Published:Updated:

எர்டிகா! பழசு-புதுசு என்ன வித்தியாசம்?

vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

எர்டிகாவை புத்தம் புது ஃபேஸ்லிஃப்ட்டில் கொண்டு வந்திருக்கிறது மாருதி சுஸூகி. ஆரம்ப விலையே 8.35 எக்ஸ் ஷோரூம் விலையில் வந்திருக்கிறது எர்டிகா. பழசுக்கும் புதுசுக்கும் நறுக் சுறுக்கென்று சில வித்தியாசங்களைப் பார்க்கலாம்.

எர்டிகா! பழசு-புதுசு என்ன வித்தியாசம்?

எர்டிகாவை புத்தம் புது ஃபேஸ்லிஃப்ட்டில் கொண்டு வந்திருக்கிறது மாருதி சுஸூகி. ஆரம்ப விலையே 8.35 எக்ஸ் ஷோரூம் விலையில் வந்திருக்கிறது எர்டிகா. பழசுக்கும் புதுசுக்கும் நறுக் சுறுக்கென்று சில வித்தியாசங்களைப் பார்க்கலாம்.

Published:Updated:
vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

ஒரு பட்ஜெட் எம்பிவி வாங்குபவர்கள் இப்படி முழிப்பதைப் பார்த்திருக்கிறேன். ‘‘எர்டிகாவைத் தவிர்த்து வேற எதுனா பட்ஜெட் விலையில் எம்பிவு வேற எதுவும் இல்லையா!’’ என்று பயங்கர டைலமாவில் குழம்புவார்கள். ஓரளவு இது உண்மைதான். பராமரிப்பு குறைவான, விலைக்கேற்ற தரம் வாய்ந்த எம்பிவி வாங்க வேண்டும் என்றால், மாருதி சுஸூகி எர்டிகாதான் நினைவில் வந்து போகிறது. அப்படிப்பட்ட எர்டிகாவை புத்தம் புது ஃபேஸ்லிஃப்ட்டில் கொண்டு வந்திருக்கிறது மாருதி சுஸூகி. ஆரம்ப விலையே 8.35 எக்ஸ் ஷோரூம் விலையில் வந்திருக்கிறது எர்டிகா. பழசுக்கும் புதுசுக்கும் நறுக் சுறுக்கென்று சில வித்தியாசங்களைப் பார்க்கலாம்.

டிசைன்

ஓவர்ஆலாக காரின் டிசைனை மாற்றிவிடவில்லை மாருதி. அந்த எம்பிவி டிசைனிலும், அளவுகோல்களிலும்கூடப் பெரிதாக மாறிவிடவில்லை. அதாவது, பக்கவாட்டில் இருந்தெல்லாம் புது எர்டிகாவைக் கண்டுபிடிக்க முடியாது. சட்டென புது எர்டிகாவைக் கண்டுபிடிக்க ஒரே வழி – முன் பக்க கிரில்.

எர்டிகா! பழசு-புதுசு என்ன வித்தியாசம்?

அந்த எம்பெட் செய்யப்பட்ட Winged க்ரோம் ட்ரிம், அலாய் வீல்களுக்கு டூயல் டோன், டெயில் கேட்டில் சில சின்ன க்ரோம் வேலைப்பாடுகள். அம்புட்டுதான் வெளிப்பக்க மாற்றம். மற்றபடி புது எர்டிகா, சில்வர் மற்றும் பிரெளன் என இரண்டு எக்ஸ்ட்ரா நிறங்களுடன் கிடைக்கிறது. இப்போது மொத்தம் 6 கலர்களில் எர்டிகாவைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

எர்டிகா! பழசு-புதுசு என்ன வித்தியாசம்?

இன்டீரியர் மற்றும் வசதிகள்

உள்பக்கமும் சட்டெனக் கண்டுபிடித்து விட முடியாது. டேஷ்போர்டு டிசைன் மற்றும் இன்டீரியர் லே–அவுட் எதுவும் பெரிதான மாற்றங்களுக்கு உள்ளாகவில்லை. பழசில் Wood Finish இருந்தாலும், புது எர்டிகாவில் இருக்கும் டேஷ்போர்டு, Teak Faux Wood Finish வேலைப்பாட்டுடன் பளிச்சென இருக்கிறது. சீட்களுக்கும் டூயல் டோன் அப்ஹோல்சரி கொண்ட சீட்கள் கொடுத்திருக்கிறார்கள். பழசில் சிங்கள் டோன்தான்.

இன்னொரு சொல்லத்தக்க மாற்றம் – எர்டிகாவின் டாப் எண்டான ZXI+ ட்ரிம்மில் உண்டு. 7.0 இன்ச் ஸ்மார்ட் ப்ளே ப்ரோ டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே கனெக்ட்டிவிட்டி உண்டு.

எர்டிகா! பழசு-புதுசு என்ன வித்தியாசம்?

