Published:Updated:

கொரோனா வைரஸ்: தன் நிறுவனத்துக்குள் 3 கட்ட திட்டத்தை அறிவித்த டாடா மோட்டார்ஸ்!

டாடா மோட்டார்ஸ் ( TATA Motors )

இந்தியாவின் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக இருக்கும் டாடா, COVID-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க 3 கட்ட திட்டத்தை தனது நிறுவனத்துக்குள் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ்: தன் நிறுவனத்துக்குள் 3 கட்ட திட்டத்தை அறிவித்த டாடா மோட்டார்ஸ்!

இந்தியாவின் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக இருக்கும் டாடா, COVID-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க 3 கட்ட திட்டத்தை தனது நிறுவனத்துக்குள் அறிவித்துள்ளது.

Published:Updated:
டாடா மோட்டார்ஸ் ( TATA Motors )

உலகம் எங்கிலும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இந்தியாவில் கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், பொது நிகழ்ச்சிகள் என எல்லாமே நிறுத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது 3,000 பணியாளர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள் என Work from Home கொடுத்து அனுப்பியுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்தியாவின் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக இருக்கும் டாடா, COVID-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க 3 கட்ட திட்டத்தைத் தனது நிறுவனத்துக்குள் அறிவித்துள்ளது. அதன்படி, டாடா நிறுவனத்தில் அனைத்து வெளிநாட்டுப் பயணங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன; பொது போக்குவரத்து முறையைப் பயன்படுத்தும் உள்நாட்டுப் பயணங்களுக்கு நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் கமிட்டி அனுமதிக்கவேண்டும்; கொரோனா விழிப்புணர்வை போஸ்டர், மெயில் மற்றும் மருத்துவ நிகழ்ச்சிகள் மூலம் ஏற்படுத்தவேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதோடு, பயோமெட்சிக் முறைக்குப் பதிலாக கார்டு ஸ்வைப் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பிடத்தைச் சுகாதாரமாக வைத்துக்கொள்ள ஹேண்ட் சானடைஸர், ஹேண்ட் வாஷ், முகமூடி போன்றவை எல்லோருக்குமே கொடுக்கப்படுகின்றன. 20-க்கும் அதிகமானவர்கள் ஒன்றுகூடக்கூடாது என்பதற்காகச் சந்திப்புகள், பயிற்சி வகுப்புகள் போன்றவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 

டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ்

டாடா நிறுவனத்தின் தலைமை அலுவலகம், மார்க்கெட்டிங், சேல்ஸ் போன்றவற்றில் அலுவலக வேலையில் இருப்பவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேல்ஸ், சர்வீஸ், சப்ளையர், ப்ரொடக்‌ஷ்ன் லைன் பணிகளில் இருப்பவர்கள் நிறுவனத்துக்கு வெளியே இருப்பவர்களை டிஜிட்டல் முறையில் தொடர்புகொள்ளவேண்டும். நேரில் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல இவர்கள் தினமும் அலுவலகம் வரவேண்டும் என்று அவசியமும் கிடையாது என்று கூறியுள்ளார்கள். தொழிற்சாலையில் இருப்பவர்களின் வேலைகளில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் வழக்கம்போல வேலைக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளார்கள்.

கொரோனா
கொரோனா

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல, அரசின் அறிவிப்புக்கு இணங்க கொரோனா பாதிப்பால் புது வாகனம் வெளியிடும் நிகழ்வு மற்றும் டெஸ்ட் டிரைவ் போன்றவற்றை ஒத்திவைத்துள்ளார்கள். ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) மற்றும் ஆட்டோமொபைல் டீலர்கள் அசோசியேஷன் (FADA), கொரோனா வைரஸ் பாதிப்பால் பிஎஸ்-4 வாகனங்களைப் பதிவிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த வாகனங்களைப் பதிவிட அவகாசம் கொடுக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் கேட்டுள்ளார்கள்.