Published:Updated:

சவால்களாகச் சந்திக்கும் வெர்ஸ்ட்டப்பன்!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரீ ரேஸில் ஓய்வு பெற்று சாம்பியன்ஷிப்பில் பின்தங்கியிருந்த நடப்பு சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டப்பன், எமிலியா வெற்றியின் மூலம் லெக்லர்க் உடனான இடைவெளியைக் குறைத்திருக்கிறார்.

சவால்களாகச் சந்திக்கும் வெர்ஸ்ட்டப்பன்!

ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரீ ரேஸில் ஓய்வு பெற்று சாம்பியன்ஷிப்பில் பின்தங்கியிருந்த நடப்பு சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டப்பன், எமிலியா வெற்றியின் மூலம் லெக்லர்க் உடனான இடைவெளியைக் குறைத்திருக்கிறார்.

Published:Updated:
vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

வெர்ஸ்டப்பனுக்குப் பின்னால் பெராரி டிரைவர் சார்லஸ் லெக்லர்க்...ஃபெராரியின் சொந்த மண்ணில் இரண்டு டிரைவர்களையும் போடியம் ஏற்றி, 2022 ஃபார்முலா 1 சீஸனில் கம்பேக் கொடுத்திருக்கிறது ரெட்புல். ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரீ ரேஸில் ஓய்வு பெற்று சாம்பியன்ஷிப்பில் பின்தங்கியிருந்த நடப்பு சாம்பியன் மேக்ஸ் வெர்ஸ்டப்பன், எமிலியா வெற்றியின் மூலம் லெக்லர்க் உடனான இடைவெளியைக் குறைத்திருக்கிறார். ‘என் சாம்பியன்ஷிப் வாய்ப்பு முடிந்துவிட்டது’ என்று 7 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற லூயிஸ் ஹாமில்ட்டன் சொல்லியிருப்பது மெர்சிடீஸ் அணியின் பிரச்னைகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது. கடந்த ஆண்டு கடைசி லேப் வரை சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்த லூயிஸ், இமோலாவில் வெர்ஸ்டப்பனால் லேப் செய்யப்பட்டது பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது!

ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரீ

ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரீ பந்தயம் ரெட்புல், ஃபெராரி இரண்டு அணிகளுக்குமே ஒருவகையில் ஏமாற்றமாகத்தான் அமைந்தது. ஒருகட்டத்தில் கார்லோஸ் சைன்ஸ் போல் பொசிஷன் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சைன்ஸ் எல்லைக் கோட்டைக் கடப்பதற்கு முன் அலோன்சோவின் கார் விபத்தில் சிக்கியதால் சிகப்புக் கொடி காட்டப்பட்டது. அதன்பிறகு அவர் ஒன்பதாவது இடத்திலிருந்து தொடங்கியதால், ஆரம்பத்திலேயே சிறப்பாகத் தொடங்க வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார் சைன்ஸ். அந்த நெருக்கடி அவரை சில ரிஸ்க் எடுக்க வைத்தது. அதன் விளைவாக கார் சுழன்று டிராக்கில் இருந்து வெளியேறினார் சைன்ஸ்.

விபத்துக்குப் பின் வெளியேறும் பெராரி டிரைவர் கார்லோஸ் சைன்ஸ்...
விபத்துக்குப் பின் வெளியேறும் பெராரி டிரைவர் கார்லோஸ் சைன்ஸ்...

சைன்ஸ் வெளியேறியிருந்தாலும், ரேஸில் தன் முன்னிலையைச் சிறப்பாகத் தக்க வைத்துக் கொண்டிருந்தார் சார்ல் லெக்லர்க். மற்ற இரண்டு போடியம் இடங்களையும் ரெட்புல் பெற்றுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பஹ்ரைனில் நடந்த பிரச்னை மீண்டும் ஏற்பட்டது. 39-வது லேப்பில் வெர்ஸ்டப்பன் காரில் பிரச்னை ஏற்பட்டு தீப்பற்றியது. அதனால், அவரும் அந்த ரேஸிலிருந்து வெளியேறினார். இருந்தாலும், பஹ்ரைனைப்போல் பெரஸும் வெளியேறிவிடவில்லை. எந்தப் பிரச்னையும் இல்லாமல் லெக்லர்க்குக்கு அடுத்து ரேஸை முடித்தார் பெரஸ். சைன்ஸின் வெளியேற்றத்துக்குப் பிறகு ஃபெராரியுடனான இடைவெளியைக் குறைப்பதற்கு ரெட்புல் அணிக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால், இரண்டாவது முறையாக இந்த சீஸனில் வெர்ஸ்டப்பன் வெளியேறியது, அவர்களுக்குப் பின்னடைவாக அமைந்தது.

வெர்ஸ்டப்பனுக்குப் பின்னால் பெராரி டிரைவர் சார்லஸ் லெக்லர்க்...
வெர்ஸ்டப்பனுக்குப் பின்னால் பெராரி டிரைவர் சார்லஸ் லெக்லர்க்...

லெக்லர்க், பெரஸ் இருவருக்குப் பிறகு ரேஸை முடித்து போடியம் ஏறினார் மெர்சிடீஸின் ஜார்ஜ் ரஸல். ஆறாவது இடத்திலிருந்து ரேஸைத் தொடங்கியவர், சேஃப்டி காரின்போது பிட் ஸ்டாப் எடுத்ததால், லூயிஸ் ஹாமில்ட்டன், லாண்டோ நாரிஸ் அனைவருக்கும் முன்பு வந்துவிட்டார். வெர்ஸ்டப்பன் வெளியேறியது அவரை மூன்றாவது இடத்துக்கு நகர்த்தியது. அதனால், தன் புதிய அணிக்காக முதல் முறையாக போடியம் ஏறினார் ரஸல். முதலிரு ரேஸ்களிலும் மெர்சிடீஸ் தடுமாறிக் கொண்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவில் அவர்களிடம் ஒரு நல்ல முன்னேற்றம் தெரிந்தது. லூயிஸ் ஹாமில்ட்டன் நான்காவது இடத்தில் முடிக்க, ஆஸ்திரேலியாவில் அதிக புள்ளிகள் பெற்ற அணியானது மெர்சிடீஸ்.

முதலிரு ரேஸ்களிலும் சேர்ந்தே 6 புள்ளிகள் மட்டும் பெற்றிருந்த மெக்லரன், ஆஸ்திரேலியாவில் 18 புள்ளிகள் பெற்றது. நாரிஸ் ஐந்தாவது இடத்தில் முடிக்க, தன் ‘ஹோம்’ ரேஸில் ஆறாவது இடம் பெற்று புள்ளிக் கணக்கைத் தொடங்கினார்.

Arrayபுள்ளிகள்ஃபெராரி 124ரெட்புல் 113மெர்சிடிஸ் 77மெக்லரன் 46ஆல்ஃபா ரோமியோ 25ஆல்பைன் 22ஆல்ஃபா டௌரி 16ஹாஸ் 15ஆஸ்ட்டன் மார்டின் 5வில்லியம்ஸ் 1

ஆஸ்திரேலியாவில் அனைவரின் கவனத்தையும் பெரிதாக ஈர்த்தது அலெக்ஸ் ஆல்பான். தகுதிச் சுற்றில் 16-வது இடம் பிடித்தார் அந்த இளம் வில்லியம்ஸ் டிரைவர். இருந்தாலும், காரில் போதுமான எரிபொருள் இல்லாததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு கடைசி இடத்திலிருந்து தொடங்கினார் அவர். ‘ஹார்ட்’ டயர்களில் தொடங்கிய அவர், ஒவ்வொரு சேஃப்டி காரின்போது முன்னால் இருப்பவர்கள் பிட்டுக்குள் நுழைய, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார். தன் டயரையும் மிகச் சிறப்பாகக் கையாண்ட அவர், மொத்த ரேஸையும் அந்த டயர்களிலேயே முடித்திருப்பார். கட்டாயமாக இரண்டு வேறு டயர் காம்பவுண்ட்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருப்பதால், கடைசி லேப்பில் பிட்டுக்குள் நுழைந்து ‘சாஃப்ட்’ டயரோடு வெளியேறினார். கடைசிக் கட்டத்தில் பிட் எடுத்திருந்தாலும், பத்தாவது இடத்தில் முடித்து அசத்தினார்.

மெர்சிடீஸ் டிரைவர் லூயிஸ் ஹாமில்ட்டன் இன்னும் டிரைவர் சாம்பியன்ஷிப் பட்டியலில் முன்னேற வேண்டும்.
மெர்சிடீஸ் டிரைவர் லூயிஸ் ஹாமில்ட்டன் இன்னும் டிரைவர் சாம்பியன்ஷிப் பட்டியலில் முன்னேற வேண்டும்.

எமிலியா ரோமானியா கிராண்ட் ப்ரீ

இந்த சீஸனின் முதல் ஸ்பிரின்ட் ரேஸ் இமோலாவில் அரங்கேறியது. இந்த சீஸனில் முதல் முறையாக தகுதிச் சுற்றில் லெக்லர்க்கை முந்தினார் மேக்ஸ். போல் பொசிஷனில் இருந்து ஸ்பிரின்ட் ரேஸைத் தொடங்கியவருக்கு, ஆரம்பம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. நல்ல தொடக்கம் பெற்று முன்னிலை பெற்றார் சார்ல் லெக்லர்க். ஆனால், போகப்போக அவரது டயர் சேதமடையத் தொடங்கியது. தன் டயர்களை சரியாகப் பராமரித்த வெர்ஸ்டப்பன், கடைசி கட்டத்தில் அட்டாக் செய்து முதலிடம் பெற்றார். அதனால், மெயின் ரேஸிலும் போல் பொசிஷனில் இருந்தே தொடங்கினார்.

மழை/ஈரமான டிராக்கில் நடக்கும் ரேஸ்களில் எப்போதும் சிறிய அணிகளுக்கும் நல்ல வாய்ப்பு ஏற்படும். அதனால், மேக்னசன், வெட்டல், லான்ஸ் ஸ்டிரோல், மிக் ஷூமேக்கர் ஆகியோரும் ஓரளவு நன்றாகவே செயல்பட்டனர். இந்த சீஸனில் முதல் முறையாக Q3-க்குள் நுழைந்தார் முன்னாள் சாம்பியன் செபாஸ்டியன் வெட்டல்.

சவால்களாகச் சந்திக்கும் வெர்ஸ்ட்டப்பன்!

ஞாயிற்றுக்கிழமை நடந்த மெயின் ரேஸ், வெர்ஸ்டப்பனுக்கு மிகச் சிறப்பாகத் தொடங்கியது. ஸ்பிரின்ட் போல் இல்லாமல் இதில் மிகச் சிறப்பாகத் தொடங்கினார். அதேசமயம், லெக்லர்க் கொஞ்சம் சுமாராகத் தொடங்க, அதைப் பயன்படுத்தி இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் செர்ஜியோ பெரஸ். நாரிஸ் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருந்தாலும், லெக்லர்க் அவரை விரைவில் முந்தினார்.

Arrayபுள்ளிகள்சார்ல் லெக்லர்க் 86மேக்ஸ் வெர்ஸ்டப்பன் 59செர்ஜியோ பெரஸ்54ஜார்ஜ் ரஸல் 49கார்லோஸ் சைன்ஸ் 38லாண்டோ நாரிஸ் 35லூயிஸ் ஹாமில்ட்டன் 28வால்ட்டேரி போட்டாஸ் 24எஸ்டபன் ஓகான் 20கெவின் மேக்னசன் 15டேனியல் ரிகார்டோ 11யூகி சுனோடா 10 பியர் கேஸ்லி 6செபாஸ்டியன் வெட்டல் 4ஃபெர்னாண்டோ அலோன்சோ 2ஜோ குவான்யூ 1அலெக்ஸ் ஆல்பான் 1லான்ஸ் ஸ்டிரோல் 1மிக் ஷுமேக்கர் 0நிகோ ஹல்கென்பெர்க் 0நிகோலஸ் லடிஃபி 0

லெக்லர்க் தொடக்கத்தைவிட சைன்ஸின் தொடக்கம் மிக மோசமாக அமைந்தது. மழைக்கு நடுவே முதல் லேப்பில் பல டிரைவர்கள் அக்ரஸ்ஸிவாகத் தொடங்க, டிராக்கில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. ஓரத்திலிருக்கும் தடுப்பில் மோதிய டேனியல் ரிக்கார்டோ சைன்ஸின் காரில் மோத, இரண்டு கார்களும் சரளைக்குள் நுழைந்தன. ரிக்கார்டோ ஓரளவு தப்பித் திரும்பினாலும், சைன்ஸின் கார் நகர் முடியாதபடி மாட்டிக் கொண்டது. அதனால், தொடர்ந்து இரண்டாவது ரேஸாக பாதியிலேயே ஓய்வு பெற்றார் கார்லோஸ் சைன்ஸ்.

செர்ஜியோ பெரஸ், மேக்ஸ் வெர்ஸ்டப்பன், லாண்டோ நாரிஸ்
செர்ஜியோ பெரஸ், மேக்ஸ் வெர்ஸ்டப்பன், லாண்டோ நாரிஸ்



11-வது இடத்திலிருந்து ஆரம்பத்திலிருந் தாலும் சிறப்பான தொடக்கத்தின் காரணமாக ஐந்தாம் இடம் வரை முன்னேறினார் ஜார்ஜ் ரஸல். ஆனால், லூயிஸ் ஹாமில்ட்டனுக்கு இந்த ரேஸ் சிறப்பாக அமையவில்லை. ரேஸின் பெரும்பகுதி பியர் கேஸ்லிக்குப் பின்னால் 14-வது இடத்திலேயே இருந்தார். இருவருக்கும் இடையிலான இடைவெளி 1 நொடிக்குக் கீழேதான் இருந்தது. DRS பயன்படுத்தியும்கூட ஹாமில்ட்டனால் கேஸ்லியை முந்த முடியவில்லை. பல முறை முயற்சி செய்தும் முந்த முடியவில்லை. இதில் என்ன கொடுமையெனில், ஒருகட்டத்தில் மேக்ஸ் வெர்ஸ்டப்பனால் ‘லேப்’ செய்யப்பட்டார் ஹாமில்ட்டன்!

முதல் மூன்று ரேஸ்களிலும் பெரும் சவாலைச் சந்தித்துவந்த வெர்ஸ்டப்பனுக்கு இமோலாவில் எந்தச் சவாலும் இருக்கவில்லை. ஆரம்பத்திலிருந்து முடிவு வரை கூலாகச் செயல்பட்டு ரேஸை முடித்தார் அவர். இந்த சீஸனில் அவர் முடித்திருப்பது இரண்டு ரேஸ்கள்தான். அந்த இரண்டிலும் வெற்றி பெற்றிருக்கிறார் நடப்பு சாம்பியன். இரண்டாம் இடத்திலிருந்த பெரஸை முந்த முயற்சித்த லெக்லர்க் ஒரு தவறினால் டிராக்கில் சுழல, மிகவும் பின்தள்ளப்பட்டார். இருந்தாலும் கடைசிக் கட்டத்தில் போராடி ஆறாவது இடம் பெற்றார். அதனால், லாண்டோ நாரிஸ் இந்த சீஸனில் முதல் முறையாக போடியம் ஏறினார். இந்த சீஸனில் இதுவரை புள்ளிகள் எடுக்காத ஆஸ்டன் மார்டின் அணிக்கு, வெட்டல் (4 புள்ளிகள்), ஸ்டிரோல் (1 புள்ளி) இருவருமே புள்ளிகள் பெற்றுக்கொடுத்தனர்.

“இரண்டு டிரைவர்களுமே அவர்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுகிறார்கள். காரின் திறனை மிறி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இருக்கும் மூன்று சிறந்த டிரைவர்களில் இருவர் எங்களிடம் இருக்கிறார்கள். லேப் செய்யப்படவதற்குப் பதிலாக முன்னணியில் போட்டியிடக்கூடிய சிறந்த காரும், பவர் யூனிட்டும் அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள்”

- மெர்சிடீஸ் டீமின் சீஃப் டோடோ வோல்ஃப்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism