Published:Updated:

``டீகூட கிடைக்கல... திருட்டு பயம் வேற...'' - சரக்கு வாகன டிரைவர்களின் கொரோனா கால வாழ்க்கை!

லாரி
News
லாரி

வெள்ளை உடை, காக்கி உடையுடன் சேர்ந்து சில அழுக்குச் சட்டையும் லுங்கிகளும் கூட இந்தக் கொரோனா காலத்தில் நமக்காக உழைக்கிறார்கள்.

மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை, தூய்மைப் பணியாளர்கள் எல்லோரையும்போல இவர்களின் தேவையும் மிக அதிகம். இவர்களுக்குத் துணிச்சலும் அதிகம்.

பேரிடர் தாக்கும் ஒவ்வொருமுறையும் உணவுப் பற்றாக்குறை தொற்றிக்கொண்டு வரும். கொரோனாவைப் பொறுத்தவரை இந்தப் பிரச்னை இல்லை. உணவுக் கிடங்கில் நமக்குத் தேவையான அளவு உணவு இருக்கிறது. விவசாயிகள் களத்தில் நின்று உழைக்கிறார்கள். எல்லாவற்றையும் கொண்டு வந்து சேர்க்க, தைரியமான கரங்கள் ஸ்டீயரிங் பிடித்தபடி களத்தில் நிற்கின்றன.

அரிசி, ஜவ்வரிசி, மஞ்சள்!
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலைப் பகுதிகளிலிருந்து அரிசி, சேலத்திலிருந்து ஜவ்வரிசி, ஈரோட்டிலிருந்து மஞ்சள் போன்ற பொருள்கள் எல்லாம் தொடர்ந்து வெளி மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றன.
லோடு இல்லாமல் நின்றிருக்கும் லாரிகள்
லோடு இல்லாமல் நின்றிருக்கும் லாரிகள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தமிழ்நாட்டில் சேலம் என்பது லாரி ஓட்டுநர்களுக்கான மையம். கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலைப்பகுதிகளில் இருந்து அரிசி, சேலத்தில் இருந்து ஜவ்வரிசி, ஈரோட்டில் இருந்து மஞ்சள் போன்ற பொருள்கள் எல்லாம் தொடர்ந்து வெளி மாநிலங்களுக்குச் சென்றுகொண்டிருக்கின்றன. இதைக் கொண்டுசெல்லும் டிரைவர்கள் வரும்போது அங்கு உற்பத்தியாகும் சில அத்தியாவசியப் பொருள்களை இங்கே கொண்டு வருகிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அத்தியாவசியம் அல்லாத மற்ற தொழில் சார்ந்த பொருள்களை ஏற்றி இறக்கும் லாரி டிரைவர்கள், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடனேயே வாகனங்களைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்திவிட்டு சொந்த ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள். சிலர் வழியில் ஆங்காங்கே ஊர்களிலேயே மாட்டிக்கொண்டுள்ளார்கள். சில லாரி டிரைவர்களைத் தொடர்புகொண்டு தற்போதைய நிலை குறித்தும் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் பேசினோம்.

ஓட்டுநர் சந்திரசேகர்
ஓட்டுநர் சந்திரசேகர்
ஹோட்டல்கள் இல்லை. கொண்டு வந்த சாப்பாடு, மண்ணெண்ணெய் எல்லாம் தீந்துபோச்சு. தண்ணி கிடைக்கல...
டிரைவர் சந்திரசேகர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"மும்பைக்குக் கல்லுமாவு ஏத்திக்கிட்டுப் போயிட்டு இருந்தேன். கர்நாடகா தாண்டுறதுக்குள்ள நாடு முழுக்க ஊரடங்கு அறிவிச்சுட்டாங்க. ’மும்பைக்குள்ள இப்போ வரமுடியாது, பொருளை இறக்க மாட்டோம்’னு ஃபேக்ட்ரிகாரங்க சொல்லிட்டாங்க. வேற வழி இல்லாம ஹூப்லியில வண்டிய பார்க் பண்ணிட்டுத் தங்கிட்டோம். 10 நாள் அங்கேயே இருந்தோம், ஹோட்டல் இல்லை. கொண்டு வந்த சாப்பாடு, மண்ணெண்ணெய் எல்லாம் தீர்ந்துபோச்சு. தண்ணி கிடைக்கல. பொருளுக்கும் பாதுகாப்பு இல்லைனு தெரிஞ்சுது.

லாரி
லாரி
(கோப்புப் படம்)

ஓனர்கிட்ட பேசி, வண்டிய திரும்ப நம்ம ஊருக்கே கொண்டுவந்துட்டேன். 2 நாள்தான் ஆகுது நான் ஊருக்கு வந்து. இப்போ பத்திரமா இருக்கேன். இந்தச் சரக்கை இறக்குற வரைக்கும் என்னால வேற சரக்கு ஏத்தவும் முடியாது. திரும்பவும் எல்லாம் சகஜமானாதான் வருமானம்" என்று பெருமூச்சு விடுகிறார் சந்திரசேகர்.

மணி, சேலத்தைச் சேர்ந்தவர். சொந்த லாரி வைத்திருக்கிறார். நாம் அழைத்தபோது மகாராஷ்டிரா தாண்டிச் சென்றுகொண்டிருப்பதாகச் சொல்கிறார்.

"நாங்க கொண்டுவந்தது ஃபேக்டரி மெட்டீரியல். 14-ம் தேதிக்கு மேலதான் இறக்குவோம்னு சொல்லிட்டாங்க. வண்டிய பத்திரமா ஒரு தாபாவில் பார்க் பண்ணிட்டு அரியலூர் வந்த லாரி ஒண்ண பிடிச்சு திரும்ப வந்துட்டேன். இப்போ நம்ம பார்ட்டி, போன் பண்ணி, லாக்டவுன் முடியிற மாதிரி தெரியலை ஃபேக்டரியை பாதி ஆட்களை வெச்சு நடத்திக்கச் சொல்லியிருக்காங்க. பொருளை உடனே கொண்டுவாங்கனு சொல்லிட்டாங்க. திரும்பவும் வந்து வண்டிய எடுத்துக்கிட்டுப் போயிட்டு இருக்கேன்" என்கிறார்.

லாரி ஓட்டுநர் மனி
லாரி ஓட்டுநர் மனி
கிருஷ்ணகிரியில் இருந்து ஜெய்ப்பூருக்கு மாங்காய் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்றில் இந்தூர் சென்று, தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு ஹரியானா செல்கிறார் மணி.

"20 நாளுக்குத் தேவையான பொருள் இருக்கு. லாரியிலேயே சமைச்சிக்குவோம். ரோடு எல்லாம் காலியா இருக்கிறதால மகாராஷ்டிராவில் கொஞ்சம் திருட்டு பயம் இருக்கும். மற்றபடி எந்தப் பிரச்னையும் இல்லை. சாப்பாட்டைவிட டீ எங்களுக்கு ரொம்ப முக்கியம். ஊர்ல குடிச்சது, இப்போ வரைக்கும் அடுத்த டீ கிடைக்கலை" என்று சொல்லிச் சிரித்தார்.

காலியாக நிற்கும் லாரிகள்
காலியாக நிற்கும் லாரிகள்

ஹரியானாவில் பொருளை இறக்கிவிட்டு, 600 கி.மீ காலியாக வந்து மத்தியப்பிரதேசத்தில் பூண்டு, வெங்காயம் மாதிரி உணவுப் பொருளை ஏற்றிக்கொண்டு தமிழ்நாடு வரவேண்டும் என்கிறார் மணி.

தற்போது வெளிமாநிலங்களுக்குச் சென்றுவரும் ஓட்டுநர்கள் அவர்களின் சொந்தப் பாதுகாப்பிலேயே சென்றுவருகிறார்கள். தங்களுக்கான முகக் கவசங்கள் கூட அவர்களேதான் வாங்கிக்கொள்ளவேண்டும். யாரும் வாகனத்தை விட்டு வெளியே இறங்குவதில்லை. ஸ்டவ், பாத்திரம், சமையல் பொருள் என எல்லாவற்றையும் அவர்களே கொண்டுசெல்கிறார்கள். திருட்டு பயம் இருப்பதால் வழியில் வாகனங்களை நிறுத்துவதில்லை. இது அவர்களுக்குப் புதிதில்லை. வழக்கம்போல சமூகத்தை விட்டு விலகியே வாழ்கிறார்கள்.

நெடுஞ்சாலை வாழ்க்கை
நெடுஞ்சாலை வாழ்க்கை
(கோப்புப் படம்)
1.5 லட்சம்
தமிழ்நாட்டில் இருக்கும் 4.5 லட்சம் லாரி, டிரக்குகளில் 1.5 லட்சம் வாகனங்கள் தற்போது இயங்கிவருகின்றன.

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் சென்னகேசவனிடம் பேசினோம். "சுங்கச்சாவடி கட்டணம் கேன்செல் செய்தது, வாகனங்களை நிறுத்தக்கூடாது என்ற விதிமுறையைக் கொண்டுவந்தது, வாகனத்தின் சான்றிதழ், இன்ஷூரன்ஸ் ஆகியவற்றின் கடைசி தேதியை நீட்டித்து அறிவித்தது என அத்தியாவசியப் பொருள்கள் நேரத்துக்குக் கிடைக்கவேண்டும் என்பதில் அரசு கவனமாக இருக்கிறது. எங்களுடைய டிரைவர்களும் அதே கவனத்துடன் இருக்கிறார்கள்" என்றார்.

60,000
தமிழ்நாட்டில் 4.5 லட்சம் டிரக்குகள் இருக்கின்றன. இதில், பெட்ரோல், டீசல், LPG போன்றவற்றை ஏற்றிச்செல்லும் 60,000 வாகனங்கள் தொடர்ந்து இயங்கிவருகின்றன.
லாரி
லாரி

’தொழிற்துறை முடங்கியிருப்பதால் 25 சதவிகிதம் லாரிகள் மட்டும் தற்போது இயங்குகின்றன. தமிழ்நாட்டில் 4.5 லட்சம் டிரக்குகள் இருக்கின்றன. இதில், பெட்ரோல், டீசல், LPG போன்றவற்றை ஏற்றிச்செல்லும் 60,000 வாகனங்கள் தொடர்ந்து இயங்கிவருகின்றன. மற்ற லோடு ஏற்றும் வாகனங்கள் கிட்டத்தட்ட 3.9 லட்சம் இருக்கும். இதில் உணவுப் பொருள் எற்றிச்செல்லும்பணியில் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் வாகனங்கள் தற்போது செயல்பாட்டில் இருக்கின்றன. இதுபோக, கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையில் செல்லும் மினி லாரிகளும் தற்போது இயங்கிவருகின்றன. மீதம் உள்ள வாகனங்கள் அப்படியே நிற்கின்றன. லாரிகள் அப்படியே நிற்கும் வரை வருமானம் இல்லை" என்று வருந்துகிறார் சென்னகேசவன்.

இப்போது ஒவ்வொரு லாரி உரிமையாளர்களுக்கும் கிட்டத்தட்ட 20,000 வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கும். நாளொன்றுக்கு லாரியின் பார்க்கிங் மட்டுமே 150 ரூபாய்.

ஐடிசி, பார்லே, பிஸ்லெரி போன்ற சில பெரிய நிறுவனங்கள் மட்டும் தங்களுடைய கான்ட்ராக்ட் டிரைவர்களுக்கு 30 சதவிகிதம் கூடுதல் வருமானம் தருவதாகக் கூறியுள்ளார்கள். மற்றபடி பெரும்பாலானவர்களுக்குக் கூடுதல் தொகையும் கிடைப்பதில்லை. இப்போது ஒவ்வொரு லாரி உரிமையாளர்களுக்கும் கிட்டத்தட்ட 20,000 வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கும். நாளொன்றுக்கு லாரியின் பார்க்கிங் மட்டுமே 150 ரூபாய்.

மணாலி-லே நெடுஞ்சாலை
மணாலி-லே நெடுஞ்சாலை
(கோப்புப் படம்)

எரிபொருள் நிலையங்களில் வேலை செய்பவர்களுக்கு அந்தந்த ஆயில் நிறுவனங்கள் கொரோனா பாதிப்பு வந்தால் 5 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு தருவதாகக் கூறியிருக்கிறார்கள். அதே போல இப்படி ஒரு கடினமான நேரத்தில் தங்களுடைய பாதுகாப்பை அடமானம் வைத்து உழைக்கும் இந்த ஓட்டுநர்களுக்கு அரசு இழப்பீடு அல்லது இன்ஷூரன்ஸ் ஏதாவது அறிவித்தால் உதவியாக இருக்கும். உணவுத் தட்டுப்பாடு எனும் சூழலுக்குள் சிக்காமல் இருக்க லாஜிஸ்டிக் செயின் அறுபடாமல் இருப்பது அவசியம். அதனால், தமிழக அரசு இவர்களின் தேவைகளையும் கொஞ்சம் கவனிக்கவேண்டும்.