Published:Updated:

ஒரு பைக்கின் விலை ரூ.20 லட்சம்; ட்ரையம்ப் டைகர் 1200-ல் என்ன ஸ்பெஷல்?

Triumph Tiger 1200
News
Triumph Tiger 1200

டுகாட்டி மல்ட்டிஸ்ட்ராடா V4 மற்றும் பிஎம்டபிள்யூ 1250 GS ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக இந்த ட்ரையம்ப் டைகர் 1200 பைக்குகள் இருக்கும்

2022-க்கான புதிய ட்ரையம்ப் டைகர் 1200 பைக்கை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறது ட்ரையம்ப். இவ்வளவு நாட்களாக டைகர் 1200 மேல் இருந்த திரை விலக்கப்பட்டிருக்கிறது. டைகரில் GT, GT Pro, GT Explorer, Rally Pro, Rally Explorer என மொத்தம் ஐந்து வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது ட்ரையம்ப். ஒவ்வொன்றும் தெறி ரகம்.

ட்ரையம்ப் டைகர் 1200
ட்ரையம்ப் டைகர் 1200

சாதாரண சாலைகளில் ஓட்டும் வகையிலான வசதிகளோடு GT வேரியன்ட்களும், ஆஃப் ரோடிங்கிற்கு ஏற்ற வகையில் Rally வேரியன்ட்களும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து வேரியன்ட்களிலும் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 150hp பவர் மற்றும் 130Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 1,160 சிசி இன்ஜின்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. முந்தைய ஜெனரேஷனைவிட இந்தப் புதிய டைகர் 1200 ஆனது, 9PS பவரை அதிகமாகக் கொண்டிருக்கிறது. எடையும் 25 கிலோ குறைந்து கொஞ்சம் இலகுவாகியிருக்கிறது புதிய ட்ரையம்ப்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அப்டேட் செய்யப்பட்ட எல்இடி விளக்குகள், 6 ரைடிங் மோடுகள், ட்ராக்ஷன் கன்ட்ரோல், ஏபிஎஸ், சஸ்பென்ஷன் செட்டிங்ஸ் எல்லாம் உண்டு. ரைடிங் மோடுகளுக்கு ஏற்றவாறு த்ராட்டில் ரெஸ்பான்ஸிலும் மாற்றம் இருக்குமாம். GT, GT Pro மற்றும் Rally Pro ஆகிய மாடல்களில் ஸ்டாண்டர்டாக 20 லிட்டர் ஃப்யூல் டேங்க்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எக்ஸ்ப்ளோரர் வேரியன்ட்களில் மட்டும் 10 லிட்டர் அதிகம்.

ட்ரையம்ப் டைகர் 1200 பைக்குகள்
ட்ரையம்ப் டைகர் 1200 பைக்குகள்

இந்தப் புதிய மாடலில் புத்தம் புதிய சேஸியைப் பயன்படுத்தியிருக்கிறது ட்ரையம்ப். இந்த சேஸியானது முந்தைய பைக்கை விட 5.5 கிலோ குறைவான எடையைக் கொண்டிருக்கிறது. இந்தப் புதிய பைக்கை கொஞ்சம் ஸ்லிம்மாக இருக்கும் வகையிலேயே உருவாக்கியிருக்கிறது ட்ரையம்ப். சீட் உயரத்தையும் இந்த ட்ரையம்ப்பில் நம் தேவைக்கேற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியுமாம். GT வேரியன்ட்களில் 850மிமீ முதல் 870மிமீ வரையும், Rally வேரியன்ட்களில் 875மிமீ முதல் 895மிமீ வரையும் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியுமாம். முன்பை விட ஸ்லிம்மாக இருப்பதால், ரைடருக்கு கால் எட்டும் வகையிலேயே இந்த பைக் இருக்கும் எனக் கூறியுள்ளது ட்ரையம்ப்.

டுகாட்டி மல்ட்டிஸ்ட்ராடா V4, பிஎம்டபிள்யூ 1250 GS ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக இந்த ட்ரையம்ப் டைகர் 1200 பைக்குகள் இருக்கும். இந்தியாவில் 2022 தொடக்கத்தில் இந்த பைக் வெளியாகலாம். 18 - 20 லட்சம் ரூபாய்க்குள் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.