Published:Updated:

கொரோனாவால் உங்கள் வாகனத்தின் ஆயுள் குறையாமல் இருக்க, சில டிப்ஸ்!

ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு உங்களைப் பாதுகாப்பாகவும் விரைவாகவும் அழைத்துச் செல்லும் வாகனங்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இருக்கவே செய்கிறது. எனவே, அது கார்/பைக்/ஸ்கூட்டர் என எதுவாக இருந்தாலும் இந்த டிப்ஸ்களை மட்டும் முடிந்தால் பின்பற்றுங்கள்.

கொரோனா, இந்தியாவிலும் தனது ருத்ர தாண்டவத்தைத் தொடங்கிவிட்டது. தெலுங்குப் புத்தாண்டு தினமான மார்ச் 25, 2020 தொடங்கி தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14, 2020 வரை நாடு முழுக்க ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தமது வீடுகளிலேயே முடங்கியிருக்கும் சூழலில், அவர்கள் தினசரி பயன்படுத்தும் வாகனங்கள் கேட்பாரின்றி நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு உங்களைப் பாதுகாப்பாகவும் விரைவாகவும் அழைத்துச் செல்லும் வாகனங்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இருக்கவே செய்கிறது. எனவே அது கார்/பைக்/ஸ்கூட்டர் என எதுவாக இருந்தாலும், இந்த டிப்ஸ்களை மட்டும் முடிந்தால் பின்பற்றுங்கள்.

பார்க்கிங்
பார்க்கிங்
விகடன்

1. வெயில் குறைவாக அல்லது நிழலாக இருக்கும் இடத்தில், உங்கள் வாகனத்தைப் பார்க் செய்யுங்கள். டூ-வீலர் என்றால் சைடு லாக் போட்டுவிடுவது நலம். மறக்காமல் வாகனத்தைக் கவர் செய்துவிடுங்கள். எலித்தொல்லை அதிகமாக இருந்தால், அதைக் கட்டுப்படுத்த நாட்டுப் புகையிலையைப் பயன்படுத்தலாம்.

2. ஏறக்குறைய மூன்று வார காலம் உங்கள் வாகனம் அதே இடத்தில் நிற்பதற்கான சாத்தியம் இருப்பதால், டயர் காற்றழுத்தம் தானாகக் குறைந்துவிடும். எனவே, வீட்டில் ஏர் பம்ப் இருந்தால், அவ்வப்போது டயரில் காற்றை டாப் -அப் செய்யவும். டூ-வீலராக இருந்தால் சைடு ஸ்டாண்ட் விட மெயிட் ஸ்டாண்டே நல்லது.

கேபின் ஸ்விட்ச்
கேபின் ஸ்விட்ச்
விகடன்

3. தொடர்ச்சியாக டயர் வாகனத்தின் எடையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதால், அது தனது உறுதித்தன்மையை இழப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே, டயரைச் சுற்றிக் கொஞ்சம் டால்கம் பவுடரைக் கொட்டிவிட்டால், டயரில் ஏற்படும் உராய்வு குறையும். காரின் ஸ்டீயரிங் நேர் திசையில் இருக்க வேண்டும்.

4. விளக்குகள், ஸ்விட்ச்கள் அனைத்தையும் அணைத்துவிட்டு, சரியாக வாகனத்தை லாக் செய்துவிட்டு சாவியை எடுத்துக் கொண்டீர்களா என்பதை உறுதிசெய்யவும். ஒருவேளை இது தவறும் பட்சத்தில், வாகனத்தின் பேட்டரி தனது சார்ஜ் மொத்தத்தையும் இழந்திருக்கும்; சாவியும் தொலைந்து போயிருக்கலாம்.

டயர் ப்ரெஷர்
டயர் ப்ரெஷர்
விகடன்

5. டூ-வீலரில் ரிசர்வில் மட்டும் பெட்ரோல் இருந்தால் ஓகே. ஏனெனில் தொடர்ந்து பெட்ரோல் டியூப், கார்புரேட்டர் ஆகியவற்றில் அதே அளவில் இருக்கும் பெட்ரோல், ஒரு கட்டத்தில் Jelly போல இறுகிவிடும். இதனால் வாகனம் ஸ்டார்ட் ஆவதில் நேரம் பிடிக்கும் என்பதுடன், அந்தப் பாகங்கள் செயலிழக்கும் அபாயமும் உள்ளது.

6. ஒருவேளை டூ-வீலரில் பெட்ரோல் டேங்க் ஃபுல்லாக இருந்தால், முடிந்தால் அதை வெளியே எடுத்துவிடவும். காரில் இதைச் செய்வது கொஞ்சம் கடினம் என்பதால், தினசரி வாகனத்தை ஸ்டார்ட் செய்து, குறைந்தது 5 நிமிடங்கள் ஆவது அப்படியே ஐடிலிங்கில் விடவும். இந்த விதி டூ-வீலருக்கும் பொருந்தும்.

கார் பேட்டரி
கார் பேட்டரி
விகடன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

7. டூ-வீலரின் ஃபுட் பெக், செயின் ஸ்ப்ராக்கெட், ஸ்டாண்ட், சாவி துவாரம், பெட்ரோல் டேங்க் மூடி போன்ற இடங்களில் தூசு, மண் படிந்து, அவை பயன்படுத்த இறுக்கமாக மாறிவிடும். எனவே, டூ-வீலரை நிறுத்தும்போது, அவற்றில் கியர் ஆயில் அல்லது செயின் ஸ்ப்ரே கொண்டு லுப்ரிகேட் செய்துவிடுவது நலம்.

8. வாரம் ஒருமுறையாவது, உங்கள் வாகனத்தைத் துடைப்பது நலம். இதனால் உங்களுக்கும் வீட்டை விட்டு வெளிவந்த உணர்வு கிடைக்கும் என்பதுடன், கொஞ்சம் உடற்பயிற்சி செய்த மாதிரியும் இருக்கும். ஒருவேளை உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்களையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கார் வாஷ்
கார் வாஷ்
விகடன்
கார் ஆர்வலரா... நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஆட்டோமொபைல் படங்கள்!

9. எந்த வாகனமாக இருந்தாலும், நீங்கள் அதை நிச்சயமாக இந்தக் காலத்தில் பயன்படுத்த மாட்டீர்கள் என்றால், பேட்டரி கேபிள்களைக் கழற்றிவிடுவது நல்லது. தவிர வாகனத்தின் மீது எடை அதிகமான எந்தப் பொருளையும் வைக்காமல் இருப்பதும் நலம். ஏனெனில், இது சஸ்பென்ஷனுக்குக் கூடுதல் அழுத்தத்தைத் தரும்.

10. வீட்டில் இருக்கும்போது வாகனத்தின் ஆவணங்கள் மற்றும் டூப்ளிகேட் சாவி ஆகியவற்றைக் கண்டுபிடித்து, ஒரே இடத்தில் வைத்துக்கொள்ளவும். ஒருவேளை இன்ஷூரன்ஸ்/வாரன்ட்டி முடியும் தருவாயில் இருந்தால், அதை அப்டேட் செய்வது குறித்து அந்த நிறுவனத்தின் ஊழியர்களை அழைத்துத் தெளிவாகப் பேசிவிடுங்கள்.

கேபின் கிளினிங்
கேபின் கிளினிங்
Autocar India
பிஎஸ்-4 ரக வாகனங்களுக்கு பை..பை.. அவசியம் என்ன? -  வாசகர் பகிர்வு #MyVikatan

11. நாம் வாகனத்தில் அடிக்கடி பயன்படுத்தும் விஷயம்... ஆனால், கவனிக்கப்படாதது என்னவென்றால் டூ-வீலரின் ஹெல்மெட்டும் காரின் சீட்களும்தான். எனவே, இந்தச் சமயத்தில் அவற்றைக் கழுவி, சுத்தப்படுத்தினால் உங்களுக்கே உங்கள் வாகனத்தின் மீது ஃப்ரெஷ்ஷான ஃபீலிங் கிடைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு