Published:Updated:

`கரோலா மீட்ஸ் எஸ்யுவி!' - டொயோட்டாவின் புதிய அறிமுகம்

டொயோட்டா
டொயோட்டா

``ஜப்பானில் 1996-ம் ஆண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கரோலா சீரிஸ் கார்கள் உலகம் முழுவதும் உள்ள சுமார் 150 நாடுகளில் அளவுக்கு அதிகமான வரவேற்பைப் பெற்றுள்ளன.”

உலகின் முன்னனி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டொயோட்டா தற்போது தனது கரோலா வரிசையில் புதிதாக `கரோலா கிராஸ்’ எனும் கம்பாக்ட் எஸ்யுவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அறிமுக விழா தாய்லாந்தில் நடைபெற்றது. மற்ற நாடுகளிலும் விரைவில் இந்த `கரோலா கிராஸ்’ கம்பாக்ட் எஸ்யுவி லாஞ்ச் செய்யப்பட உள்ளது.

`கரோலா கிராஸ்’ கம்பாக்ட் எஸ்யுவியானது புதிய வகை எஸ்யுவி மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் உறுதியான அதிநவீன தோற்றத்தைக் கொண்ட இந்தக் கார் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. . நீண்ட பயணத்துக்கு உகந்த மற்றும் அதிக லக்கேஜ்களை ஏற்றிச் செல்லும் வகையில் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கார்
கார்

புதிய மாடலின் அறிமுகம் குறித்து அந்நிறுவனத்தின் பொறுப்பு அதிகாரி டெய்சோ கமெயாமா பேசும்போது, ``கரோலா கிராஸ் தற்போது கரோலா குடும்பத்தில் புதிதாக இணைந்துள்ளது. எங்களுடைய வாடிக்கையாளர்கள் அவர்களது குடும்பத்தில் இருக்கும் நண்பர்கள், சகோதரர்கள் மற்றும் உறவினர்களைப்போல இந்தக் கரோலா கிராஸை ஏற்றுக்கொள்வார்கள் என உறுதியாக நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் 1996-ம் ஆண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து கரோலா தொடர் கார்கள் உலகம் முழுவதும் உள்ள சுமார் 150 நாடுகளில் அளவுக்கு அதிகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தந்த நாடுகளில் உள்ள மக்களின் தேவைக்கு ஏற்ப கார்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எஸ்யுவியின் தேவைகள் வளர்ந்து வரும் காலத்தில் இந்த மாடல் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவில் விருப்பமான ஒன்றாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

கிளாஸிக் கார் பிரியர்களைக் கவர்ந்த டொயோட்டா 
கொரோனா! ஏன் நின்றது?
அடுத்த கட்டுரைக்கு