Published:Updated:

ரூ.2 லட்சம் வரை பட்ஜெட்: யூஸ்டு கார், புதிய கார்... பழகுநருக்கு ஏற்றது ஏது?

பெரும்பாலும் முறையான ஆவணங்களுடன் கூடிய சிங்கிள் ஓனர் வாகனங்களைத் தேர்வு செய்வது நல்லது. ஏனெனில், அவை தனிநபரால் திறம்படக் கையாளப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

கேள்வி: கொரோனா காரணமாக ஏற்பட்டிருக்கும் லாக்டெளன் காலத்தில், கார் ஓட்டக் கற்றுக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. 1-2 லட்ச ரூபாய் பட்ஜெட்டில், யூஸ்டு கார் மார்க்கெட்டில் என்ன காரை வாங்கலாம்? இல்லை, புதிதாகக் கார் வாங்குவது நல்ல முடிவாக இருக்குமா?

- விக்னேஷ், ஈரோடு

யூஸ்டு கார் Used Car
யூஸ்டு கார் Used Car

பதில்: எப்போதுமே புதிதாகக் கார் ஓட்டக் கற்றுக் கொள்வதற்கு என்றால், குறைவான விலையில் யூஸ்டு காரை வாங்குவதே சிறப்பான முடிவாக இருக்கும். ஏனெனில், புதிய காரை வாங்கி அதில் ஓட்டிப் பழகும்போது, ஏதேனும் விபத்து நேர்ந்தால் அது ஒருசேர மனச்சோர்வையும் பண விரயத்தையும் ஏற்படுத்திவிடும்.

நீங்கள் குறிப்பிட்ட பட்ஜெட்டில் மாருதி சுஸூகி ஆல்ட்டோ/வேகன்-ஆர், ஹூண்டாய் சான்ட்ரோ/கிராண்ட் i10 ஆகிய கார்கள் யூஸ்டு மார்க்கெட்டில் கிடைக்கின்றன. 2010-ம் ஆண்டில் நம் நாட்டில் BS-4 விதிகள் கார்களில் அறிமுகமானதை வைத்துப் பார்த்தால், அந்த ஆண்டுக்குப் பிறகான மாடல்களையே யூஸ்டு கார் மார்க்கெட்டில் பார்ப்பது நலம்.

முன்னே சொன்ன மாடல்கள் அனைத்துமே முதன்முறையாக கார் வாங்குபவர்களை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டவை என்பதால், அதன் பராமரிப்புச் செலவுகள் கட்டுபடியாகக்கூடிய ரகத்திலேயே இருக்கும்.

பெரும்பாலும் முறையான ஆவணங்களுடன் கூடிய சிங்கிள் ஓனர் வாகனங்களைத் தேர்வு செய்வது நல்லது. ஏனெனில், அவை தனிநபரால் திறம்படக் கையாளப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு அதிகம். மேலும் LPG கிட் இணைக்கப்பட்ட கார்கள் அல்லது மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட கார்களைத் தவிர்த்து விடவும்.

> இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட விலை குறைவான கார்கள் எவை (பெட்ரோல்/டீசல்)?

> நான் கடந்த சில ஆண்டுகளாக, ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டரைப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது புதிதாக 125சிசி பைக் வாங்கலாம் என முடிவெடுத்துள்ளேன். பல்ஸர் 125 Neon, ஷைன், கிளாமர் ஆகியவற்றில் எதை வாங்கலாம்? அது நல்ல Road Presence உடன் இருப்பது அவசியம்.

Motor Clinic மோட்டார் கிளினிக்
Motor Clinic மோட்டார் கிளினிக்

> நான் தற்போது ஹோண்டா சிட்டி காரை வைத்திருக்கிறேன். தற்போது 6-8 சீட்களுடன் கூடிய எஸ்யூவியை வாங்கத் தீர்மானித்துள்ளேன். முன்பு TUV3OO பயன்படுத்திய அனுபவம் இருக்கிறது. எனது பட்ஜெட் 15 லட்ச ரூபாய். இதே விலையில், யூஸ்டு கார் மார்க்கெட்டில் என்ன ஆப்ஷன்கள் கிடைக்கும்?

> எனக்கு யமஹாவின் XSR155 பைக் மிகவும் பிடித்திருக்கிறது. அது எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்?

- இந்தக் கேள்விகளுக்குத் தெளிவுதரும் பதில்களை மோட்டார் விகடன் இதழில் வாசிக்க > மோட்டார் கிளினிக் https://bit.ly/2Z6brvj

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு