்ச்சியாக இந்த நிறுவனம் பதிவிட்டுள்ளது.

LED DRL
LED DRL
Tata Motors
Front Fender
Front Fender
Tata Motors

அதைப் பார்க்கும்போது, H2X கான்செப்ட் (குறியீட்டுப் பெயர்: X445) நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த மைக்ரோ எஸ்யூவி (Hornbill), நெக்ஸானுக்குக் கீழே பொசிஷன் செய்யப்படலாம். நகர்ப்புறப் பயன்பாட்டிற்கேற்ப தயாராகும் H2X-ன் Production வெர்ஷனை, நீண்ட நாள்களாகவே டெஸ்ட் செய்துவருகிறது டாடா மோட்டார்ஸ்.

மாருதி சுஸூகி S-Presso... என்ன எதிர்பார்க்கலாம்? #MotorVikatanUpdates

3,840 மி.மீ நீளம் - 1,822 மி.மீ அகலம் - 1,635 மி.மீ உயரம் - 2,450 மி.மீ வீல்பேஸ் ஆகிய அளவுகளில் H2X கான்செப்ட் இருந்தது தெரிந்ததே. அதன்படி பார்த்தால், ரெனோ க்விட்-மாருதி சுஸூகி S-பிரெஸ்ஸோ-மஹிந்திரா KUV100 NXT ஆகிய மைக்ரோ எஸ்யூவிகளைவிட அளவில் பெரிதாக இருக்கிறது H2X. ஹேரியரைப் போலவே இங்கும் ஸ்ப்ளிட் ஹெட்லைட்ஸ் இருப்பதுடன், பெரிய டயர்கள் - தடிமனான வீல் ஆர்ச்கள் - பாக்ஸ் போன்ற வடிவம் என ஒரு எஸ்யூவிக்கான அம்சங்கள் Hornbill-ல் இருப்பது பெரிய ப்ளஸ்.

Door Handle
Door Handle
Tata Motors
Frontal Area
Frontal Area
Tata Motors

லேட்டஸ்ட் டீசர்களின்படி புஷ் பட்டன் ஸ்டார்ட், முக்கோண வடிவ டெயில் லைட்ஸ், LED DRL, கறுப்பு - வெள்ளை நிற அப்ஹோல்சரி ஆகியவை இருப்பதும் உறுதியாகியிருக்கிறது. அல்ட்ராஸ் போலவே இந்த மைக்ரோ எஸ்யூவியும் (குறியீட்டுப் பெயர்: X445) ALFA பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்படும் எனத் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டாப் வேரியன்ட்களில் டியாகோ போலவே டச் ஸ்க்ரீன் சிஸ்டம், 15 இன்ச் அலாய் வீல்கள், டிஜிட்டல் மீட்டர், Rear Wash & Wiper இடம்பெறுவதற்கான சாத்தியம் இருக்கிறது. சன்ரூஃப் இருந்தாலும்கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை! இதில் 1.2 லிட்டர் Revotron BS-6 பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்படும். பின்னாளில் 5 ஸ்பீடு AMT ஆப்ஷன் வழங்கப்படலாம். டியாகோ மற்றும் டிகோர் போலவே, இதிலும் டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படமாட்டாது;

Tail Light
Tail Light
Tata Motors
Seat Texture
Seat Texture
Tata Motors

எனவே, நெக்ஸான் போலவே இதிலும் Ziptron எலெக்ட்ரிக் செட்-அப் இணைக்கப்படலாம். Hornbill-ல் Impact 2.0 டிசைன் கோட்பாடுகள் பயன்படுத்தப்படும் என்பதால், கான்செப்ட்டைப் போன்ற தோற்றத்திலேயே இந்த மைக்ரோ எஸ்யூவி இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் H2X-ன் பெயர் - வெளிப்புற டிசைன் - கேபின் ஆகிய விவரங்கள் அறிவிக்கப்படலாம்.

அடுத்த கட்டுரைக்கு