Published:Updated:

2020-ல் புதிதாக வரப்போகும் கார்கள் என்னென்ன?

ஒவ்வொரு காரின் ஸ்பெஷல் அம்சங்கள் என்ன, அவை எப்போது ஷோரூமுக்கு வரும் என்ற தகவல்களும் அதில் அடக்கம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதிய கார் வாங்கும் திட்டத்தில் இருக்கிறீர்களா. ஆனால், நீங்கள் வாங்க நினைத்ததைவிடச் சிறப்பான ஆப்ஷன் வரப்போகிறதோ என்ற வருத்தம் இருக்கிறதா. இனி அந்தக் கவலை வேண்டாம்... அடுத்த சில மாதங்களில் இந்தியச் சாலைகளில் களமிறங்கும் கார்களின் (பேஸ்லிஃப்ட் உட்பட) பட்டியல் இதோ...

ஒவ்வொரு காரின் ஸ்பெஷல் அம்சங்கள் என்ன, அவை எப்போது ஷோரூமுக்கு வரும் என்ற தகவல்களும் அதில் அடக்கம்.

ஆடி Q3

Q3
Q3
Audi

இன்ஜின் (பெ/டீ): 1.5 லிட்டர்/2.0 லிட்டர்

பவர் (பெ/டீ): 150bhp/150bhp

உத்தேச விலை: 40-45 லட்ச ரூபாய்

அறிமுகம்: 2020

போட்டி: GLA, XC40, X1

இந்த இரண்டாம் தலைமுறை எஸ்யூவி, முன்பைவிட ஸ்போர்ட்டியான டிசைனைக் கொண்டிருக்கிறது. கேபினிலும் இடவசதி அதிகரித்திருப்பதுடன், Virtual Cockpit இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆப்ஷனலாக வழங்கப்படலாம்; மேலும் Adaptive Damper தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா, தானாகக் காரைப் பார்க் செய்துகொள்ளும் பார்க் அசிஸ்ட் போன்ற சிறப்பம்சங்களும் இடம்பெறும். டர்போசார்ஜர் பொருத்தப்பட்ட இன்ஜின்கள் இருப்பதால், அதிரடியான பர்ஃபாமன்ஸை எதிர்பார்க்கலாம்.

ஆடி A4 பேஸ்லிஃப்ட்

இன்ஜின் (பெ/டீ): 2.0 லிட்டர்/2.0 லிட்டர்

பவர் (பெ/டீ): 190bhp/190bhp

உத்தேச விலை: 41-47 லட்ச ரூபாய்

அறிமுகம்: Early 2020

போட்டி: C-க்ளாஸ், 3 சீரிஸ், XE, S60

A4 Facelift
A4 Facelift
Audi

தற்போதைய மாடல் சில காலமாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால், டிசைன் - தொழில்நுட்பம் - இன்ஜின் ஆகியவற்றில் சில மாற்றங்களைச் செய்ய முடிவெடுத்திருக்கிறது ஆடி. காரின் அதிக நீளத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில், கேபினில் அதிக இடவசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் Gran Coupe

இன்ஜின் (பெ/டீ): 1.5 டர்போ, 2.0 லிட்டர்/2.0 லிட்டர்

பவர் (பெ/டீ): 140bhp, 190bhp/140bhp, 190bhp

உத்தேச விலை: 37 லட்ச ரூபாய்

அறிமுகம்: Late 2020

போட்டி: A3, CLA

BMW 2 Series
BMW 2 Series
Autocar India

இணைய உலகில் வைரலாகப் பரவியிருக்கும் இதன் ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, 4 கதவுகளைக் கொண்ட இந்த கார், இந்த நிறுவனத்தின் விலை அதிகமான மாடல்களை நினைவுபடுத்தக்கூடிய தோற்றத்தைக் கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது (8 சீரிஸ் Gran Coupe-வின் மினியேச்சர்). பிஎம்டபிள்யூவின் பிரத்யேகமான Kidney கிரில், Double Barrel ஹெட்லைட்ஸ், அறுகோண வடிவ Illuminated Rings ஆகிய டிசைன் அம்சங்கள் இங்கும் தொடர்கின்றன. புதிய மாடல் என்பதால், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் பெரிய டச் ஸ்க்ரீன் போன்ற லேட்டஸ்ட் வசதிகள் இருக்கலாம். உயரமானவர்களுக்கும் ஏற்ற லெக்ரூம் கிடைக்கும் என்றாலும், Sloping ரூஃப் காரணமாக ஹெட்ரூம் குறைவாக இருக்கலாம். வழக்கமான 4 சிலிண்டர் இன்ஜின்கள் தவிர, 3 சிலிண்டர் இன்ஜினும் வழங்கப்படும் என்பது ஹைலைட். எனவே குறைவான விலையை எதிர்பார்க்கலாம்.

ஹூண்டாய் டூஸான் பேஸ்லிஃப்ட்

இன்ஜின் (பெ/டீ): 2.0 லிட்டர்/2.0 லிட்டர்

பவர் (பெ/டீ): 150bhp/185bhp

உத்தேச விலை: 22-28 லட்ச ரூபாய்

அறிமுகம்: Late 2019

போட்டி: காம்பஸ், டிகுவான்

Tuscon Facelift
Tuscon Facelift
Hyundai

பேஸ்லிஃப்ட் என்றாலும், முன்பைவிடப் பிரீமியமாக இந்த டூஸான் காட்சியளிக்கும். பெரிய அலாய் வீல்கள் மற்றும் LED லைட்டிங் அதற்கான உதாரணம் எனலாம். இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் டச் ஸ்க்ரீன் சிஸ்டத்தில் முன்னேற்றங்கள் இருக்கும். டீசல் இன்ஜின் BS-6 மாசு விதிகளின்படி டியூன் செய்யப்படும் என்பதுடன், அதில் Mild Hybrid தொழில்நுட்பம் சேர்க்கப்படும்.

ஜீப் காம்பேக்ட் எஸ்யூவி

இன்ஜின் (பெ/டீ): 1.4 லிட்டர்/1.5 லிட்டர்

உத்தேச விலை: 8-12 லட்ச ரூபாய்

அறிமுகம்: Late 2020

போட்டி: விட்டாரா, நெக்ஸான், எக்கோஸ்போர்ட், XUV 3OO, வென்யூ

Renegade
Renegade
Jeep

தனது சிறிய எஸ்யூவியை, அதிகமாக நம்புகிறது ஜீப். எனவே தனக்குரித்தான ஆஃப் ரோடிங் திறன், இந்த காம்பேக்ட் எஸ்யூவியிலும் இருக்கும் என்பது பெரிய ப்ளஸ். மேலும் ஃப்ரன்ட் வீல் டிரைவ் தவிர, 4 வீல் டிரைவ் அமைப்பு ஆப்ஷனலாக வழங்கப்படலாம். இன்ஜின்கள் பற்றிய தகவல் கிடைக்கப்பெறவில்லை.

கியா காம்பேக்ட் எஸ்யூவி

இன்ஜின் (பெ/டீ): 1.0 லிட்டர்/1.5 லிட்டர்

உத்தேச விலை: 6-9 லட்ச ரூபாய்

அறிமுகம்: Early 2020

போட்டி: விட்டாரா, நெக்ஸான், எக்கோஸ்போர்ட், XUV 3OO, வென்யூ

Stonic
Stonic
Kia

செல்ட்டோஸ் வாயிலாகத் தனது இந்திய இன்னிங்ஸை கியா வெற்றிகரமாகத் தொடங்கியிருக்கிறது. அடுத்தபடியாக வென்யூவை அடிப்படையாகக் கொண்டு, ஒரு காம்பேக்ட் எஸ்யூவியை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. வித்தியாசமான டிசைன், ஸ்டைலான கேபின், ஸ்போர்ட்டியான சஸ்பென்ஷன் செட்-அப் என அது பல மாற்றங்களைக் கொண்டிருக்கும். பெட்ரோலில் மேனுவல் மற்றும் DCT கியர்பாக்ஸ் இருக்கும் என்பதுடன், டீசல் இன்ஜின் ஆப்ஷனும் உள்ளது.

மஹிந்திரா XUV 5OO

இன்ஜின் (பெ/டீ): 2.0 லிட்டர் டர்போ/2.2 லிட்டர்

பவர் (பெ/டீ): 140bhp/155bhp

உத்தேச விலை: 13-19 லட்ச ரூபாய்

அறிமுகம்: Mid 2020

போட்டி: ஹெக்டர், ஹேரியர், செல்ட்டோஸ், கிரெட்டா, கிக்ஸ், கேப்ச்சர்

XUV 5OO
XUV 5OO
Mahindra

ஃபோர்டு தனது புதிய மிட்சைஸ் எஸ்யூவியைத் தயாரிக்கப்போகும் அதே மோனோகாக் பிளாட்ஃபார்மில்தான் புதிய XUV 5OO தயாரிக்கப்படும்; தற்போதைய மாடலைவிட அதிக இடவசதி மற்றும் சிறப்பம்சங்கள் இருக்கும் என்பதுடன், BS-6 விதிகளுக்கேற்ப டியூன் செய்யப்பட்ட 4 சிலிண்டர் இன்ஜின்கள் வழங்கப்படும்.

எம்ஜி D90 மேக்ஸூஸ்

இன்ஜின் (டீ): 2.0 லிட்டர்

பவர் (டீ): 170bhp

உத்தேச விலை: 30-35 லட்ச ரூபாய்

அறிமுகம்: Late 2020

போட்டி: ஃபார்ச்சூனர், எண்டேவர், ஆல்ட்டுராஸ், பஜேரோ ஸ்போர்ட்

MG D90 Maxus
MG D90 Maxus
Autocar India

லேடர் ஃபிரேம் கட்டுமானத்தில், ஒரு XL சைஸ் எஸ்யூவியைக் களமிறக்கும் திட்டத்தில் இருக்கிறது எம்ஜி. போட்டியாளர்களுடன் ஈடுகொடுக்கும் விதத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தை இந்த கார் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. D90 மேக்ஸூஸின் உயரம், பானெட் மற்றும் கிரில் ஆகியவை அதற்கான சாம்பிள். 7 பேருக்கான இடவசதி தவிர, அதிகப்படியான சிறப்பம்சங்களையும் இந்த எஸ்யூவி தன்வசம் வைத்திருக்கிறது. 12.3 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், 8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 3 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, Cooled/Heated சீட்கள், பனரோமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா என வசதிகளின் பட்டியல் மிக நீளம். ஹெக்டரில் இருக்கும் அதே டீசல் இன்ஜின்தான் D90 மேக்ஸூஸில் பொருத்தப்படும். 7 டிரைவிங் மோடுகள் (Automatic, Economy, Motion, Snow, Sandy, Mud, Rock) இருப்பதால், ஆஃப் ரோடிங்கிலும் இந்த எஸ்யூவி அசத்தும் என நம்பப்படுகிறது.

மெர்சிடீஸ் பென்ஸ் A-க்ளாஸ் செடான்

இன்ஜின் (பெ/டீ): 2.0 லிட்டர்/2.0 லிட்டர்

உத்தேச விலை: 30 லட்ச ரூபாய்

அறிமுகம்: Late 2020

போட்டி: A3

A-Class Sedan
A-Class Sedan
Mercedes Benz

சூப்பர் டிசைனுக்குப் பெயர்பெற்ற CLA ஏற்கெனவே இருந்தாலும், பிசினஸ் கிளாஸ் தோற்றத்துடன் கூடிய கார் வேண்டும் என்பவர்களுக்கு A-க்ளாஸ் செடானை முன்மொழிகிறது மெர்சிடீஸ் பென்ஸ். வழக்கமான Roofline இருப்பதால், பிராக்டிக்கலான கேபினில் அதிக இடவசதியை எதிர்பார்க்கலாம். காரின் வெளிப்புறத்தைப் போலவே, டேஷ்போர்டும் ஸ்டைலாகவே காட்சியளிக்கிறது. இதில் இந்த நிறுவனத்தின் லேட்டஸ்ட் MBUX ஆபரேட்டிங் சிஸ்டம் உடனான டச் ஸ்க்ரீன் கன்ட்ரோல்கள் மற்றும் Speech Recognition வசதி இடம்பெறும்.

ரெனோ LBA காம்பேக்ட் செடான்

இன்ஜின் (பெ): 1.0 லிட்டர் டர்போ

பவர் (பெ): 100bhp

உத்தேச விலை:6-10 லட்ச ரூபாய்

அறிமுகம்: Late 2020

போட்டி: அமேஸ், டிசையர், ஆஸ்பயர், டிகோர், ஏமியோ

Symbol
Symbol
Renault

ஒரு காம்பேக்ட் செடானை இந்தியாவில் ரெனோ அறிமுகப்படுத்தப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை! ட்ரைபர் தயாரிக்கப்படும் அதே CMF-A+ பிளாட்ஃபார்மில்தான் இதுவும் தயாரிக்கப்பட உள்ளது; ஆனால், இந்த காரின் உயரம் குறைவாக இருக்கும் என்றாலும், டேஷ்போர்டு அதேதான் எனத் தெரிகிறது. இதில் பவர்ஃபுல் பர்ஃபாமன்ஸை எதிர்பார்க்கலாம்.

ஸ்கோடா கரோக்

இன்ஜின் (டீ): 2.0 லிட்டர்

பவர் (டீ): 150bhp

உத்தேச விலை: 15-20 லட்ச ரூபாய்

அறிமுகம்: Mid 2020

போட்டி: ஹெக்டர், ஹேரியர், XUV 5OO, காம்பஸ், டூஸான்

Karoq
Karoq
Skoda

''அப்போ வரும்... இப்போ வரும்'' எனக் கார் ஆர்வலர்களை நீண்ட காலம் காத்திருப்பில் வைத்திருக்கிறது ஸ்கோடா. அதற்கான தீர்வாக, அடுத்த ஆண்டில் கரோக் எஸ்யூவியை இந்தியாவில் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. ஆனால் CBU முறையில் முழு காராக நம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுவதால், இதன் விலை போட்டியாளர்களைவிட அதிகமாகவே இருக்கும்; சர்வதேச சந்தைகளில் யெட்டிக்கு மாற்றாக கரோக் பொசிஷன் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் இது தனி மாடலாகவே வெளிவரும். ஆனால் நம் நாட்டில் விற்பனை செய்யப்பட்ட யெட்டி வித்தியாசமான டிசைனைக் கொண்டிருந்த நிலையில், கரோக் வழக்கமான டிசைனையே கொண்டிருக்கிறது. 5 பேருக்கான இடவசதியைக் கொண்டிருக்கும் கேபின், ஸ்கோடாவுக்கே உரித்தான தரத்தில் அற்புதமாக உள்ளது. எந்த இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வரும் என்பதில் தெளிவில்லை என்றாலும், 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் - DCT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி, கரோக் எஸ்யூவியில் இடம்பெறுவதற்கான சாத்தியம் அதிகம்!

டாடா H7X (பஸ்ஸார்டு)

இன்ஜின் (டீ): 2.0 லிட்டர்

பவர் (டீ): 170bhp

உத்தேச விலை: 17-20 லட்ச ரூபாய்

அறிமுகம்: பிப்ரவரி 2020

போட்டி: ஹெக்டர், XUV 5OO, காம்பஸ், டூஸான்

Buzzard
Buzzard
Tata

இது அடிப்படையில் ஹேரியரின் 7 சீட் வெர்ஷன் என்றும் சொல்லலாம். எனவே பின்பக்கக் கதவுகள் வரை இரு எஸ்யூவிகளும் பார்க்க ஒரே மாதிரி இருப்பதுடன், வீல்பேஸும் ஒன்றுதான்; ஆனால் கூடுதலாக மூன்றாவது வரிசை இருக்கை சேர்க்கப்படுவதால், 62மிமீ கூடுதல் நீளம் மற்றும் 80மிமீ கூடுதல் உயரம் என வளர்ந்திருக்கிறது பஸ்ஸார்டு கான்செப்ட். ரூஃப் ரெயில்கள், பெரிய பின்பக்க Quarter Glass, 19 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை H7X-ன் அடையாளங்களாக இருக்கும்; ஹேரியரில் இருக்கும் அதே டர்போ டீசல் இன்ஜின்தான் இங்கேயும் என்றாலும், அது காம்பஸ் மற்றும் ஹெக்டருக்குச் சமமான பவரை வெளிப்படுத்தும். மேலும் 6 ஸ்பீடு மேனுவல் தவிர, 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் வழங்கப்படும்.

டாடா அல்ட்ராஸ்

இன்ஜின் (பெ/டீ): 1.2 லிட்டர், 1.2 லிட்டர் டர்போ/1.5 லிட்டர்

பவர் (பெ/டீ): 85bhp, 102bhp/90bhp

உத்தேச விலை: 5-8 லட்ச ரூபாய்

அறிமுகம்: செப்டம்பர் 2019

போட்டி: ஜாஸ், போலோ, பெலினோ, i20, கிளான்ஸா

Altroz
Altroz
Tata

இந்த கார் வழியாக, பிரிமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டுக்குள் தடம் பதிக்கிறது டாடா மோட்டார்ஸ். எனவே எதிர்பார்த்தபடியே டியாகோவைவிடப் பெரிய சைஸில் இருக்கும் அல்ட்ராஸ், இந்த நிறுவனத்தின் புதிய டிசைன் கோட்பாடுகளின்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நெக்ஸான் போலவே இதுவும் கான்செப்ட் காரின் தோற்றத்தில் காட்சியளிப்பது பெரிய ப்ளஸ். Contrast நிற பாடி பேனல்கள், அல்ட்ராஸின் ஸ்போர்ட்டியான லுக்குக்குத் துணைநிற்கின்றன. Layered பாணி தோற்றத்துடன், Free Standing டச் ஸ்க்ரீன் உடன் டேஷ்போர்டு கவர்கிறது; ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் அனலாக் - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இருப்பது செம! போட்டியாளர்களைவிட மைலேஜ் விஷயத்தில் இந்த ஹேட்ச்பேக் முன்னிலை வகிக்கும் எனத் தெரிகிறது.

டாடா H2X

இன்ஜின் (பெ): 1.2 லிட்டர்

பவர் (பெ): 85bhp

உத்தேச விலை: 4.5-6.5 லட்ச ரூபாய்

அறிமுகம்: ஆகஸ்ட் 2020

போட்டி: இக்னிஸ், KUV 1OO

H2X
H2X
Tata

2019 ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிபடுத்தப்பட்ட H2X கான்செப்ட், பலரது லைக்குகளைப் பெற்றது. எனவே இதன் Production வெர்ஷனில் டாடா மோட்டார்ஸ் தற்போது தீவிரமாகப் பணிபுரிந்து வருகிறது. மைக்ரோ எஸ்யூவியாக அறியப்படும் இது, 3.8 மீட்டர் நீளத்தில் இருக்கும் எனத் தெரிகிறது. அதாவது நெக்ஸானுக்குக் கீழே பொசிஷன் செய்யப்படவிருக்கும் H2X, கான்செப்ட் காரைப் போன்ற ஸ்டைலான டிசைனையே கொண்டிருக்கும். ஹேரியரில் இருப்பதுபோன்ற ஹெட்லைட் வடிவமைப்பு, பாக்ஸ் போன்ற தோற்றம், பெரிய வீல் ஆர்ச்கள், Floating Roof என வெளிப்புறத்தில் பல கெத்தான அம்சங்கள் இருக்கும்; சமீபத்திய டாடா கார்களைப் போலவே, இதன் கேபினும் வருங்காலத்துக்கான டிசைனில் ஈர்க்கும். H2X-ல் டீசல் இன்ஜின் இல்லையென்றாலும், பெட்ரோல் - ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் இருக்கும்.

ஃபோக்ஸ்வாகன் டி-க்ராஸ்

இன்ஜின் (பெ): 1.5 லிட்டர்

பவர் (பெ): 130bhp

உத்தேச விலை: 12-16 லட்ச ரூபாய்

அறிமுகம்: Late 2020

போட்டி: கிரெட்டா, செல்ட்டோஸ், கிக்ஸ், கேப்ச்சர்

T-Cross
T-Cross
Volkswagen

சர்வதேச மாடலுக்கும் இந்திய மாடலுக்கும் ஒரே பெயர் இருந்தாலும், மற்றபடி எல்லாமே வேறுதான்; அதாவது Made For India பாணியில் தயாரிக்கப்படவிருக்கும் டி-க்ராஸில் பல வித்தியாசங்கள் இருக்கும். எனவே நம் நாட்டில் கிடைக்கப்போகும் கார், உலக சந்தைகளில் கிடைக்கும் காரைவிட நீளமாக இருக்கும் என்பதுடன், அதிக இடவசதிக்காகப் பெரிய வீல்பேஸையும் கொண்டிருக்கும். மேலும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸுக்காக, காரின் உயரமும் ஜாஸ்தி; இந்தியச் சாலைகளுக்கேற்ற சஸ்பென்ஷன் செட்-அப்பும் இருக்கும்.

ஃபோக்ஸ்வாகன் டி-ரொக்

இன்ஜின் (பெ): 1.5 லிட்டர்

பவர் (பெ): 150bhp

உத்தேச விலை: 15-20 லட்ச ரூபாய்

அறிமுகம்: Late 2019

போட்டி: ஹெக்டர், ஹேரியர், XUV 5OO

T-Roc
T-Roc
Volkswagen

இது பார்க்க டிகுவானின் ஸ்போர்ட்டியான வெர்ஷன் போலக் காட்சியளித்தாலும், நிஜத்தில் டி-ரொக் அதைவிடச் சிறிய காராகவே இருக்கிறது! ஷார்ப்பான முன்பக்கம், தடிமனான க்ளாடிங், பெரிய வீல்கள், ரூஃப் ரெயில் என டிகுவானைவிட இது ஸ்டைலாகவே இருக்கிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், மாடர்ன் டேஷ்போர்டு எனக் கேபின் ஈர்த்தாலும், டிகுவானைவிட டி-ரொக்கில் இடவசதி கொஞ்சம் குறைவுதான்; ஆனால் எஸ்யூவி என்பதால், இங்கிருந்து வெளிச்சாலை தெளிவாகத் தெரியும். இதில் டீசல் கிடையாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு