Published:Updated:

2022 Mercedes Benz `C' Class: Test Drive பண்ணாமயே 1000 பேர் Book பண்ணிட்டாங்க! அப்படி என்ன ஸ்பெஷல்?

பென்ஸ் நிறுவனத்தின் மிட் லக்ஸூரி செடான் காரான 'Mercedes Benz 'C' Class' 2022ம் ஆண்டிற்கான புதிய அப்டேட்டுடன் அறிமுகமாகியுள்ளது. இதன் சிறப்பங்சங்கள் பற்றியும், புதிய அப்டேட்கள் பற்றியும் விரிவாக மோட்டார் விகடன் உடன் பகிர்ந்து கொண்டார் பென்ஸின் உயர் அதிகாரி சந்தோஷ்.

2022-ம் ஆண்டிற்கான புதிய அப்டேட்டுடன் அறிமுகமாகியுள்ளது பென்ஸ் நிறுவனத்தின் மிட் லக்ஸூரி செடான் காரான 'Mercedes Benz 'C' Class'. ஏற்கெனவே இந்தக் காரின் முந்தைய மாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது சென்னை மவுண்ட் ரோடு சாலையில் உள்ள பிரபல பென்ஸ் ஷோரூமில் காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்காமலே சுமார் 1000 பேர் இந்தக் காரை முன்பதிவு செய்துள்ளனர். அப்படி என்ன இந்தக் காரில் ஸ்பெஷல்? ஏன் இந்தக் கார் மீது இவ்வளவு காதல்? - விளக்குகிறார் பென்ஸின் உயர் அதிகாரி சந்தோஷ்.

மோட்டார் விகடன் உடனான நேர்காணலில் பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் பென்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகமாக உள்ளது என்று கூறினார். குறிப்பாக சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணிசெய்யும் இளைஞர்கள் லக்ஸூரி கார்கள் வாங்குவதில் பெரிதும் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் அதிலும் முதல்முறையாக பென்ஸ் போன்ற லக்ஸூரி கார்கள் வாங்குபவர்கள் இங்கு அதிகம் என்று கூறினார். சரியாகச் சொல்லவேண்டுமென்றால் இந்தப் புதிய 'Mercedes Benz 'C' Class' காரை முன்பதிவு செய்த 1000 பேர்களில் 70% பேர் பென்ஸின் முந்தைய வாடிக்கையாளர்கள், 30% பேர் புதிதாக பென்ஸ் வாங்குபவர்கள். மேலும் காரின் சிறப்பம்சங்கள் பற்றியும் அதன் புதிய அப்டேட்கள் பற்றியும் விரிவாக மோட்டார் விகடன் உடன் பகிர்ந்து கொண்டார் சந்தோஷ்.