Published:Updated:

டைம் போறதே தெரியாம விளையாட அட்டகாசமான 5 ரேஸிங் கேம்ஸ்!  #RacingGames

ரேஸிங் கேம்கள் ( Autocar India )

வீட்டிலிருந்தபடியே நேரத்தைக் கழிக்கப் பலர் டிவி சேனல்களை மாற்றிக் கொண்டும், அமேஸான்/நெட்ஃபிளிக்ஸ் ஆகியவற்றில் அடுத்து என்ன படம் பார்க்கலாம் என யோசித்துக்கொண்டிருப்பது ஒருபுறம் என்றால், வீட்டிலிருந்து பணிபுரிபவர்களின் வாழ்க்கை, கம்ப்யூட்டர்/லேப்டாப் உடனேயே கழிகிறது.

டைம் போறதே தெரியாம விளையாட அட்டகாசமான 5 ரேஸிங் கேம்ஸ்!  #RacingGames

வீட்டிலிருந்தபடியே நேரத்தைக் கழிக்கப் பலர் டிவி சேனல்களை மாற்றிக் கொண்டும், அமேஸான்/நெட்ஃபிளிக்ஸ் ஆகியவற்றில் அடுத்து என்ன படம் பார்க்கலாம் என யோசித்துக்கொண்டிருப்பது ஒருபுறம் என்றால், வீட்டிலிருந்து பணிபுரிபவர்களின் வாழ்க்கை, கம்ப்யூட்டர்/லேப்டாப் உடனேயே கழிகிறது.

Published:Updated:
ரேஸிங் கேம்கள் ( Autocar India )

இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும்போது, அநேகமாகக் கட்டிலில் படுத்துக்கொண்டு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே தோன்றுகிறது. கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், ஊரடங்கு உத்தரவு மே 3, 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, வீட்டிலிருந்தபடியே நேரத்தைக் கழிக்க, பலர் டிவி சேனல்களை மாற்றிக்கொண்டும், அமேஸான்/நெட்ஃபிளிக்ஸ் ஆகியவற்றில் அடுத்தபடியாக என்ன படம் பார்க்கலாம் என யோசித்துக்கொண்டும் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. இது ஒருபுறம் என்றால், வீட்டிலிருந்து பணிபுரிபவர்களின் வாழ்க்கை, கம்ப்யூட்டர்/லேப்டாப் உடனேயே கழிகிறது. மேலும் கார்/பைக் ஆர்வலர்கள், வாகனத்தில் பயணிப்பதற்கான சாத்தியம் ஏறக்குறைய குறைந்தேவிட்டது. இதனால் அதற்கான ஆறுதலாக இப்போதைக்கு இருப்பவை ரேஸிங் கேம்களே!

இதை விளையாட உங்களுக்குப் பிடிக்கும் என்றால், உங்களின் ஸ்மார்ட்ஃபோனில் இருக்கவேண்டிய டாப்-5 ரேஸிங் கேம்களைப் பற்றிய தொகுப்பே இந்தக் கட்டுரை. தொடர்ச்சியாக வேலை பார்த்துக்கொண்டு இருப்பவர்கள், இடையே Mind Relaxation-காக இதை ட்ரை பண்ணிப் பார்க்கலாம். ஒருகட்டத்தில் டிவி அலுத்துவிட்டது என்பவர்கள், மொபைலுக்கு இடம்பெயரவும் இவை உதவலாம்.

CSR Racing 2: ப்ளே ஸ்டோர் ரேட்டிங் - 4.6

CSR Racing 2
CSR Racing 2
Google Play Store

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

`ரேஸ் டிராக்கில் கார் ஓட்ட போர் அடிக்குது... வேற கேம் இருக்கா?' என்பவர்களுக்கான பதில்தான் இந்த #1 Arcade கேம். மோட்டார் ஸ்போர்ட்ஸில் சிம்பிளான அதேநேரம் முதன்மையானது Drag ரேஸ்தான். அதை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ரேஸிங் கேம், பலரின் வரவேற்பைப் பெற்றிருப்பதில் ஆச்சர்யம் இல்லை. நேர்க்கோட்டில் வேகமாகச் செல்வது யாருக்குத்தான் பிடிக்காது? ஒருவர் தேர்ந்தெடுத்து ஓட்ட ஹேட்ச்பேக் தொடங்கி ஹைப்பர் கார் வரை வெரைட்டியான கார்கள் இருப்பதுடன், அதைத் தேவைக்கேற்ப டியூன் செய்து ஓட்டலாம் என்பது செம. இது CSR Racing-ன் இரண்டாவது வெர்ஷன் ஆகும். இந்த Editors' Choice கேமை டவுன்லோடு செய்ய... இதைச் சொடுக்கவும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

Real Racing 3: ப்ளே ஸ்டோர் ரேட்டிங் - 4.4

Real Racing 3
Real Racing 3
Google Play Store

ப்ளே ஸ்டேஷனுக்கு Gran Tourismo எப்படியோ, ஸ்மார்ட்ஃபோனுக்கு ரியல் ரேஸிங் அப்படி. அநேகமாக ஸ்மார்ட்ஃபோனுக்கு எனத் தயாரிக்கப்பட்ட ரேஸிங் கேம்களில் மிகவும் டீட்டெய்லிங் கொண்டது இதுதான் என உறுதியாகச் சொல்லலாம். இதன் பெயருக்கு ஏற்றபடியே, இந்த கேமில் இருப்பது நிஜமான ரேஸ் டிராக் - கார்கள் - டியூனிங் கிட் என்பதால், அசத்தலான அனுபவம் கியாரன்ட்டி. பல்வேறு பிராண்ட்களின் நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் இருப்பதால், அவரவர் திறனுக்கேற்றபடி ரேஸ் ஒட்டலாம். 2013-ம் ஆண்டிலேயே ரியல் ரேஸிங் வந்துவிட்டாலும், இன்றளவிலும் தவிர்க்கமுடியாத ரேஸ் கேமாக இருப்பதுதான் அதன் பெரிய ப்ளஸ். படங்களைப்போல இதற்கு அடுத்த பார்ட் வரும் என ஸ்மார்ட்ஃபோன் Gamers ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த Editors' Choice கேமை டவுன்லோடு செய்ய... இதைச் சொடுக்கவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Asphalt 9 Legends: ப்ளே ஸ்டோர் ரேட்டிங் - 4.5

Asphalt 9 Legends
Asphalt 9 Legends
Google Play Store

கேமிங் கம்ப்யூட்டர்களுக்கு Need For Speed போல, கேமிங் ஸ்மார்ட்ஃபோனுக்கு Asphalt சீரிஸ் இன்றி அமையாது உலகு! Arcade வகை ரேஸிங் கேமான இதன் லேட்டஸ்ட் வெர்ஷன்தான் Asphalt 9 Legends. இந்த சீரிஸில் சிறந்தது எனப் பெயர்பெற்றிருக்கும் இதில், எதிர்பார்த்தபடியே நிறைய கார்கள் - பல ட்ராக்குகள் - ஓரளவுக்கு கஸ்டமைசேஷன் ஆகியவை இருக்கின்றன. எனக்கு இந்த கேமில் பிடித்தமான விஷயம்.... கார்னர்களில் Drift அடிப்பதுதான். ஆனால், ஸ்மார்ட் ஃபோனின் Internal Storage - பேட்டரி ஆகியவற்றை அதிகமாகக் கபளிகரம் செய்வது நெருடல். இந்த Editors' Choice கேமை டவுன்லோடு செய்ய... இதைச் சொடுக்கவும்.

Hill Climb Racing 2: ப்ளே ஸ்டோர் ரேட்டிங் - 4.4

Hill Climb Racing 2
Hill Climb Racing 2
Google Play Store

முன்னே சொன்ன ரேஸிங் கேம்களுடன் ஒப்பிட்டால், குறைவான ஸ்டோரேஜ் ஸ்பேஸையும் பேட்டரி திறனையும் எடுத்துக் கொள்வது, இதன் வரவேற்கத்தக்க அம்சங்களில் ஒன்று. எளிதான அதே சமயம் அனைத்து வயதினருக்குமான ஃபன் கேமாக அறியப்படும் Hill Climb Racing 2-ல், பைக் முதல் பீரங்கி வரை - எஸ்யூவி முதல் Snow Mobile வரை என விதவிதமான வாகனங்களில் பறக்கமுடியும். ஒருவர் தேர்ந்தெடுக்கும் பாதையில் வேகமாகச் செல்வதுடன் மட்டுமல்லாது, தலைகுப்புற விழாமல் வாகனத்தை ஓட்டுவதுதான் இங்கே டாஸ்க். 2D செட்-அப்பில் கிராஃபிக்ஸ் இருப்பதால், குறைவான Internal Storage மற்றும் Ram கொண்ட பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான ஸ்மார்ட்போன்களில் கூட Hill Climb Racing 2 விளையாட முடியும். ஏற்கெனவே இருந்த Hill Climb Racing கேமின் இரண்டாவது வெர்ஷன்தான் இது. கேமை டவுன்லோடு செய்ய... இதைச் சொடுக்கவும்.

Grid Autosport: ப்ளே ஸ்டோர் ரேட்டிங் - 4.3

Grid Autosport
Grid Autosport
Google Play Store

Simulation அடிப்படையிலான ரேஸிங் கேமான இது, ரியல் ரேஸிங் 3-க்குச் சவால்விடும்படி அமைந்திருக்கிறது. மற்ற கேம்களுடன் ஒப்பிட்டால், இது இலவசம் கிடையாது என்பதை நினைவில் கொள்ளவும் (iOS - 799 ரூபாய்). நூற்றுக்கும் அதிகமான டிராக்குகளில், ஸ்ட்ரீட் கார் முதல் ரேஸ் கார் வரை என ஒருவர் தனக்குப் பிடித்தபடி, பல்வேறு விதங்களில் இங்கே பறக்கலாம். எண்ணிக் கொடுக்கும் காசுக்கு ஏற்ப, இங்கே கிராஃபிக்ஸ் அட்டகாசமாக இருப்பதுடன், அதிக வேகத்தில் காரைக் கையாள்வதும் சூப்பர் அனுபவம். Lap Record விரும்பிகளுக்கு Grid Autosport ஒரு வரப்பிரசாதம். கேமை டவுன்லோடு செய்ய... இதைச் சொடுக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism