Published:Updated:

டாடாவின் புது நெக்ஸான் EV எலெக்ட்ரிக் கார்... என்ன ப்ளஸ், என்ன மிஸ்ஸிங்?

312 கி.மீ அராய் ரேஞ்ச் கொண்ட இந்த காரை மொத்தமாக சார்ஜ் செய்ய 30 யூனிட் மின்சாரம் தேவை என்கிறது டாடா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார், ரூ.13.99 லட்சம் எனும் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 5 டீலர்களிடமே கிடைக்கும் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி-க்கு செம வரவேற்பு இருக்கும் என்று டாடா எதிர்பார்க்கிறது.

நெக்ஸான் EV
நெக்ஸான் EV

XM - ரூ.13.99 லட்சம், XZ+ - ரூ.14.99 லட்சம் மற்றும் XZ+LUX - ரூ.15.99 லட்சம் என மூன்று வேரியன்ட்டுகளில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விலைகள் எல்லாம், அறிமுக விலை மட்டுமே. எதிர்காலத்தில் விலைகள் ஏற அதிக வாய்ப்புகள் உண்டு. IC இன்ஜின் கொண்ட BS-6 நெக்ஸானைவிட எலெக்ட்ரிக் மாடலின் விலை 7 லட்சம் அதிகம். கிட்டத்தட்ட இரட்டிப்பு மடங்கு!

312 கி.மீ அராய் ரேஞ்ச் கொண்ட இந்தக் காரை மொத்தமாக சார்ஜ் செய்ய 30 யூனிட் மின்சாரம் தேவை என்கிறது டாடா. ரேஞ்ச் மற்றும் பவர், எல்லா வேரியன்ட்டிலும் ஒன்றுதான். வெறும் வசதிகள் மட்டுமே மாறுகின்றன. அடிப்படையான XM வேரியன்ட்டில், LED DRL, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, பவர் விண்டோஸ் போன்றவை ஸ்டாண்டர்டு வசதி.

Nexon Interior
Nexon Interior

16 இன்ச் அலாய் வீல், டூயல் டோன் கலர் ஆப்ஷன், பவர் அட்ஜஸ்டபிள் ஃபோல்டிங் மிரர், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் போன்ற பிரீமியம் வசதிகள் இதில் மிஸ்ஸிங். ஆனால், இவை அத்தனையும் XZ+ வேரியன்ட்டில் கிடைத்துவிடுகிறது. டாப் வேரியன்ட்டான XZ+ LUX-ல் சன்ரூஃப், ஆட்டோ ஹெட்லைட் மற்றும் வைப்பர், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட், 8 ஸ்பீக்கர் ஹார்மன் சவுண்டு சிஸ்டம் மற்றும் டாடாவின் Zconnect எனும் 35 கனெக்டட் கார் வசதிகள் இருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2020 ஹீரோ HF டீலக்ஸ் - நாட்டின் முதல் 100சிசி BS-6 பைக் இதுதான்!

நெக்ஸான் EV, 30.2KWh லித்தியம் அயான் பேட்டரி கொண்டுள்ளது. ஃப்ரன்ட் வீல் டிரைவ் காரான இதில், 129bhp பவர் மற்றும் 245Nm டார்க் உருவாக்கக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகம் எட்டுவதற்கு 9.9 விநாடிகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. நம் வீடுகளில் இருக்கும் 3 சாக்கெட் 15A AC சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால், ஒரு முழு சார்ஜுக்கு 8 முதல் 9 மணிநேரம் தேவை. அதுவே டாடாவின் சர்வீஸ் ஸ்டேஷன் மற்றும் ஷோரூம்களில் வைக்கப்பட இருக்கும் DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தினால், ஒருமணி நேரத்தில் 80 சதவிகிதம் சார்ஜ் செய்துவிடலாம். ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் வசதியும் உண்டு. மக்களின் நம்பகத் தன்மையைப் பெற டாடா இந்த எஸ்யூவிக்கு 8 ஆண்டு/1,60,000 கி.மீ வாரன்ட்டி தருகிறது.

`கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார்... ஆனால் ஒரு விஷயத்தில் சறுக்கல்!’- பாதுகாப்பானதா டாடா அல்ட்ராஸ்?

இலவசமாக ஹோம் சார்ஜர் தருவதோடு, டாடா தனது 300, DC ஃபாஸ்ட் சார்ஜர்களைப் பயன்படுத்த தனி அனுமதியும் கொடுக்கிறது. மார்ச் 2020-க்குள், இந்தியாவில் 650 ஃபாஸ்ட் சார்ஜர்களை அமைக்கும் முயற்சியிலும் இருக்கிறது டாடா மோட்டார்ஸ். MG ZS EV மற்றும் ஹூண்டாய் கோனாவை ஒப்பிடும்போது, தற்போது இந்தியாவில் விலை குறைவாகக் கிடைக்கும் ஒரு பிரீமியம் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்த நெக்ஸான் EV.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு