Published:Updated:

TVS Scooty Pep+ BS6 இன்ஜின் ப்ளஸ், மைனஸ் என்னென்ன? - ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்

TVS Scooty Pep+
TVS Scooty Pep+

ஸ்பைடர் மேன் மாதிரி பறக்கத் தேவையில்லை; ஜென்டில்மேன் மாதிரி நடந்தாலே போதும் என்பவர்களுக்குத்தான் இதன் ரைடிங் செட் ஆகும்.

இப்போதைக்கு இந்திய டூ-வீலர் மார்க்கெட்டின் சிறிய Fi இன்ஜின், பெப் ப்ளஸ்ஸினுடையதுதான். 87.8சிசி, ஏர் கூல்டு - ECU கன்ட்ரோல்டு இன்ஜின் கொண்ட இதன் BS-6 அப்டேட்தான் இதில் பெரிய மாற்றம். இதன் பவர் 5.36 bhp. டார்க் 0.65kgm. பட்டன் ஸ்டார்ட் செய்ததும், இந்த ஷார்ட் ஸ்ட்ரோக் இன்ஜினின் பீட் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருந்தது.

கார்புரேட்டருக்குப் பதில் இந்தச் சின்ன ஸ்கூட்டியில் ஃப்யூல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தைப் பார்ப்பதே புதுமையாக இருந்தது. ஸ்கூட்டரின் எடை 93 கிலோவைத் தாண்டாமல் இருக்க, மைக்ரோ அலாய் ஃப்ரேம் துணை நிற்கிறது.

ஆனாலும், இதுதான் இதன் மைனஸும்கூட!

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ்
டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ்

40 கி.மீ-யைத் தாண்டவே ரொம்ப யோசிக்கிறது ஸ்கூட்டி பெப் ப்ளஸ். அதிகபட்சம் ஹைவேஸில் 50 கி.மீ-ல் விரட்டவே போராட வேண்டியிருந்தது. ஆனால், CVT காரணமாக, பிக்-அப் ஓகே ரகம். இதன் ET-Fi டெக்னாலஜி, ஸ்கூட்டியை ஸ்மூத்தாக்குகிறது.

வழக்கம்போல், டிவிஎஸ்-ன் ஃபேவரைட்டான பவர் வார்னிங் லைட்டுகள் கொடுத்திருந்தார்கள். ஆனால், இது மாறி மாறி ஒளிரும்போது, நடுநடுவே ஹைபீம் ஆன் ஆகியிருக்கிறதோ என்றொரு பிரம்மை ஏற்படுவது எனக்கு மட்டும்தானா?

ஸ்பைடர் மேன் மாதிரி பறக்கத் தேவையில்லை; ஜென்டில்மேன் மாதிரி நடந்தாலே போதும் என்பவர்களுக்குத்தான் இதன் ரைடிங் செட் ஆகும். இதன் மைலேஜ் துல்லியமாக டெஸ்ட் செய்ய முடியவில்லை. ஆனாலும், நமது ஓட்டுதலுக்கு ஆவரேஜாக 50 கி.மீ கிடைத்தது.

- "ஒரு நல்ல ஸ்கூட்டி வாங்கணும்; எந்த ஸ்கூட்டி வாங்கலாம்?'' – புதிதாக ஸ்கூட்டர் வாங்கப்போகும் சில பேர் இப்படிக் கேட்கப் பார்த்திருக்கிறேன். அதாவது, அவர்கள் ஸ்கூட்டி என்று சொல்வது, ஒரு ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டரைத்தான். அவர்கள் பார்வையில் ஆக்டிவாவும் ஸ்கூட்டிதான்; ஜூபிட்டரும் ஸ்கூட்டிதான். இப்படி ஒரு பிராண்ட் மாடலின் பெயரே ஒரு செக்மென்ட்டின் பெயராகிப் போகும் அளவுக்கு, டிவிஎஸ் ஸ்கூட்டி மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டது.

டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ்
டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ்

அப்படிப்பட்ட ஸ்கூட்டி பெப் ப்ளஸ். இப்போது ஃபேஸ்லிஃப்ட் ஆகி, BS-6 வரைமுறைகளுக்கு ஏற்ப வந்திருக்கிறது. வழக்கமாக டிவிஎஸ் என்றால், ஓசூர் தொழிற்சாலைக்குத்தான் பறந்து, டிவிஎஸ்-க்குச் சொந்தமான ட்ராக்கிலோ, பெங்களூருவிலோ டெஸ்ட் டிரைவ் செய்வதுதான் வழக்கம்.

இந்த பேன்டமிக்கில் இ-பாஸ் அப்ளை செய்து ஓசூர் போவதற்குள் BS-7 அப்டேட் நடந்தாலும் ஆச்சரியமில்லை. அதனால், சென்னையில் உள்ள டீலர் வாகனமே நம் அலுவலகத்துக்கு வந்தது. அப்புறமென்ன… சென்னை முழுவதும் ஸ்கூட்டியில் ஒரு க்யூட் ரைடு.

> சரி... டிசைன், பிராக்டிக்காலிட்டி, ஹேண்ட்லிங் எப்படி? - பெப் ப்ளஸ் வாங்கலாமா? - மோட்டார் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > ஸ்கூட்டி... இப்போ இன்னும் பியூட்டி! - ஃபர்ஸ்ட் டிரைவ்: டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ் https://bit.ly/3h30uAW

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

வீடியோ வடிவில்...

அடுத்த கட்டுரைக்கு