Published:Updated:

இந்தியாவின் டாப்-5 ரியல் எஸ்யூவிகள்!

இந்தியாவின் டாப்-5 ரியல் எஸ்யூவிகள்
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவின் டாப்-5 ரியல் எஸ்யூவிகள்

குறைந்த பட்ஜெட்டில் வாங்கக் கூடிய ஐந்து உண்மையான ஆப் - ரோடு எஸ்யூவிகளை இந்த மாத டாப் 5 - ல் பார்ப்போம்.

இந்தியாவின் டாப்-5 ரியல் எஸ்யூவிகள்!

குறைந்த பட்ஜெட்டில் வாங்கக் கூடிய ஐந்து உண்மையான ஆப் - ரோடு எஸ்யூவிகளை இந்த மாத டாப் 5 - ல் பார்ப்போம்.

Published:Updated:
இந்தியாவின் டாப்-5 ரியல் எஸ்யூவிகள்
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவின் டாப்-5 ரியல் எஸ்யூவிகள்

முதன் முதலில் SUV என்னும் செக்மென்ட் உருவானபோது, அதற்கென ஹைலைட்டாக சில அம்சங்கள் இருந்தன. அதில் முதலாவதாக இருந்தது 4x4 எனும் ஆல் வீல் டிரைவ் டிரான்ஸ்மிஷன். இந்த முறையில் இன்ஜின் உருவாக்கும் சக்தி 4 வீல்களுக்கும் செல்லும் என்பதால் சேறு, பள்ளம், மேடு ஆகியவற்றை எளிதில் கடக்க முடிந்தது. ஆனால் தற்போது கார் தயாரிப்பாளர்கள் ஹேட்ச்பேக் காரின் கிரவுண்ட் கிளியரன்ஸை ஏற்றி மைக்ரோ SUV என விற்று வருகின்றனர். இந்நிலையில் குறைந்த பட்ஜெட்டில் வாங்கக் கூடிய ஐந்து உண்மையான ஆப் - ரோடு எஸ்யூவிகளை இந்த மாத டாப் 5 - ல் பார்ப்போம்.

1. மஹிந்திராவின் தார் ரூ.16.7 லட்சம்

மஹிந்திராவின் தார் இந்த லிஸ்ட்டின் மிகவும் குறைந்த விலை ஆஃப்ரோடர் மட்டுமல்ல, தாரிடம்தான் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் உள்ளது. இப்போது நீங்கள் ஒரு தாரை வாங்க விரும்பினால், வேரியன்ட்டைப் பொருத்து, 25 முதல் 47 வாரங்கள் வரை டெலிவரிக்குக் காத்திருக்க வேண்டும். இதில் டாப் எண்ட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடல்களுக்குத்தான் அதிக காத்திருப்பு காலம் உள்ளது. அதேசமயம், கன்வெர்ட்டிபிள் மாடல்களுக்கான காத்திருப்பு காலம் மிகக் குறைவாக உள்ளது.

இந்தியாவின் டாப்-5 ரியல் எஸ்யூவிகள்!

ப்ளஸ்: விலை, டிசைன் மைனஸ்: 3 டோர் என்பதால், பின் சீட்டை அடைவதில் சிரமம்.

2. ஃபோர்ஸ் கூர்க்கா ரூ.17.8 லட்சம்

மெர்சிடீஸில் இருந்து பெறப்பட்ட 2.6 லி இன்ஜினைக் கொண்டிருந்தாலும், இதன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வெளிப்படுத்தும் 90 bhp, வேகப் போட்டியில் தோற்கிறது. அதேசமயம், ஃபோர்ஸ் கூர்க்கா தோற்றத்தில் தாரின் அண்ணனைப்போல பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறது. இருப்பினும் உட்புற வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் முந்தைய தலைமுறை தாரை நினைவுபடுத்துகின்றன.

பின்புற சீட்டுகளுக்குள் டெயில் கேட் வழியாக நுழைய முடியும் என்பதால், வயதானவர்கள் நுழைந்து அமர சற்று வசதியாக இருக்கும்.ஃபோர்ஸ் கூர்க்காரூ. 17.8 லட்சம்

இந்தியாவின் டாப்-5 ரியல் எஸ்யூவிகள்!

ப்ளஸ்: கட்டுமஸ்தான பில்ட் குவாலிட்டி, இடவசதி மைனஸ்: இன்ஜின், சர்வீஸ் நெட்வொர்க்

3. இசுஸூ D-Max V-crossரூ.22.3 லட்சம்

இவ்வளவு நாள் பிக் அப் செக்மென்ட்டில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்து கொண்டிருந்த இசுஸூவுக்கு டொயோட்டா ஹைலக்ஸ் மூலம் போட்டி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஹைலக்ஸ் ஒரு செக்மென்ட் மேலே உள்ள கார் என்பதால், 25 லட்ச பட்ஜெட் விலையில் 4x4 பிக்-அப் ட்ரக் என்றால் D-max V-crossதான்.

என்ட்ரி வேரியன்ட்டில் 18 இன்ச் அலாய் வீல்கள், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், 7.0 இன்ச் யுஎஸ்பி-யுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன், புளுடூத், டிவிடி கம்பாட்டிபிலிட்டி மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா ஆகிய வசதிகள் V-க்ராஸ் Z-ல் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதுவே டாப் எண்டு Z ப்ரெஸ்டீஜ் வேரியன்ட்டில் ESC (Electronic Stability Control), டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் டிசென்ட் அசிஸ்ட், ஷிஃப்ட் ஆன் தி ப்ளை, லெதர் சீட்கள், 8 ஸ்பீக்கர் சரவுண்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோ க்ரூஸ் கன்ட்ரோல் ஆகிய வசதிகள் கொடுக்கப் பட்டிருக்கின்றன.

இந்தியாவின் டாப்-5 ரியல் எஸ்யூவிகள்!

ப்ளஸ்: இன்ஜின் தரம், வசதிகள் மைனஸ்: விலை

4. மஹிந்திரா எக்ஸ்யூவி 700ரூ.28 லட்சம்

இந்தியாவின் தற்போதைய மோஸ்ட் வான்டட் காரான XUV 700-ன் AX 7 டீசல் AT மாடலில் 4x4 ஆப்ஷனலாக வருகிறது. தாரைப்போல கடுமையான ஆஃப் ரோடிங்குக்குப் பயன்படுத்த முடியாது என்றாலும், மழை சேறு மற்றும் கடற்கரை மணல் ஆகியவற்றில் சிக்காமல் வெளி வர உதவும். டீலர் வட்டாரங்களில் விசாரித்தபோது, இந்த வேரியன்ட்டுக்கு சிப் தட்டுப்பாடு காரணமாக 21 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நீள்கிறதாம். XUV 700 புக்கிங் செய்யும்போது, இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்தியாவின் டாப்-5 ரியல் எஸ்யூவிகள்!

ப்ளஸ்: டிசைன், சிறப்பம்சங்கள் மைனஸ்: வெயிட்டிங் பீரியட்

5. ஜீப் காம்பஸ்ரூ.16.7 லட்சம்ரூ.33.36 லட்சம்

அமெரிக்காவின் புகழ்பெற்ற ஜீப் நிறுவனம், எஸ்யூவி தயாரிப்பில் முதன்மையானது. அதன் லைன்-அப்பில் நிறைய மாடல்கள் இருந்த போதிலும், காம்பஸை டிக் அடித்ததற்குக் காரணம், அதன் டிசைன்தான். 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஜீப் வெளியானபோது, அதன் போட்டி கார்களை விட 2 லட்ச ரூபாய் விலை அதிகமாக இருந்தது. இருப்பினும் அதன் திரும்பிப் பார்க்க வைக்கும் டிசைன் காரணமாக வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கினர். சென்ற ஆண்டு கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஃபேஸ்லிஃப்ட் வெளியான நிலையில், கடந்த மார்ச் மாதம் காம்பஸின் 7 சீட்டர் மாடலான மெரிடியனை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஜீப்.

இந்தியாவின் டாப்-5 ரியல் எஸ்யூவிகள்!

ப்ளஸ்: டிசைன், கட்டுமானம் மைனஸ்: விலை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism