Published:Updated:

டிவிஎஸ் அப்பாச்சி RTR 4V RT-Fi BS-6 சீரிஸ்: ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட்!

அப்பாச்சி RTR 4V BS-6
News
அப்பாச்சி RTR 4V BS-6 ( Raghul )

இரு பைக்குகளுமே கார்புரேட்டருக்குப் பதிலாக ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் இடம் பிடித்துள்ளது. எனவே இரண்டுமே முன்பைவிட இன்னும் ஸ்மூத்தாக இயங்குவதுடன், த்ராட்டில் ரெஸ்பான்ஸும் கொஞ்சம் துல்லியமாக மாறியிருக்கிறது.

ஏப்ரல் 2020 முதலாக, நாடெங்கும் BS-6 மாசு விதிகள் அமலுக்கு வருவது தெரிந்ததே, இதனால் வாகன உற்பத்தியாளர்கள் தமது தயாரிப்புகளை அதற்கேற்ப மேம்படுத்துவதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். டூ-வீலர்களைப் பொறுத்தவரை ஹோண்டா ஆக்டிவா 125 மற்றும் SP 125 (ஷைன்), ஹீரோ ஸ்ப்ளெண்டர் 110 iSmart, யமஹா FZ V3.0 சீரிஸ் மற்றும் YZF-R15 V3.0 என மாடல்கள் வரத் தொடங்கிவிட்டன; இந்த நிலையில், தனது அப்பாச்சி RTR 4V சீரிஸ் (160சிசி, 200சிசி) பைக்குகளில் RT-Fi தொழில்நுட்பத்தை (Race Tuned – Fuel Injection) வழங்கி, அதனை BS-6 விதிகளுக்கு ஏற்புடையதாக மாற்றியிருக்கிறது டிவிஎஸ். இந்த பைக்குகளை ஓட்டிப்பார்க்க, ஒசூரில் இருக்கும் தனது தொழிற்சாலைக்கு நம்மை அந்த நிறுவனம் அழைத்திருந்தது. ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்ட BS-4 மாடலுக்கும், இந்த BS-6 வெர்ஷனுக்கும் இடையிலான வித்தியாசங்களை, நாம் ஏற்கெனவே பார்த்துவிட்டோம். எனவே, இதன் ஓட்டுதல் அனுபவத்துடன், பைக்கின் ப்ளஸ் மைனஸ்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

அப்பாச்சி RTR 4V RT-Fi: BS-6 மாடல்களின் ப்ளஸ் பாயின்ட்

Apache RTR 4V BS-6
Apache RTR 4V BS-6
Raghul

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பைக்கின் அடிப்படை டிசைனில் பெரிதாக மாற்றமில்லை என்றாலும், அவை ஃப்ரெஷ்ஷாகவே காட்சியளிக்கின்றன. இதற்கு Claw வடிவ LED DRL உடனான புதிய LED ஹெட்லைட்தான் பிரதானமான காரணம். பகலில் நாங்கள் பைக்கை ஓட்டியதால், இதன் முழு திறனைப் பரிசோதிக்க முடியவில்லை. DRL-க்கு மேட்சிங்காக, ரியர் வியூ மிரர்களும் Claw வடிவத்தில் காட்சியளிக்கின்றன. இவை முன்பை விடக் கொஞ்சம் பெரிதாக இருப்பதால், முன்பைவிடச் சிறப்பான பயன்பாடு அனுபவம் கிடைக்கிறது. தவிர, இது பைக்கின் ஏரோடைனமிக்ஸிலும் கைகொடுக்கும் என்கிறது டிவிஎஸ்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

RTR 160 4V-ல் Chequered Flag-யை நினைவுபடுத்தும்படியான கிராஃபிக்ஸ், பெட்ரோல் டேங்க்கில் (மேல்பகுதி, பக்கவாட்டுப் பகுதி) இடம் பிடித்திருக்கிறது. டூயல் டோன் FIP சீட்டின் குஷனிங், முன்பைவிட அதிக சொகுசை வழங்கும்படி தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே RTR 200 4V பைக்கில், சிவப்பு நிற Race பாணி கிராஃபிக்ஸ் இருக்கிறது. இரு பைக்கின் நடுவேயும், வலதுபுற பக்கவாட்டுப் பகுதியில் உள்ள பாடி பேனல் புதிது.

இரு பைக்கிலுமே கார்புரேட்டருக்குப் பதிலாக ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் இடம் பிடித்துள்ளது. எனவே இரண்டுமே முன்பைவிட இன்னும் ஸ்மூத்தாக இயங்குவதுடன், த்ராட்டில் ரெஸ்பான்ஸும் கொஞ்சம் துல்லியமாக மாறியிருக்கிறது. எக்ஸாஸ்ட் சத்தம் மற்றும் பவர் டெலிவரியில் பெரிய மாறுதல் தெரியாதது வரவேற்கத்தக்க அம்சம்.

Apache RTR 4V BS-6
Apache RTR 4V BS-6
Raghul

RTR 200 4V பைக்கில் முன்பைவிட எடை குறைவான Assymmetric பிஸ்டன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே இன்ஜின் தனது டார்க்கில் கோட்டை விட்டதை, அதிக ஆர்பிஎம்மை விரைவாக எட்டிப்பிடிக்கும் திறனில் சரிகட்டிவிடுகிறது. புதிய Wave Bit சாவி, பார்க்க நீட்டாக இருக்கிறது.

இரு RTR 4V பைக்கிலுமே, GTT (Glide Through Technology) எனும் வசதியை வழங்கியிருக்கிறது டிவிஎஸ். இது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்களில் உள்ள Creep மோடு போல இருக்கிறது. அதன்படி முதல் கியரைப் போட்டுவிட்டு கிளட்ச்சை விடும்போது, எந்த ஆக்ஸிலரேஷனும் கொடுக்காமலேயே பைக் தானாக முன்னோக்கிச் செல்கிறது (8 கிமீ வேகம் வரை). இது நெரிசல்மிக்க நகர டிராஃபிக்கில் செல்லும்போது, ரைடருக்கு ஆபத்பாந்தவனாகக் கைகொடுக்கும் எனச் சொல்லலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்டார்க் 125 ஸ்கூட்டரைத் தொடர்ந்து, RTR 200 4V பைக்கில் Smart Connect தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது. இது மொபைலின் ப்ளூடூத் மற்றும் TVS Connect App வழியே இயங்குகிறது. இதனை இயக்க/அட்ஜஸ்ட் செய்ய, இடதுபுற ஸ்விட்ச்சில் i எனும் சிறிய பட்டன் இடம்பிடித்திருக்கிறது. LCD டிஜிட்டல் மீட்டரில், இதற்கெனப் பிரத்யேகமாக Dot Matrix டிஸ்பிளே இருக்கிறது. இவையெல்லாமே தெளிவாக இருப்பது பெரிய ப்ளஸ்.

இரு பைக்குகளின் சீட்டிங் பொசிஷன், சஸ்பென்ஷன் செட்-அப், பிரேக்ஸ், சேஸி ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை. எனவே ஒட்டுதல் அனுபவம் முன்பைப் போலவே சிறப்பாகவே உள்ளது. RTR 200 4V பைக்கில் முன்பைவிட அதிக உறுதித்தன்மை கொண்ட Brass Coated செயின் ஸ்ப்ராக்கெட், குறைவான Rolling Resistance & அதிக ரோடு க்ரிப் தரக்கூடிய பின்பக்க ரேடியல் டயர் பொருத்தப்பட்டுள்ளன. இவை ஒன்றுசேர்ந்து, பைக்கின் ஓட்டுதலை இன்னும் ஃபன் ஆக்கியுள்ளது என்றால் மிகையில்லை.

போட்டி பைக்குகளைவிடப் பவர்ஃபுல்லாக இருக்கும் RTR 160 4V-ன் வேரியன்ட்களின் எண்ணிக்கை, மூன்றிலிருந்து இரண்டாகச் சுருங்கிவிட்டது. பைக்கின் நீளமான பெயருக்குத் துணையாக, எக்கச்சக்க வேரியன்ட்களைக் கொண்டிருந்த RTR 200 4V, தற்போது ஒரே வேரியன்ட்டில் கிடைக்கிறது.

Apache RTR 4V BS-6
Apache RTR 4V BS-6
Raghul

அப்பாச்சி RTR 4V RT-Fi: BS-6 மாடல்களின் மைனஸ் பாயின்ட்

LED ஹெட்லைட் ஸ்டைலாகவே இருந்தாலும், அதனை அருகில் வந்துபார்க்கும்போது குறைகள் தெரிகிறது. ஹெட்லைட்டின் மேல்பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கறுப்பு நிற பிளாஸ்டிக்கின் தரம் ஓகே ரகம் தான். மேலும் LED DRL முன்பைப் போலவே Transparent ஆக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதேபோலவே, பைக்கின் நடுவே ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் அமைப்பு வெளியே தெரியாதபடி மூடியிருக்கும் பிளாஸ்டிக்கின் தரம், கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம்.

BS-4 மாடல் போலவே BS-6 வெர்ஷனும் விரட்டி ஓட்டப்படுவதை விரும்பினாலும், அதிக ஆர்பிஎம்களில் அதிர்வுகள் லேசாக எட்டிப்பார்ப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஆனால் இது ரைடருக்கு எந்த இடத்திலும் அசொளகரியத்தைத் தராது என உறுதியாகச் சொல்லலாம். கார்புரேட்டர் இல்லாதது, ஒருசில ரைடர்களுக்கு வருத்தமாக இருக்கலாம்.

BS-4 RTR 160 4V-ன் Fi மாடலில் கியர் இண்டிகேட்டர் மற்றும் White பேக்லிட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இருந்தது. இந்த இரண்டுமே BS-6 RTR 160 4V பைக்கில் மிஸ்ஸிங் என்பது மைனஸ். பைக் ஆர்வலர்களைக் குஷிப்படுத்தும் விதமாக, RTR 200 4V பைக்கின் பவரையும் கியரின் எண்ணிக்கையையும் டிவிஎஸ் அதிகரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்!

Apache RTR 4V BS-6
Apache RTR 4V BS-6
Raghul

RTR 200 4V பைக்கின் கிராஃபிக்ஸ், சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். மேலும் இரண்டு பைக்கிலுமே கலர் ஆப்ஷன்கள் கொஞ்சம் குறைவாக இருப்பது நெருடல்தான். டிவிஎஸ்ஸின் விலைகுறைவான மாடல்களில் Hazard இண்டிகேட்டர்கள் இருக்கும் நிலையில், அது இங்கேயும் கொடுக்கப்பட்டிருக்கலாம். தவிர இரண்டின் விலையுமே கொஞ்சம் அதிகம்போலத் தோன்றினாலும், எல்லா பைக்குகளுமே BS-6 மாற்றம் என்பது தவிர்க்கமுடியாதது.