Published:Updated:

முன்பைவிட அதிக பவர்... BS-6 டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 எப்படி இருக்கிறது?

அப்பாச்சி RTR 160
News
அப்பாச்சி RTR 160 ( TVS Motors )

ஆச்சர்யப்படும் விதமாக, BS-6 வெர்ஷன் முன்பைவிட அதிக பவர் (0.4bhp) மற்றும் டார்க்கை (0.09kgm) வெளிப்படுத்துகிறது. இவை கிடைக்கக்கூடிய ஆர்பிஎம்மும் மாறியிருக்கிறது.

RTR... இந்த பாணிக்கு அப்பாச்சி மாறிய பிறகுதான், அதன் விற்பனை வேறு பரிமாணத்தை எட்டியது. இளைஞர்களைக் கவரும் வகையில் பைக்கில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததும் அதற்கான காரணம். 160சிசி, 180சிசி, 200சிசி, 313சிசி என அப்பாச்சி சீரிஸ் வளர்ந்தாலும், அதற்கான விதையை ஆழமாகப் போட்டது RTR 160தான்! 2007-ல் அறிமுகமான இந்த பைக், 2012-ல் தனது முதல் ஃபேஸ்லிஃப்ட்டைக் கண்டது. பின்னர் பல்வேறு கலர் அப்டேட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எடிஷன்களால், இந்த அப்பாச்சியின் தோற்றத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது டிவிஎஸ். தற்போது நாடெங்கும் BS-6 விதிகள் ஏப்ரல் 1, 2020 முதலாக அமலுக்கு வரும் சூழலில், RTR 160 பைக்கின் BS-6 மாடலை அந்த நிறுவனம் களமிறக்கியுள்ளது. முன்பைப் போலவே டிரம் (95,500 ரூபாய், சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை) / டிஸ்க் (98,500 ரூபாய், சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை) என இரு வேரியன்ட்களில் வந்திருக்கும் இதன் விலை, பழைய மாடல்களைவிட 5,873 - 5,978 ரூபாய் அதிகமாக இருக்கிறது. எனவே, BS-4 மாடலுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை இனி பார்க்கலாம்.

டிசைன் மற்றும் வசதிகள்

Digi - Analogue Meters
Digi - Analogue Meters
TVS Motors

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏற்கெனவே இருந்த 5 கலர் ஆப்ஷன்களுடன், Gloss Red புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி பைக்கின் டிசைனில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை. அனலாக் டிஜிட்டல் மீட்டரில் இன்ஜின் மற்றும் ஏபிஎஸ் இண்டிகேட்டர்கள் இடம்பெற்றுள்ளன. இதன் Blue Backlit, தற்போது வெள்ளை நிறத்துக்கு மாறியுள்ளது. பைக்கின் கிராஃபிக்ஸ் போலவே, டேக்கோமீட்டரின் டயலிலும் சிறிய மாற்றம் தெரிகிறது. இன்ஜின் கவுலில் BS-6 ஸ்டிக்கரைப் பார்க்கமுடிகிறது. மேலும் எதிர்பார்த்தபடியே, எக்ஸாஸ்ட் பைப் தடிமனாகியிருக்கிறது. ஆனால், இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி LED DRL & LED டெயில் லைட்டுக்கு மேட்சிங்காக, LED ஹெட்லைட்டை டிவிஎஸ் வழங்கியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. தவிர அப்பாச்சி RTR 160 4V பைக்கில் புதிதாக வழங்கப்பட்டிருக்கும் ரியர் வியூ மிரர்கள் மற்றும் இண்டிகேட்டர்கள், இங்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இதுபோன்ற சிறிய விஷயங்கள், பைக்கின் டிசைனை இன்னும் ஃப்ரெஷ்ஷாகக் காட்டும் என்பதே நிதர்சனம். கிரவுண்ட் கிளியரன்ஸ் 15 மி.மீ அதிகரிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது (180மி.மீ). BS-4 மாடலைவிட BS-6 வெர்ஷனின் எடை 1 கிலோ அதிகரித்திருக்கிறது (டிரம் - 139 கிலோ, டிஸ்க் - 140 கிலோ).

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இன்ஜின் பர்ஃபாமன்ஸ்

Glide Through Tech
Glide Through Tech
TVS Motors

அப்பாச்சி RTR 160 பைக்கின் BS-4 மாடல் மற்றும் BS-6 வெர்ஷனில் இருப்பது, ஒரே 159.7 சி.சி ஷார்ட் ஸ்ட்ரோக் இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணிதான். ஆனால், ஆச்சர்யப்படும் விதமாக, BS-6 வெர்ஷன் முன்பைவிட அதிக பவர் (0.4bhp) மற்றும் டார்க்கை (0.09kgm) வெளிப்படுத்துகிறது. இவை கிடைக்கக்கூடிய ஆர்பிஎம்மும் மாறியிருக்கிறது. இதனால் பைக்கை விரட்டி ஓட்டுவது கூடுதல் ஃபன்னாக இருக்கலாம். கார்புரேட்டருக்குப் பதில் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் வந்திருப்பதால், கிக்கர் லீவரை எடுத்துவிட்டது டிவிஎஸ். பைக்கின் டெக்னிக்கல் விவரங்களில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், பெட்ரோல் Tap மற்றும் சோக் நீக்கப்பட்டிருப்பதற்கு வாய்ப்புள்ளது. அப்பாச்சி RTR 160 4V போலவே RT-Fi தொழில்நுட்பத்துடன் Glide Through வசதியும் RTR 160 2V-க்கு இடம்பெயர்ந்திருக்கிறது. இவையெல்லாம் ஒன்றுசேர்ந்து, பைக்கின் பர்ஃபாமன்ஸில் என்ன மாதிரியான முன்னேற்றத்தைத் தரும் என்பது, அதை ஓட்டிப்பார்க்கும்போது தெரிந்துவிடும். இன்ஜின் அதிர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தால் ஹார்டின் பேட்டரியின் அளவு 12V 9Ah-ல் இருந்து 12V 8Ah MF-க்கு மாறிவிட்டது. எனவே, DC அமைப்பு இடம்பெற்றிருப்பதற்கு சாத்தியம் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதல் தீர்ப்பு

அப்பாச்சி RTR 160
அப்பாச்சி RTR 160
TVS Motors

அப்பாச்சி RTR 160 பைக்கின் பிரதான போட்டியாளரான பல்ஸர் 150 சீரிஸ் (நியான், ஸ்டாண்டர்டு, ட்வின் டிஸ்க்) பைக்குகள், விரைவில் BS-6 அவதாரத்தில் வரவிருக்கின்றன. பைக்கின் பிரேக்ஸ், டயர்கள், சஸ்பென்ஷன், சேஸி போன்ற மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை என்பதால், பைக்கின் ஓட்டுதல் அனுபவம் அதன் டிசைனைப் போலவே ஸ்போர்ட்டியாக இருக்கும் என நம்பலாம். விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடிய ரகத்தில் இருந்தாலும், புதிதாக வசதிகள் ஏதும் சேர்க்கப்படாதது நெருடல்தான். மற்றபடி பின்பக்கத்தில் அகலமான டயர் (120/80), ஸ்ப்ளிட் சீட், RTR 180 பைக்கிலிருக்கும் சில ஸ்போர்ட்டி விஷயங்கள், இதற்குப் புத்துணர்ச்சி அளித்திருக்கும் எனத் தோன்றுகிறது.