எர்டிகா இப்போது கனெக்டட் கார். Suzuki Connect எனும் ஆப் மூலம் கனெக்ட் செய்து கொள்ளலாம். 40 வகையான வசதிகள் உண்டு. ஆன்போர்டு வாய்ஸ் அசிஸ்டன்ஸ் சிஸ்டமும் இருக்கிறது. க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்ஸ், ரியர் பார்க்கிங் கேமரா, தானாக மடியும் எலெக்ட்ரிக்கல் ORVMs, கூல்டு கப் ஹோல்டர்ஸ், மூன்று வரிசைகளுக்கும் ஏசி வென்ட்கள் என்று எர்டிகா இப்போது ப்ரீமியம் லெவலில் கலக்குகிறது.

எர்டிகா! பழசு-புதுசு என்ன வித்தியாசம்?

பாதுகாப்பிலும்தான். 4 காற்றுப்பைகள், ABS உடன் EBD மற்றும் BA (Brake Assist), ஹில் ஹோல்டு அசிஸ்ட், ESP மற்றும் ISOFIX மவுன்டட் சீட்கள் என்று எல்லா வசதிகளும் உண்டு.

பானெட்டுக்குள்ளே மாறியிருக்கா?

எர்டிகாவின் மிக முக்கியமான மாற்றமே பானெட்டுக்கு உள்ளேதான் நடந்திருக்கிறது. ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம் கொண்ட 1.5லிட்டர் டூயல்ஜெட் இன்ஜின், புது எர்டிகாவுக்குள் புதிதாய் முளைத்திருக்கிறது. இதன் பவர் 103bhp மற்றும் 136.8Nm டார்க். பழசில் இருந்ததும் 1.5 லிட்டர் இன்ஜின்தான்; ஆனால் புதுசில் 2bhp பவரையும், 1.2Nm டார்க்கையும் குறைத்திருக்கிறார்கள். டூயல் ஜெட் எனும் பெயருக்கு ஏற்றபடியே – ஒவ்வொரு சிலிண்டருக்கும் இரண்டு இன்ஜெக்டர்கள் இருப்பதால்… முன்பைவிட புது எர்டிகா ஓட்டுவதற்குக் கொஞ்சம் பெப்பி ஆகவும், மைலேஜிலும் பட்டையைக் கிளப்புகிறது.

இந்தப் புது எர்டிகாதான் டூயல் ஜெட் இன்ஜின் கொண்டு மாருதியில் இருந்து வெளிவரும் முதல் கார். எர்டிகா, பயன்பாட்டுக்குப் பெயர் பெற்ற கார். அதனால், இதில் CNG மாடலும் கொடுத்திருக்கிறார்கள். சிஎன்ஜி மாடலில் இருப்பதும் இதே டூயல் ஜெட் இன்ஜின்தான். ஆனால் இதன் பவர் நன்கு குறைகிறது. பவர் 87bhp, டார்க் 121.5Nmதான்; இது சிஎன்ஜியில் ஓடும்போது கிடைப்பது. இதுவே பெட்ரோலில் ஓடினால் 100 bhp பவரும், 136 NM டார்க்கும் கிடைக்கிறது.

எர்டிகா! பழசு-புதுசு என்ன வித்தியாசம்?

கியர்பாக்ஸில் என்ன மாறியிருக்கு?

வழக்கம்போல, பழசு மாதிரியே இந்தப் புது எர்டிகாவிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உண்டு. இதன் மைலேஜாக 20.51 கிமீ–யை க்ளெய்ம் செய்கிறது மாருதி. வாவ்!

ஆட்டோமேட்டிக்கைப் பொருத்த வரை 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் இருந்தது தெரியும். அது ஓட்டுதில் பெப்பியாக இல்லை என்று சொன்னார்கள் வாடிக்கையாளர்கள். இனிமேல் அந்தக் குறை இருக்காது. காரணம், புதுசில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுத்திருக்கிறது மாருதி. அதுவும் பேடில் ஷிஃப்டர்கள் இருப்பதால், பெரிய ப்ரீமியம் கார்கள்போல் உற்சாகமாக ஓட்டலாம் எர்டிகாவை. இதன் மைலேஜாக மாருதி சொல்வது 20.30 கிமீ. சிஎன்ஜி மாடலில் இருப்பது 5 ஸ்பீடு மேனுவல் மட்டும்தான். இதன் மைலேஜ் 26.11 கிமீ என்கிறது மாருதி. விற்கும் பெட்ரோல் விலைக்குப் பேசாமல் சிஎன்ஜிக்குப் போய் விடுவது நல்லது என்றே தோன்றுகிறது. சிஎன்ஜி மாடலின் எக்ஸ் ஷோரூம் விலை 11.54 லட்சம் வருகிறது.

போட்டியாளர்கள் யார்?

கியா காரன்ஸ், மஹிந்திரா மராத்ஸோ, இதன் சகோதர காரான XL6 – இவற்றுடன்தான் கடுமையாகப் போட்டி போடுகிறது எர்டிகா. கட்டுப்படியாகும் விலை, பராமரிப்பு, மைலேஜ், வசதிகள் என்று எல்லாவற்றிலும் இந்த செக்மென்ட்டில் எர்டிகா ஒரு படி மேலேயே இருக்கிறது.விலை: 8.35 லட்சம் முதல் 12.79 லட்சம் வரை (எக்ஸ் ஷோரூம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism