Published:Updated:

Bluetooth அப்பாச்சி, ஜூபிட்டர் Grande, Matte ஸ்கூட்டி, ரேடியான் SE... கமான் டிவிஎஸ்!

Jupiter Grande
Jupiter Grande ( TVS Motors )

ஒருபுறம் வாகன உற்பத்தியாளர்கள் புதுப்புதுத் தயாரிப்புகளை வரிசையாக அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்; மறுபுறத்தில் வாகன விலையில் தள்ளுபடிகள் வழங்கப்படுவதையும் ஆங்காங்கே பார்க்கமுடிகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, செப்டம்பர் மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறை கொஞ்சம் சரிவிலிருந்து மீண்டிருப்பதுபோலவே தெரிகிறது (வாகன விற்பனையைப் பொறுத்து). வரவிருக்கும் பண்டிகை காலமே இதற்கான காரணம் என்பதால், ஒருபுறம் வாகன உற்பத்தியாளர்கள் புதுப்புதுத் தயாரிப்புகளை வரிசையாக அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்; மறுபுறத்தில் வாகன விலையில் தள்ளுபடிகள் வழங்கப்படுவதையும் ஆங்காங்கே பார்க்கமுடிகிறது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு, டிவிஎஸ் தமது தயாரிப்புகளில் புதிய வேரியன்ட்களைக் களமிறக்கியுள்ளது. அவை என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

அப்பாச்சி RTR 200 4V ப்ளூடூத்

Apache Digital Meter
Apache Digital Meter
TVS Motors

என்டார்க் ஸ்கூட்டரில் பேசப்படும் அம்சங்களில் ஒன்று, அதன் டிஜிட்டல் மீட்டரில் இருக்கும் Smart Xonnect எனப்படும் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டிதான். தற்போது இதே வசதியை, தனது அப்பாச்சி RTR 200 4V பைக்கில் டிவிஎஸ் சேர்த்திருக்கிறது. 1,17,230 ரூபாய் எனும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கக்கூடிய இந்த பைக், வழக்கமான மாடலுடன் ஒப்பிடும்போது 2,550 ரூபாய் அதிக விலையைக் கொண்டுள்ளது. டிசைன் மற்றும் சிறப்பம்சங்களில் எந்த மாறுதலும் இல்லையென்றாலும், டிஜிட்டல் மீட்டரில் மாற்றம் தெரிகிறது. இதன் Layout புதிதாக இருப்பதுடன், TVS Connect மொபைல் ஆப் வாயிலாக ரைடர் தனது ஸ்மார்ட்ஃபோனை இந்த டிஸ்ப்ளேவுடன் கனெக்ட் செய்துகொள்ளமுடியும். Turn-By-Turn நேவிகேஷன், ரேஸ் Telemetry, டூர்/ட்ரிப் Mode, Lean Angle மோடு, க்ராஷ் அலர்ட், Call மற்றும் SMS-க்கான Notification, Low Fuel வார்னிங் போன்ற பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. இவை எல்லாமே, மொபைல் மற்றும் ஆப் உதவியுடன்தான் இயங்கும். முன்பைவிட அதிக பவர்/6 ஸ்பீடு கியர்பாக்ஸ் என இதில் ஒன்றையாவது இந்த பைக்கில் டிவிஎஸ் கொடுத்திருக்கலாம்.

ஜூபிட்டர் Grande

என்டார்க் ஸ்கூட்டரைத் தொடர்ந்து, ஜூபிட்டரிலும் Smart Xonnect வசதியை வழங்கியிருக்கிறது டிவிஎஸ். மறுஅறிமுகம் செய்யப்பட்டிருக்கும் Grande வேரியன்ட்டில் இந்த அம்சம் இருப்பதுடன், டிஸ்க் பிரேக் - Tech Blue கலர் காம்பினேஷனில் மட்டுமே இதை வாங்கமுடியும்; 67,142 ரூபாய்க்கு கிடைக்கும் (சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை) ஜூபிட்டர் Grande, ஸ்டாண்டர்டு மாடலைவிட 9,170 ரூபாய் அதிக விலையில் வந்திருக்கிறது! அனலாக் டிஜிட்டல் மீட்டரின் டயல் மாறியிருப்பதுடன், Call மற்றும் Text-க்கான Notification, Over Speeding அலர்ட் போன்ற வசதிகள் மட்டுமே உள்ளன. இதுவும் என்டார்க் போலவே TVS Connect மொபைல் ஆப் உதவியுடனே இயங்குகிறது. LED ஹெட்லைட்ஸ், பீஜ் நிற Inner பாடி பேனல்கள், Cross Stiching உடனான Maroon நிற சீட், Machined அலாய் வீல்கள், க்ரோம் வேலைப்பாடுகளுடன் கூடிய மிரர்கள், LED ஹெட்லைட் போன்ற வசதிகள் தொடர்வது ப்ளஸ்.

Jupiter Meter
Jupiter Meter
TVS Motors

ஆனால், முந்தைய Grande மாடலில், ஸ்கூட்டரில் பக்கவாட்டு பாடி பேனலில் க்ரோம் வேலைப்பாடு இருந்த நிலையில், அது இங்கே மிஸ்ஸிங். அதற்குப் பதிலாக Dual Colour ஜூபிட்டர் லோகோவைச் சேர்த்திருக்கிறது டிவிஎஸ். மற்றபடி 12 இன்ச் டியூப்லெஸ் டயர்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க் - அட்ஜெஸ்டபிள் Gas ஷாக் அப்சார்பர், 8bhp பவர் மற்றும் 0.84kgm டார்க்கை வெளிப்படுத்தும் 109.7சிசி இன்ஜின் - CVT என மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாறுதலும் இல்லை. ஆக்டிவா 125-ன் BS-6 மாடல் வந்துவிட்ட நிலையில், ஜூபிட்டரின் BS-6 மாடல் அல்லது ஜூபிட்டர் 125 அதற்கான பதிலடியாக இருக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்கூட்டி பெப் ப்ளஸ் Matte

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக விற்பனையில் இருப்பதைக் கொண்டாடும் விதமாக, Coral Matte & Aqua Matte எனும் இரு புதிய கலர்களை ஸ்கூட்டி பெப் ப்ளஸ்ஸில் அறிமுகப்படுத்தியுள்ளது டிவிஎஸ். கூடுதலாக 3D லோகோ, வித்தியாசமான கிராஃபிக்ஸ், Textured ஃபினிஷ் கொண்ட சீட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆனால் முந்தைய மிரர்களுடன் ஒப்பிடும்போது, இப்போது வழங்கப்படுபவை சிம்பிளாகவே உள்ளன.

Scooty Pep Plus
Scooty Pep Plus
TVS Motors

47,236 ரூபாய் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் இந்த Matte கலர்கள், மற்ற 6 கலர்களைவிட 1,327 ரூபாய் அதிக விலையைக் கொண்டிருக்கிறது; மற்றபடி டிசைன் மற்றும் வசதிகளில் No Change. ஸ்கூட்டியின் விலையுடன் ஒப்பிட்டால் LED DRL, டெலிஸ்கோபிக் ஃபோர்க், மொபைல் சார்ஜர், Econometer, சைடு ஸ்டாண்ட் Alarm, எளிதாகப் பயன்படுத்தக்கூடிய சென்டர் ஸ்டாண்டு - கிக் லீவர், Glove Box போன்ற வசதிகள் இருப்பது ப்ளஸ். 4.9bhp பவர் மற்றும் 0.58kgm டார்க்கைத் தரும் 87.8சிசி இன்ஜின்-CVT, முதன்முறையாக டூ-வீலர் ஓட்டுபவர்களை மனதில்வைத்து டியூன் செய்யப்பட்டிருக்கிறது. 95 கிலோ எடை, அதற்குத் துணைநிற்கிறது

ரேடியான் Special Edition

டிரம் மற்றும் டிஸ்க் எனும் இரு வேரியன்ட்களில், ரேடியான் பைக்கின் ‘Commuter of the Year’ எனும் ஸ்பெஷல் எடிஷனைக் களமிறக்கியுள்ளது டிவிஎஸ். முறையே 52,720 ரூபாய் (டிரம்) மற்றும் 54,820 ரூபாய் (டிஸ்க்) வந்திருக்கும் இவை, டிரம் பிரேக்குடன் மட்டுமே கிடைக்கக்கூடிய மாடலைவிட 1,650 ரூபாய் அதிக விலையைக் கொண்டுள்ளன. இருப்பினும் டிஸ்க் பிரேக் தவிர, க்ரோம் வேலைப்பாடுகளுடன் கூடிய மிரர்கள் - லீவர்கள் - கார்புரேட்டர் கவர், மாற்றியமைக்கப்பட்ட பெட்ரோல் டேங்க் Cushion & Thigh Pad, புதிய கிராஃபிக்ஸ், பிரிமியம் சீட் Rexin என அதிக வசதிகள் இருக்கின்றன.

Radeon Special Edition
Radeon Special Edition
TVS Motors

Chrome Black, Chrome Brown எனும் இரு கலர்களில் கிடைக்கும் இந்த ஸ்பெஷல் எடிஷன், பஜாஜின் புதிய CT 110 மற்றும் பிளாட்டினா H-Gear ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக இருக்கும் என நம்பலாம்.

டிவிஎஸ் Apache
டிவிஎஸ் Apache
TVS Motors

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகமான ரேடியான், இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றிருக்கிறது. இதில் இருக்கும் 109.7 சிசி இன்ஜின் - 4 ஸ்பீடு கியர்பாக்ஸ், 8.4bhp பவர் மற்றும் 0.87kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு