கட்டுரைகள்
பேட்டிகள்
Published:Updated:

ஒரு கார், ஒரு கனவு! நல்ல கனவுகள் நனவாகும்!

மோட்டார் விகடன்
பிரீமியம் ஸ்டோரி
News
மோட்டார் விகடன்

மோட்டார் விகடன்

“உனக்கு கத்தி தூக்கத்தான் தெரியும். எனக்கு செய்யவே தெரியும்” என்பார் திருப்பாச்சி விஜய். அதுபோல, கார் ஓட்டுவதைவிட டிசைன் செய்யத் தெரிந்தால் கெத்துதானே? கார் டிசைன்மீது ஆர்வம் உள்ளவர்களுக்காக, மே 11 முதல் 15 வரை மோட்டார் விகடன் மற்றும் AYA Design Academy இணைந்து 5 நாள் கார் டிசைன் வொர்க்‌ஷாப் நடத்தினார்கள். இந்தப் பயிற்சி ஜூம் செயலி மூலம் நடைபெற்றது.

கார்  டிசைன்
கார் டிசைன்

பள்ளி, கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், டிசைனர்கள், சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள், பன்னாட்டு நிறுவனங்களின் மேலாளர்கள் என 130 பேர்... வயது, பாலினம் மாநிலம், நாடு என அனைத்தையும் கடந்து பங்கேற்றார்கள்.

சத்தியசீலன்
சத்தியசீலன்

“எனக்கு 15 வயசு. போர்ஷ், மஸராட்டி கார்கள் ரொம்பப் பிடிக்கும். ஒரு கார் வரைஞ்சா போதும்; அதுதான் டிசைன்னு நெனச்சிட்டு இருந்தேன். ஆனா, ஒன் பாயின்ட் பெர்ஸ்பெக்டிவ், டூ பாயின்ட் பெர்ஸ்பெக்டிவ், வேனிஷிங் பாயின்ட் என்று இந்தப் பயிலரங்கத்தில் அடிப்படையிலிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்” என்கிறார் ஜெய் பிரஜின். இப்போது இவர் ‘தினமும் தூங்கச் செல்வதற்கு முன்பு ஒரு காரை வரையாமல் படுக்கைக்குச் செல்வது இல்லை’ எனப் பெருமைப் பட்டுக்கொள்கிறார் இந்தச் சிறுவனின் தாய்.

ஜெய் பிரஜின், சரவணன், யஷ்வா சுரேந்திரன்
ஜெய் பிரஜின், சரவணன், யஷ்வா சுரேந்திரன்

சென்னை SSN கல்லூரியில் துணைப் பேராசிரியராக இருக்கும் சரவணன், “என் மகனை இன்ஜினீயரிங், மெடிசன் தவிர வேறு என்ன படிக்க வைக்கலாம்னு குழப்பம். இந்த வொர்க் ஷாப்புக்குப் பிறகு டிசைனில் இப்படி ஒரு ஃபீல்டு இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டேன். என் மகனுக்காகத்தான் வந்தேன். ஆனால், எனக்கும் வரைவது பிடிக்கும். வரைவதில் எவ்வளவு நுணுக்கங்கள் இருக்குன்னு இதுல கத்துக்கிட்டேன்” என்கிறார். துபாயில் இருக்கும் 14 வயது யஷ்வா சுரேந்திரன், “மஸ்டாங் கார் எப்படி வரையணும்னு சத்தியசீலன் சார் சொல்லிக்கொடுத்தது எனக்கு ரொம்பப் பிடிச்சி ருந்துச்சு. மஸ்டாங் வழக்கமா ஒரு கூபேவாதான் இருக்கும்; நான் அதை மாற்றி கன்வெர்ட்டி பிளா வரைஞ்சேன். சார் என்னைப் பாராட்டினார். எனக்குச் சந்தோஷமா இருந்தது” என்று மழலைக்குரல் மாறாமல் மகிழ்ந்தார் யஷ்வா.

ஒரு கார், ஒரு கனவு! நல்ல கனவுகள் நனவாகும்!

சென்னையைச் சேர்ந்த சங்கீதா, திருப்தியான குரலில் பேசினார், “ஒரு நிறுவனத்தில் ஏற்கெனவே டிசைன் டிபார்ட் மென்ட்டில் இருக்கிறேன். எனக்கு மெக்கானிக்கல் பேக்ரவுண்டு கிடையாது. டிசைன் பற்றி இன்னும் கொஞ்சம் ஐடியா கிடைக்கும்னு நெனச்சுத்தான் இந்தப் பயிலரங்கத்துக்கு வந்தேன். கார் டிசைன் பற்றி மட்டும்தான் கற்றுக்கொடுப்பார்கள் என நினைத்து வந்தேன். ஆனால் டிசைனின் அடிப்படையிலிருந்தே கற்றுக்கொடுத்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது. வொர்க்‌ ஷாப் நடந்தது இணையம் வழியே முகம் பார்த்துப் பயில்வதைப்போல அவ்வளவு புரொஃபஷனலா இருந்தது” என்றார்.

கற்றல் என்பது ஒரு கனவைப்போலத் தானாக நிகழ வேண்டும் என்பார்கள். ஒரு கார், ஒரு கனவு... சில பயிற்சியுடன் தானாக நிகழும்.

ஒரு கார், ஒரு கனவு! நல்ல கனவுகள் நனவாகும்!

பதிவு செய்ய: http://bit.ly/mvcardesign என்ற இணையதள முகவரியில் பணத்தைச் செலுத்திப் பதிவு செய்துகொள்ளவும்.