Published:Updated:

பஜாஜ் & ஏத்தருக்குப் போட்டி... ரூ.1.15 லட்ச TVS iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் என்ன ஸ்பெஷல்?

iQube EV
iQube EV ( TVS Motors )

iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கும் 4.4kw எலெக்ட்ரிக் Hub மோட்டார், இதை 78 கி.மீ வேகம் வரை கொண்டுசெல்வதில் துணைநிற்கிறது.

பெங்களூரு ஆன்ரோடு விலையான ரூ.1.15 லட்சத்துக்குத் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக iQube-யைக் களமிறக்கியுள்ளது டிவிஎஸ். பெங்களூரில் உள்ள 10 டிவிஎஸ் டீலர்களிடம் இதன் புக்கிங் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், இதர நகரங்களில் இனி இது வரிசையாக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஜாஜ் சேட்டக் (புனே மற்றும் பெங்களூரில் மட்டுமே கிடைக்கிறது -ரூ.1-1.15 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலை), ஏத்தர் 450/450X (1.14 - 1.59 லட்சம், பெங்களூரு ஆன்ரோடு விலை) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாக iQube பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. இதில் என்ன ஸ்பெஷல்?

டிசைன் மற்றும் வசதிகள்

iQube EV
iQube EV
TVS Motors

அனைத்து வயதினரையும் கவர வேண்டும் என்பதால், சிம்பிளான அதே சமயம் மாடர்ன் தோற்றத்தையே கொண்டிருக்கிறது iQube. ஒட்டுமொத்தமாகவே, ஸ்கூட்டரின் Profile ஜூபிட்டரை நினைவுபடுத்தும்படியே அமைந்திருக்கிறது. ஏத்தர் 450 போலவே, இதையும் வெள்ளை நிறத்தில் மட்டுமே இப்போது வாங்கமுடியும். இதில் இடம்பெற்றிருக்கும் 12 இன்ச் டயமண்ட் கட் அலாய் வீல்கள், ஜூபிட்டர் கிராண்டே ஸ்பெஷல் எடிஷனில் இருந்தவைதான்; ஹெட்லைட் - U வடிவ LED DRL - டெயில் லைட் ஆகியவை எல்லாமே LED மயம் என்பது செம. சீட்டுக்கு அடியே ஃபுல் ஃபேஸ் ISI ஹெல்மெட் வைக்குமளவுக்கு இடமிருப்பதுடன், யுஎஸ்பி சார்ஜிங் பாயின்ட் இருப்பது வரவேற்கத்தக்கது. ஸ்டோரேஜ் ஸ்பேஸுக்கு லைட் வசதியும் உண்டு.

TFT Display Meter
TFT Display Meter
TVS Motors

மேலும், எலெக்ட்ரிக் மோட்டார் இருக்குமிடத்தில், `Electric' என நீல நிறத்தில் illuminated லோகோ இருப்பது கூல் டச்! என்டார்க் மற்றும் அப்பாச்சி RTR 200 4V ஆகிய வாகனங்களில் இருக்கும் TVS SmartXonnect தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டப் பாய்ச்சலை, iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் காட்டியிருக்கிறது டிவிஎஸ். டச் வசதியுடன் கூடிய TFT டிஸ்பிளேதான், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராக இருக்கிறது. இதற்கென பிரத்யேகமாக, TVS iQube மொபைல் செயலியும் வழங்கப்பட்டிருக்கிறது. GeoFencing, நேவிகேஷன் அசிஸ்ட், Incoming SMS/கால்களுக்கான அலர்ட், ரிமோட் பேட்டரி சார்ஜ் Status, Last Park லோகேஷன், ஸ்மார்ட் Statistics, க்ராஷ்/Fall அலர்ட், Anti Theft அலர்ட், லைவ் டிராக்கிங், அருகாமையில் இருக்கக்கூடிய சார்ஜிங் ஸ்டேஷன்கள் பற்றிய தகவல்கள் எனப் பலவசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. பாடி கலரில் ரியர் வியூ மிரர்கள் மற்றும் கிராப் ரெயில் இருப்பது அழகு. போட்டி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் போலவே, இங்கும் பார்க் அசிஸ்ட் இருக்கிறது (Q-Park Assist: Forward/Backward)!

எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி

iQube Application
iQube Application
TVS Motors

iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கும் 4.4kw எலெக்ட்ரிக் Hub மோட்டார், இதை 78 கி.மீ வேகம் வரை கொண்டுசெல்வதில் துணைநிற்கிறது. ஏத்தர் 450/450X இதைவிட அதிக வேகம் சென்றாலும் (80 கி.மீ), சேட்டக்கின் டாப் ஸ்பீடு இவற்றைவிடக் குறைவுதான் (60-65 கி.மீ)! சிங்கிள் சார்ஜில் 75 கி.மீ வரை iQube செல்லும் என டிவிஎஸ் தெரிவித்துள்ளது (எக்கோ மோடில் ஓட்டும்போது). இது ஏத்தருக்குச் சமமாக இருந்தாலும், டாப் ஸ்பீடில் விட்டதை ரேஞ்ச்சில் சரிகட்டிவிட்டது சேட்டக் (85-95கிமீ); சேட்டக்கில் பட்டன் ஸ்டார்ட் இருக்கும் நிலையில், iQube-ல் வழக்கமான சாவி துவாரமே இருக்கிறது. ஆனால், சாவி கார்களில் இருப்பதுபோல ப்ரீமியமாக உள்ளது ஆறுதல். பெட்ரோலில் இயங்கும் தனது மற்ற தயாரிப்புகளைப் போலவே, எக்கோ - பவர் என மோடுகளைக் கொண்டிருக்கிறது iQube. 0 -40 கி.மீ வேகத்தை 4.2 விநாடிகளில் எட்டும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் வசதி இருந்தாலும், போட்டியாளர்களைப் போலவே இங்கும் பேட்டரியைக் கழற்றிவிட முடியாது (Battery Swapping இல்லை). 3 Li-Ion பேட்டரி Pack-க்கு அலுமினிய கேஸிங் வழங்கப்பட்டிருப்பதால், அது நீர் மற்றும் தூசிலிருந்து பாதுகாக்கப்படும். இதற்கெனப் பிரத்யேகமான BMS உண்டு. மேலும் லித்தியம் ஐயன் பேட்டரி அமைப்புக்கு 3 வருடம்/50,000 கிமீ வாரன்ட்டி கொடுத்திருக்கிறது டிவிஎஸ். பைக்குகளைப் போல டெலிஸ்கோபிக் ஃபோர்க் - இரட்டை ஷாக் அப்சார்பர் இருப்பதால், ஓட்டுதல் தரம் நன்றாக இருக்கலாம்.

முதல் தீர்ப்பு

Charging Station
Charging Station
Autocar India

2012-ல் நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், ஹைபிரிட் ஸ்கூட்டர் கான்செப்ட்டாக வைக்கப்பட்ட Qube-ன் Production வெர்ஷனாக iQube வந்திருக்கிறது. இப்படி, லேட்டாக ஆனால் லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் iQube எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையில், சார்ஜிங் கேபிள் - சார்ஜிங் Adapter மற்றும் ஆயுட்காலத்துக்குமான SmartXonnect-ன் அடிப்படையான வசதிகளுக்கான தொகையும் அடக்கம். மேலும் Introductory Offer ஆக, ஒரு வருடத்துக்கான SmartXonnect Advanced Subscription ( ரூ.900), Home சார்ஜிங் யூனிட் (ரூ.7,000), Home சார்ஜருக்கான Installation தொகை (ரூ.2,400) ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது! 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், டிவிஎஸ் நிறுவனம் Creon எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கான்செப்ட்டைக் காட்சிக்கு வைத்தது தெரிந்ததே. அதிலிருந்த 12kw எலெக்ட்ரிக் மோட்டார் - 3 லித்தியம் ஐயன் பேட்டரி Pack இடம்பெற்றிருந்தது. இது 0 - 60 கி.மீ வேகத்தை வெறும் 5.1 விநாடிகளில் எட்டும் எனவும், சிங்கிள் சார்ஜில் 80 கி.மீ வரை செல்லும் என இந்த நிறுவனம் கூறியிருந்தது.

iQube Launch
iQube Launch
Autocar India

ஆனால், இது Production வடிவத்துக்கு வரும்போது, இதில் காலத்துக்கேற்ற பல மாற்றங்கள் வரும் என நம்பலாம். சில வருடங்களுக்கு முன்னால், எலெக்ட்ரிக் வாகனங்கள் என்றால் மொபைல்களைப் போலவே அவையும் சீனாவிலிருந்தே இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து கொண்டிருந்தன. ஆனால் தற்போது அந்த நிலை மாறி, `Made In India, For India & By India' என்ற ரீதியில், அதிக வசதிகளுடன் கூடிய தரமான தயாரிப்புகள் இந்த செக்மென்ட்டிலும் வந்துகொண்டிருப்பது ஆரோக்கியமான அம்சம்தான். அதை உறுதிப்படுத்தும் வகையில் வந்திருக்கும் ஏத்தர் 450/450X - பஜாஜ் சேட்டக் - டிவிஎஸ் iQube ஆகியவை, புதிய எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் இந்தியாவில் வருவதற்குத் தூண்டுகோலாக இருக்கும் என்பதே நிதர்சனம். ஏனெனில் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் இதுபோன்ற விலை அதிகமான தயாரிப்புகளையும், மக்கள் கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதே உண்மை. ஆனால், நிலையான வளர்ச்சி வேண்டுமானால், இதன் ரேஞ்ச் - சார்ஜிங் ஸ்டேஷன்களில் எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் கவனம் செலுத்துவது நல்லது.

iQube EV
iQube EV
TVS Motors
அடுத்த கட்டுரைக்கு