Published:Updated:

2020 மார்ச் மாதம், இந்தியாவில் விற்பனையான டாப்-10 டூ-வீலர்கள் & கார்கள்!

டாப்-10 கார்கள்
டாப்-10 கார்கள் ( Autocar Professional )

முடங்கிய வாகன உற்பத்தி, தேங்கிநிற்கும் கார்களுடன் டீலர்கள், கேள்விக்குறியாகி இருக்கும் புதிய வாகன விற்பனை என கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளை அடுக்கிக்கொண்டேபோகலாம்.

கொரோனா எனப்படும் COVID-19, நம் நாட்டு மக்களை மட்டுமல்லாது, ஆட்டோமொபைல் துறையையும் கணிசமாகவே பாதித்திருக்கிறது. முடங்கிய வாகன உற்பத்தி, தேங்கிநிற்கும் கார்களுடன் டீலர்கள், கேள்விக்குறியாகி இருக்கும் புதிய வாகன விற்பனை என அதற்கான உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்தத் தொற்று நோயின் ருத்ர தாண்டவத்தால் அமலுக்கு வந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக, எதிர்பார்த்தபடியே மார்ச் 2020ல், புதிய வாகன விற்பனையில் பலத்த சரிவு தெரிகிறது. அந்த மாதத்தின் டாப்-10 டூ-வீலர்கள் மற்றும் கார்கள் ஆகியவற்றைப் பற்றி இனி பார்க்கலாம்.

டாப் 10 டூ-வீலர்கள்: மார்ச் 2020

நம் நாட்டில், கடந்த மார்ச் 2020ல் விற்பனையான டூ-வீலர்களின் மொத்த எண்ணிக்கை 8.67 லட்சம். இதில் 2.63 லட்சம் ஸ்கூட்டர்களும், 32 ஆயிரம் மொபெட்களும், 5.7 லட்சம் பைக்குகளும் அடக்கம். ஆக்டிவாவை முந்தி முதலிடத்துக்கு வந்துவிட்டது ஸ்ப்ளெண்டர். ஆனால், ஹோண்டாவின் ஷைன் மற்றும் டியோ வழக்கத்தைவிட அதிகமாக விற்பனையாகி, அந்தக் குறைபாட்டைச் சமன் செய்துவிட்டன. நீண்ட நாள்களுக்குப் பிறகு, கிளாஸிக் 350 மற்றும் அப்பாச்சி RTR டாப்-10 பட்டியலில் இடம்பிடித்துள்ளன. HF டீலக்ஸ் - பல்ஸர் - ஆக்ஸஸ் ஆகியவை, தமது இடங்களைத் தக்கவைத்துக்கொண்டுள்ளன.

ஹீரோ ஸ்ப்ளெண்டர் - 1,43,726

ஹீரோ HF டீலக்ஸ் - 1,14,969

ஹோண்டா ஆக்டிவா - 1,14,757

ஹோண்டா CB ஷைன் - 86,633

பஜாஜ் பல்ஸர் - 51,454

டிவிஎஸ் XL சூப்பர் - 32,808

ஹோண்டா டியோ - 29,528

சுஸூகி ஆக்ஸஸ் - 26,476

RE க்ளாஸிக் 350 - 24,253

டிவிஎஸ் அப்பாச்சி RTR - 21,764

டாப்-10 டூ-வீலர்கள்
டாப்-10 டூ-வீலர்கள்
Autocar Professional
வேலை செய்யும்போது போர் அடிக்குதா? இந்த விளையாட்டுகளை ட்ரை பண்ணிப் பாருங்களேன்! #Games

டாப் 10 கார்கள் - மார்ச் 2020

பட்ஜெட் ஹேட்ச்பேக்கான ஆல்ட்டோவை பின்தள்ளி, ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான பெலினோ, மார்ச் 2020ல் முதல் இடத்தைப் பெற்றுவிட்டது. ஃபேஸ்லிஃப்ட் மாடல் களமிறங்கியதால், டிசையரின் விற்பனை கடுமையாகச் சரிந்துவிட்டது. போட்டி காம்பேக்ட் செடான்களுடன் ஒப்பிட்டால், இங்கே டீசல் இன்ஜின் இல்லாததும் இதற்கான காரணமாக இருக்கலாம். இந்த மாதத்தில் அதிகமாக விற்பனையாகி இருக்கும் எஸ்யூவி கியா செல்ட்டோஸ்தான்! அனேகமாக, புதிய க்ரெட்டா அந்த இடத்தை விரைவில் பிடிக்கும் எனத் தோன்றுகிறது. காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் தலயாக வென்யூ விளங்குகிறது. ஆம்னியின் மறைவு, ஈக்கோவின் விற்பனைக்கு உதவியிருக்கிறது என்றே சொல்லலாம்.

Kia Motors India
Kia Motors India
Autocar Professional

மாருதி சுஸூகி பெலினோ - 11,406

மாருதி சுஸூகி ஆல்ட்டோ- 10,829

மாருதி சுஸூகி வேகன் ஆர் - 9,151

மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் - 8,575

கியா செல்ட்டோஸ் - 7,466

ஹூண்டாய் க்ரெட்டா - 6,706

ஹூண்டாய் வென்யூ - 6,127

மாருதி சுஸூகி ஈக்கோ - 5,966

மாருதி சுஸூகி பிரெஸ்ஸா - 5,513

மாருதி சுஸூகி டிசையர் - 5,476

அடுத்த கட்டுரைக்கு