Published:Updated:

பைக் ஆர்வலர்கள் பார்க்க வேண்டிய ஆட்டோமொபைல் படங்கள்!

ஆட்டோமொபைல் ( IMDB )

வீட்டில் இருந்து பணிபுரிவோர், மாணவர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள் என யாராக இருப்பினும், இந்த பைக் சார்ந்த ஆட்டோமொபைல் படங்களைக் கண்டு களிக்கலாம்!

பைக் ஆர்வலர்கள் பார்க்க வேண்டிய ஆட்டோமொபைல் படங்கள்!

வீட்டில் இருந்து பணிபுரிவோர், மாணவர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள் என யாராக இருப்பினும், இந்த பைக் சார்ந்த ஆட்டோமொபைல் படங்களைக் கண்டு களிக்கலாம்!

Published:Updated:
ஆட்டோமொபைல் ( IMDB )

கொரோனா எனும் COVID-19... இந்த வைரஸின் வீரியத்தைப் பலர் அறிந்திருப்பீர்கள் என்றே எண்ணுகிறேன். உலக நாடுகள் பல இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், தமது வீடுகளில் முடங்கியிருக்கும் மக்கள் மனதளவில் தளர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, நான் சொல்லப்போகும் விஷயம் உங்களுக்கான தீர்வாக இல்லாவிட்டாலும், குறைந்தது உற்சாகப்படுத்தவாவது செய்யலாம். வீட்டிலிருந்து பணிபுரிவோர், மாணவர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள் என யாராக இருப்பினும், இந்த பைக் சார்ந்த ஆட்டோமொபைல் படங்களைக் கண்டு களிக்கலாம்! கார் படங்கள் இதோ... (பைக் ஆர்வலர்களுக்கு இவை செம ஃபீலைத் தரலாம்).

The World's Fastest Indian (2005): IMDB Rating - 7.8

The World's Fastest Indian
The World's Fastest Indian
IMDB

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேகத்தில் சாதனை செய்வது அத்தனை சுலபமான விஷயமல்ல. அது, பைக்கில் நிகழ்த்தப்படும்போது, சிறிய நட் போல்ட் தொடங்கி அதன் ரைடர் வரை எல்லாமே சரியாக இருக்க வேண்டியது அவசியம். 1967-ம் ஆண்டில், நியூசிலாந்தைச் சேர்ந்த பர்ட் மன்ரோ, புகழ்பெற்ற போனவில்லி சால்ட் ஃப்ளாட்டில் இதைச் சாத்தியப்படுத்தினார். தனது கராஜிலேயே அவர் கட்டமைத்த இந்த பைக், 1920-ம் ஆண்டைச் சேர்ந்த இந்தியன் ஸ்கவுட் பைக்; அதாவது அடிப்படையில் 47 ஆண்டுகள் பழைமையான வாகனத்தில் (பழைய டயர்கள் அதற்கான உதாரணம்), 67 வயதான ஒருவர் பயணித்தார் என்பதுதான் அதில் ஹைலைட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் ஸ்ட்ரீம் லைனர் வகையில் கட்டமைக்கப்பட்ட அந்த பைக்கில் எடை குறைப்புக்காக, பிரேக் மற்றும் பாராசூட் (அதிவேகத்திலிருந்து வாகனத்தை நிறுத்த இது அவசியம்) போன்றவை கிடையாது! தவிர எப்போது வேண்டுமானாலும் நெஞ்சு வலி வரலாம் என்ற உடல் நிலையில் இருந்த பர்ட் மன்ரோ, ரைடிங் கியரே இல்லாமல் சரித்திரத்தில் இடம்பிடித்தார்; நியூசிலாந்தின் இன்வர்காகில் எனும் சிறிய ஊரிலிருந்து, போனவில்லிக்கு வரும் வழியில் அவர் சந்திக்கும் அனுபவங்கள், நம் நெஞ்சை அப்படியே நிறைத்துவிடும். பக்கத்து வீட்டுச் சிறுவன், லாட்ஜில் இருக்கும் திருநங்கை, வயதான இருவர் என இந்தப் படத்தில் இருந்த துணை கதாபாத்திரங்களும், தமது பணியைச் சிறப்பாகச் செய்திருப்பார்கள். எப்படி கட்டபொம்மன் என்றால் 90's கிட்ஸுக்கு சிவாஜி கணேசன் நினைவுக்கு வருவாரோ, பர்ட் மன்ரோவை அப்படியே கண்முன்னே கொண்டு வந்த விதத்தில் அசத்திவிட்டார் ஆண்டனி ஹோப்கின்ஸ் எனும் அந்த மகா நடிகர்! ஏனெனில் நம்மில் பலர் இந்த மனிதரைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

Hitting The Apex (2015): IMDB Rating - 8.4

Hitting The Apex
Hitting The Apex
IMDB

கொரோனா காரணமாக, மோட்டோ ஜீபி பைக் ரேஸ்கள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ஆர்வலர்கள், இந்தப் படத்தைப் பார்ப்பது ஆறுதலைத் தரலாம். மோட்டோ ஜீபி டாக்குமென்ட்ரிகளின் வரிசையில் லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கும் இது, 2013-2014 சீஸனில் அசத்திய 6 ரேஸர்களின் வாழ்வியலை அழகாக விளக்குகிறது. வாலன்ட்டினோ ராஸி (46 லெஜென்ட்), கேஸி ஸ்டோனர், ஜார்ஜ் லாரன்ஸோ, டேனி பெட்ரோஸா, மார்க் மார்க்யூஸ் (நடப்புச் சாம்பியன்), மார்க்கோ சிமோன்செல்லி (இவர் மரணித்துவிட்டதை நம்ப முடியவில்லை). பிரபல மோட்டோ ஜீபி வர்ணனையாளரான மார்க் நீலின் மேற்பார்வையில் உருவான இந்தப் படத்துக்கு, ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் தனது குரலால் உயிரூட்டியுள்ளார். ஒவ்வொரு ரேஸுக்கும் இடையே, பைக் ரேஸர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மனவோட்டத்தை அப்படியே எடுத்துரைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

On Any Sunday (1971): IMDB Rating - 7.8

On Any Sunday
On Any Sunday
IMDB

1970-களின் வாக்கில், அமெரிக்காவில் பைக்கர்கள் என்றாலே சமூக விரோதிகள் என்ற ரீதியில்தான் பார்க்கப்பட்டனர். எனவே, அதைச் சரிப்படுத்தும் வகையில், “You meet the nicest people on a Honda” என்ற வாசகத்தை ஹோண்டா நிறுவனம் தனது விளம்பரத்தில் பயன்படுத்தியது. வார இறுதி நாள்களில் பைக்கில் ரிலாக்ஸாகச் செல்பவர்கள் மீது இருந்த வெறுப்புணர்வை, தனது சொந்தச் செலவில் சரிசெய்ய முடிவெடுத்தார், ஹாலிவுட் பிரபலமான ஸ்டீவ் மெக்குவின். அடிப்படையில் பைக்கரான அவர், அந்தக் காலகட்டத்தில் ரேஸிங்கிலும் அசத்தினார். GoPro கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே, ஹெல்மெட்டில் கேமராவை வைத்துப்படமாக்கப்பட்ட காட்சிகள் இதில் இருந்தது வேற லெவல்! மேலும் டர்ட் டிராக்கில் பயன்படுத்தப்பட்ட பைக்குகளில், எடை அதிகமான கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்டிருந்தாலும், இது தற்போது யூட்யூப் சேனல்களில் இருக்கும் Moto Vlog களைவிடத் தரமாக இருக்கும்.

Our Guy In India (2015): IMDB Rating - 8.0

Our Guy In India
Our Guy In India
IMDB

டிரக் மெக்கானிக்காக இருந்து Isle Of Man TT ரேஸராக மாறிய கய் மார்ட்டின், இந்தியாவுக்கு வந்திருக்கிறார் தெரியுமா? அப்போது புல்லட் 350 பைக்கைப் பயன்படுத்திய அவர், சர்வதேச அளவில் புகழ்பெற்ற ராயல் என்ஃபீல்டின் ரைடர் மேனியா நிகழ்வில் பங்கேற்று, டர்ட் டிராக் ரேஸிங் கலந்துகொண்டு வென்றது புல்லரிக்கும் வரலாறுதான். கய் மார்ட்டினின் டிராவல் சீரிஸில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் இது, இரு பகுதிகளாக வெளிவந்தது. இந்தியாவின் கலாசாரம், சுங்கவரி விவரங்கள், பொதுமக்களுக்கான போக்குவரத்து (Jugaad), டெல்லியிலிருந்து கோவா வரையிலான சாலைப் பயணம் எனக் கெத்தாகப் பரந்துவிரிகிறது.

BariBari Densetsu (1986): IMDB Rating - 6.1

BariBari Densetsu
BariBari Densetsu
IMDB

ஹை-ஸ்கூல் மாணவர்களுக்கு இடையேயான மோதல், கட்டுமஸ்தானவர்களுடன் இருக்கும் குறைந்த வயது பெண்கள் என மேலோட்டமாகப் பார்க்கும்போது, ஒரு வழக்கமான ஜப்பானிய அனிமேஷன் படமாகவே இது தெரியும். ஆனால், இதன் ஓப்பனிங் சீனில், பள்ளத்தாக்கில் ஹோண்டா CB 750 மற்றும் சுஸூகி கட்டானா இடையே நடக்கும் ரேஸைப் பார்த்த பிறகு, இது வேறு மாதிரி என்பது புரிந்துவிடுகிறது. மேலும் பைக்குகளின் டீட்டெய்லிங், பரபரப்பான ரேஸிங் காட்சிகள் என அனிமேஷன் படத்தில் லைவ் ஆக்‌ஷன் படத்துக்கு இணையான மேக்கிங்கில் அசத்தியிருப்பார் சூசி சிகெனோ. இதைத் தொடர்ந்து இவர் அடுத்தபடியாக எடுத்த Initial D, வாகனங்களை விரும்புவோர் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்!

The Motorcycle Diaries (2004): IMDB Rating - 7.8

The Motorcycle Diaries
The Motorcycle Diaries
IMDB

பயோபிக் வகைப் படமான இது, 23 வயதே நிரம்பிய எர்னெஸ்ட்டோ குவேரா எனும் வாலிபனின் வாழ்க்கையைச் சித்திரித்தது. இவர்தான் பின்னாளில் சே குவேரா எனும் மார்க்ஸிஸ்ட் புரட்சியாளராக உருவெடுத்தார்! படத்தின் பெயருக்கு ஏற்றபடியே, எர்னெஸ்ட்டோ குவேரா மற்றும் அவரது நண்பரான அல்பர்ட்டோ கிரானாடோ ஆகியோர் மேற்கொண்ட பைக் பயணத்தில் எதிர்கொண்ட சாகசங்களையும் விவரிக்கிறது.

TT3D: Closer To The Edge (2011): IMDB Rating - 8.0

TT3D Closer To The Edge
TT3D Closer To The Edge
IMDB

உலகின் ஆபத்தான ரேஸ்களில் ஒன்றாக அறியப்படும் Isle Of Man TT பற்றிய டாக்குமென்டரி ஆகும். இதில் பங்கேற்று வெற்றி பெற்ற கய் மார்ட்டின் மற்றும் ஐயன் ஹட்ச்சின்சன் ஆகியோரைப் பற்றி, ஜரெட் லெட்டோவின் குரலில் கேட்கலாம்.

Faster (2003): IMDB Rating - 7.8

Faster
Faster
IMDB

இந்தப் பட்டியலில் மோட்டோ ஜீபி பற்றிய மற்றுமொரு டாக்குமென்ட்டரிதான் இது. இது எடுக்கப்பட்ட காலத்தில் முன்னணியில் இருந்த மேக்ஸ் பியாஜி, கேரி மெக்காய், ஜான் ஹாப்கின்ஸ், வாலன்ட்டினோ ராஸி ஆகியோரைப் பற்றிய விவரங்களை இது கூறுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism