Published:Updated:

டொயோட்டாவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி: தெரிந்துகொள்ள வேண்டிய 10 தகவல்கள்!

காம்பேக்ட் எஸ்யூவி
News
காம்பேக்ட் எஸ்யூவி ( Toyota )

கிளான்ஸாவைத் தொடர்ந்து விட்டாரா பிரெஸ்ஸாவின் Badge Engineering வெர்ஷன் வெளியாக உள்ளது. கரோலாவின் விற்பனையை டொயோட்டா நிறுத்திவிட்டதால், அதை அடிப்படையாகக் கொண்ட மாருதி சுஸூகியின் எக்ஸிக்யூட்டிவ் செடான் வெளிவராது.

மாருதி சுஸூகி மற்றும் டொயோட்டா ஆகிய ஜப்பானிய நிறுவனங்கள், இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்யும் கார்களை Badge Engineering பாணியில் பயன்படுத்திக்கொள்ள 2018-ல் முடிவெடுத்தார்கள். 2020 - 2021-ல் எலெக்ட்ரிக் கார்களை இந்தக் கூட்டணி விற்பனைக்குக் கொண்டு வர வாய்ப்பிருக்கிறது. இதன் வெளிப்பாடாகக் கடந்த 2019-ம் ஆண்டில் கிளான்ஸா வெளிவந்துவிட்டது (பெலினோவின் Badge Engineering வெர்ஷன்). இதைத் தொடர்ந்து, விட்டாரா பிரெஸ்ஸாவின் Badge Engineering வெர்ஷன் வெளியாக உள்ளது. கரோலாவின் விற்பனையை டொயோட்டா நிறுத்திவிட்டதால், அதை அடிப்படையாகக் கொண்ட மாருதி சுஸூகியின் எக்ஸிக்யூட்டிவ் செடான் வெளிவராது. இனி டொயோட்டாவின் புதிய காம்பேக்ட் எஸ்யூவி பற்றிப் பார்க்கலாம். உலகளவில் இந்த நிறுவனம் விற்பனை செய்யக்கூடிய எஸ்யூவிகள், படங்களாக உங்கள் பார்வைக்கு!

Yaris Cross
Yaris Cross
Toyota

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

1. சர்வதேச புகழ்பெற்ற தனது ஆஃப் ரோடு எஸ்யூவியான லேண்ட் க்ரூஸர் சீரிஸில் இருக்கும் க்ரூஸர் மற்றும் நகர்ப்புறத்தைக் குறிக்கும் Urban ஆகியவை சேர்ந்ததுதான் Urban Cruiser பெயர்.

2. இதே பெயரில், ஐரோப்பா மற்றும் ஜப்பானில் ஒரு க்ராஸ் ஓவரை டொயோட்டா விற்பனை செய்திருக்கிறது. நெக்ஸான், வென்யூ, XUV3OO, எக்கோஸ்போர்ட் ஆகியவற்றுடன் இது போட்டி போடுகிறது.

RAV4
RAV4
Toyota

3. ஆகஸ்ட் மாதத்தில் Urban Cruiser எனும் தனது காம்பேக்ட் எஸ்யூவியைக் களமிறக்கும் திட்டத்தில் இருக்கிறது டொயோட்டா. ஆனால், கொரோனா காரணமாக அதன் அறிமுகம் தள்ளிப்போகலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

4. டொயோட்டாவின் முதல் காம்பேக்ட் எஸ்யூவி, விட்டாரா பிரெஸ்ஸாவின் Badge Engineered வெர்ஷன்தான். ஆனால், கிளான்ஸாவில் செய்த தவற்றை, இம்முறை இந்த நிறுவனம் செய்யாது என்றே நம்பப்படுகிறது.

5. முன்பக்க - பின்பக்க பம்பர்கள், கிரில் - Diffuser, ஹெட்லைட் - டெயில் லைட், அலாய் வீல்கள் ஆகியவற்றில் சில மாற்றங்கள் செய்யப்படலாம். மற்றபடி சேஸி, பாடி பேனல்கள் ஆகியவை அப்படியேதான் தொடரும்.

Highlander
Highlander
Toyota

6. விட்டாரா பிரெஸ்ஸாவின் கேபின், சிங்கிள் டோன் கறுப்பு நிறத்தில் இருக்கிறது. ஆனால், Urban Cruiser-ன் கேபின், டூயல் டோன் ஃபினிஷில் இருப்பதற்கு சாத்தியம் உள்ளது. ஆனால், வசதிகள் அதேதான்.

7. சர்வதேச அளவில் ஹைபிரிட் கார்களுக்கு டொயோட்டா பெயர் பெற்றது என்பதால், Urban Cruiser-ல் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் இடம்பெறும். எனவே, விட்டாரா பிரெஸ்ஸாவைவிட அதிக மைலேஜ் கிடைக்கக்கூடும்.

8. விட்டாரா பிரெஸ்ஸாவில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல்/4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணியே, Urban Cruiser-யிலும் இருக்கும். இரண்டிலும் SHVS உண்டு.

Land Cruiser
Land Cruiser
Toyota

9. உத்தேசமாக 7.5 - 11.5 லட்ச ரூபாய் விலையில், டொயோட்டா தனது காம்பேக்ட் எஸ்யூவியை வெளியிடலாம். மாருதி சுஸூகியுடன் ஒப்பிட்டால், இங்கே 3 வருட வாரன்ட்டி ஸ்டாண்டர்டாகக் கிடைக்கும்!

10. Global NCAP நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில், விட்டாரா பிரெஸ்ஸா 4 ஸ்டார் ரேட்டிங் பெற்றது தெரிந்ததே. எனவே, Urban Cruiser-ம் பாதுகாப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறக்கூடும். கிரவுண்ட் கிளியரன்ஸும் செம.