Published:Updated:

அட்வென்சர், டூரிங்... ரோனின் என்ற பெயரில் வரப்போகும் டிவிஎஸ் மாடல் எது?

டிவிஎஸ் அப்பாச்சி
டிவிஎஸ் அப்பாச்சி

ரோனின் என்ற பெயருக்கு ஏற்ப டிவிஎஸ் நிறுவனத்திடம் என்னென்ன மாடல் பைக்குகள் வெளியிடுவதற்கு சாத்தியமாக இருக்கிறது என்பதை அலசுவோம்.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், சமீபத்தில் 'Ronin' (ரோனின்) என்ற பெயரை தேசிய முத்திரை பதிவேட்டில் பதிவுசெய்துள்ளது. இந்த நிறுவனம் அடுத்த ஆண்டு விற்பனைக்குக் கொண்டுவருவதாகக் கூறியிருக்கும் பைக், இந்தப் பெயரில் வெளிவரும் என்று தெரிகிறது. ரோனின் என்ற பெருக்கு ஏற்ப டிவிஎஸ் எந்த வாகனத்தைக் கொண்டுவரும் என்பதுதான் இப்போது எல்லோருக்கும் இருக்கும் கேள்வி.

டிவிஎஸ் அப்பாச்சி
டிவிஎஸ் அப்பாச்சி

ரோனின் என்றால் யாரிடமும் வேலைசெய்யாத, ஊர்சுற்றித் திரியும் சோலோ சாமுராய் என்று அர்த்தம். பெயரை வைத்துப் பார்க்கும்போது, டிவிஎஸ் நிறுவனம் டூரிங் செய்வதற்கு ஏற்ற பைக் கொண்டுவரும் என்று தெரிகிறது. BMW G310R, ஜிக்ஸர் 250 போல நேக்கட் ஸ்டிரீட் பைக்காக இருக்கலாம். ஆனால், 160சிசி முதல் 310சிசி வரை தனது ப்ரீமியம் மாடல்களுக்கு அப்பாச்சி என்ற பெயரையே டிவிஎஸ் பயன்படுத்திவருகிறது. அதனால், தனது 310சிசி இன்ஜின் கொண்டு புதிய ஸ்ட்ரீட் பைக்கை உருவாக்கினாலும் அதற்கு அப்பாச்சி என்ற பெயரை வைக்கவே அதிக வாய்ப்புகள் உண்டு. அப்பாச்சியின் வரலாறு அப்படி. டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றியில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர்களில் ஒன்று.

அப்பாச்சி RR310
அப்பாச்சி RR310
நார்ட்டன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தை வாங்கியது டிவிஎஸ்!

ரோனின் என்ற பெயர், 125சிசி பைக்குக்கு சரியானதாகவே இருக்கும். ஏற்கெனவே டிவிஎஸ் நிறுவனம் சாமுராய் என்ற 100சிசி பைக்கை வைத்திருந்தது. டிவிஎஸ் சாமுராய், வர்த்தக ரீதியாகப் பெரிய வெற்றி. அந்தப் பெயரை மீண்டும் ஏற்படுத்துவதற்காக ரோனின்... அதாவது சாமுராய் என்ற சொல்லைக் குறிக்கும் பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

TVS Zeppelin
TVS Zeppelin

2018 ஆட்டோ எக்ஸ்போவில் Zeppelin என்ற க்ரூஸர் கான்செப்ட்டை டிவிஎஸ் காட்சிப்படுத்தியிருந்தது. நெடுந்தூரப் பயணங்களுக்கான மாடர்ன் க்ரூஸர் என்ற டிசைனை அடிப்படையாகக் கொண்டது இந்த பைக், 220சிசி இன்ஜின் மற்றும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த இன்ஜின் 20bhp பவர் மற்றும் 18.5bhp டார்க் கொண்டிருக்கும் என்று ஆட்டோ எக்ஸ்போவில் தெரிவித்தார்கள். டிவிஎஸ் நிறுவனத்தின் சைலன்ட் ஸ்டார்ட் வசதி இந்த பைக்குக்காக பேடன்ட் செய்யப்பட்டதுதான். லித்தியம் அயன் பேட்டரியுடன் கூடிய மாடர்ன் ஹைப்ரிட் பைக்கான இதை காட்சிப்படுத்தியிருந்தார்கள். Ronin என்பது Zeppelin அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் பைக்காகக்கூட இருக்கலாம்.

டிவிஎஸ் ஆஃப்ரோடு ரேஸிங் டீம்
டிவிஎஸ் ஆஃப்ரோடு ரேஸிங் டீம்

டிவிஎஸ் நிறுவனம் ஆஃப்ரோடு ரேஸிங்கில் பிரபலமாக நிறுவனம். டக்கார், பாஹா போன்ற ராலி போட்டிகளுக்கு பைக்கை தயார்செய்திருக்கிறது. விலை குறைவான, இந்திய ரைடர்களுக்கு ஏற்ப ஒரு ஆஃப்ரோடு பைக்கை உருவாக்குவது இந்த நிறுவனத்துக்குப் பெரிய சவால் இல்லை. ஆனால், இப்போது ஆஃப்ரோடு ஆர்வலர்கள் எந்த அளவுக்கு இருக்கிறார்கள். இது அதற்கான சரியான நேரமா என்பதைக் கவனிக்க வேண்டும்.

நார்ட்டன் - டிவிஎஸ்
நார்ட்டன் - டிவிஎஸ்

எது எப்படியோ ரோனின் என்ற பெயரில் புதிய பைக் வருவதற்கு 2021 வரை காத்திருக்க வேண்டும். கொரோனாவால் தற்போது ஆட்டோமொபைல் துறை பெரிதாக பாதிப்படைந்துள்ளது. நிறுவனங்கள் இப்போதுதான் மீண்டும் உற்பத்தியைத் தொடங்க ஆரம்பித்துள்ளார்கள். சப்ளை செயின் இன்னும் சீராகவில்லை. இதனால், அனைத்து புதிய பைக் மற்றும் கார் தயாரிப்புகளும் விற்பனைக்கு வருவது தள்ளிப்போடப்பட்டுள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய மாடலும் 2021 வரும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது. நேரம் எடுக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு