Published:Updated:

`BS-6 என்டார்க் 125 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது டி.வி.எஸ்' - விலை விவரங்கள் இதோ..!

என்டார்க் 125 ( டி.வி.எஸ் மோட்டார்ஸ் )

BS-4 மாடல் போலவே இதுவும் டிரம் பிரேக், டிஸ்க் பிரேக், ரேஸ் எடிஷன் என 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது. 6,380 - 7,620 ரூபாய் வரை விலை உயர்வு பெற்றுள்ள BS-6 என்டார்க்கின் டெக்னிக்கல் விபரங்கள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

`BS-6 என்டார்க் 125 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது டி.வி.எஸ்' - விலை விவரங்கள் இதோ..!

BS-4 மாடல் போலவே இதுவும் டிரம் பிரேக், டிஸ்க் பிரேக், ரேஸ் எடிஷன் என 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது. 6,380 - 7,620 ரூபாய் வரை விலை உயர்வு பெற்றுள்ள BS-6 என்டார்க்கின் டெக்னிக்கல் விபரங்கள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

Published:Updated:
என்டார்க் 125 ( டி.வி.எஸ் மோட்டார்ஸ் )

125சிசி ஸ்கூட்டர் செக்மென்ட்டில் BS-6 மாடல்கள் வரிசையாக வந்துகொண்டிருக்கும் சூழலில், அந்தப் பிரிவின் டாப் செல்லிங் மாடல்களில் ஒன்றான என்டார்க், தற்போது BS-6-க்கு மாறிவிட்டது! BS-4 மாடல் போலவே இதுவும் டிரம் பிரேக், டிஸ்க் பிரேக், ரேஸ் எடிஷன் என 3 வேரியன்ட்களில் கிடைக்கிறது. 6,380 - 7,620 ரூபாய் வரை விலை உயர்வு பெற்றுள்ள BS-6 என்டார்க்கின் டெக்னிக்கல் விவரங்கள் (பவர்/டார்க், எடை, அளவுகள், வசதிகள்) இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. ஆனால், கார்புரேட்டருக்குப் பதிலாக ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் (RT-Fi) இடம்பெற்றிருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Ntorq 125
Ntorq 125
TVS Motors

மேலும் எக்ஸாஸ்ட் அமைப்பிலும் மாறுதல் இருக்கலாம் (Catalytic Converter). தவிர ரேஸ் எடிஷனில் பிரத்யேகமாக இடம்பெற்ற LED ஹெட்லைட் மற்றும் Hazard இண்டிகேட்டர்கள், இதர மாடல்களிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அப்பாச்சி RR310 போலவே, இங்கும் TFT டிஸ்பிளே வந்தால் எப்படி இருக்கும்? என்டார்க்கில் ஏற்கெனவே இன்ஜின் கில் ஸ்விட்ச் இருப்பதால், ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம்கூட இங்கே வரலாம். பர்க்மேன் ஸ்ட்ரீட், SR 125, மேஸ்ட்ரோ எட்ஜ் 125, கிராஸியா 125, ரே-ZR 125 ஆகிய ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாக இருக்கும் என்டார்க் 125 BS-6ன் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலைகள் பின்வருமாறு,

என்டார்க் 125 டிரம் (BS-6): 73,292 (BS-4 விட7,620 ரூபாய் அதிகம்)

என்டார்க் 125 டிஸ்க் (BS-6): 77,292 (BS-4 விட 6,380 ரூபாய் அதிகம்)

என்டார்க் 125 ரேஸ் எடிஷன் (BS-6) - 80,872 (BS-4 விட 7,360 ரூபாய் அதிகம்).