Published:Updated:

ரோல்ஸ் ராய்ஸ் 25/30 முதல் ஆல்ஃபா 2000 வரை... கார் பிரியர்களைக் கவர்ந்த வின்டேஜ் கார் ரேலி!

Vintage car rally
Vintage car rally

பெல்ஜியம், கனடா, அமெரிக்கா உட்பட பல நாடுகளிலிருந்து வின்டேஜ் கார்கள் இந்தியாவிற்கு வந்திருந்தன. அது மட்டுமில்லாமல், இந்தியா முழுவதிலுமிருந்து 135 கார்களும் 35 பைக்குகளும் வந்திருந்தன.

டெல்லியில் பிப்ரவரி 15-ம் தேதி, 21-வது கன் இன்டர்நேஷனல் வின்டேஜ் கார் (Vintage Car) அணிவகுப்பை, ராஜ்யசபா எம்.பி துளசி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். வின்டேஜ் கார்களைக் காண இரண்டு வருடங்களாகக் காத்திருந்த பொதுமக்களும் கார் பிரியர்களும் அலையெனத் திரண்டு இந்தியா கேட்டில் அணிவகுத்தனர். இந்த அணிவகுப்பில் கலந்துகொள்வதற்காக பெல்ஜியம், கனடா, அமெரிக்கா உட்பட பல நாடுகளிலிருந்து வின்டேஜ் கார்கள் இந்தியாவிற்கு வந்திருந்தன. அதுமட்டுமில்லாமல், இந்தியா முழுவதிலுமிருந்து 135 கார்களும், 35 பைக்குகளும் வந்திருந்தன. இந்த அணிவகுப்பு, இந்தியா கேட்டில் தொடங்கி குருகிராம் வரை நடந்தது.

Vintage Car rally
Vintage Car rally

இந்த அணிவகுப்பில், உலகெங்கிலுமிருந்து மிகச்சிறந்த மற்றும் இதுவரை யாரும் கண்டிராத கார்களும் இடம்பெற்றிருந்தன என்பதுதான் சிறப்பம்சம். அமெரிக்காவிலிருந்து 1930 காடிலாக் V-16 ரோட்ஸ்டர், 1939 பியூக் ரோட்மாஸ்டர் செடான், பியூக் மாடல் 81 சி, கனடாவிலிருந்து 1936 ரோல்ஸ் ராய்ஸ் 25/30, ஜெர்மனியிலிருந்து 1951 பென்ட்லி MKVI ஃப்ரீஸ்டோன் & வெப், 1959 பெல்ஜியத்திலிருந்து ஜாகுவார் XK150 S, 1959 ஆண்டைச் சேர்ந்த ஆல்ஃபா 2000, 1966 ஃபோர்டு மஸ்டாங் & மசெராட்டி 3500 GT விக்னேல் ஸ்பைடர் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

``சில சுவாரஸ்யமான வின்டேஜ் கார்களைக் கவனிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இன்றும் இவற்றை நேர்த்தியாகப் பராமரித்தும் பாதுகாத்தும் வைத்திருக்கிறார்கள். வின்டேஜ் மற்றும் கிளாசிக் கார்களின் பாரம்பர்யத்தை உயிருடன் வைத்ததற்கு, இந்த காரின் உரிமையாளர்களை வாழ்த்துகிறேன்" என்றார் கே.டி.எஸ் துளசி.

Vintage Car rally
Vintage Car rally

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலவிதமான கார்களை கான்கோர்ஸ் வரவேற்றது. இவற்றில், தர்பங்காவின் 1938 பென்ட்லி HH மகாராஜா, 1938 போபாலின் பென்ட்லி HH மகாராஜா, 1966 ஜாகுவார் E-டைப், 1959 செவர்லே இம்பலா, 1946 எம்.ஜி DC, 1936 மெர்சிடிஸ், கிம்சரின் யுவராஜ் தனஞ்சய் சிங்கின் பென்ஸ் வகை 290, 1947 தாகூரின் பாக்கார்ட் கிளிப்பர், சாஹேப் மந்ததா சிங்ஜி ஜடேஜா ராஜ்கோட்டின் பாக்கார்ட் டீலக்ஸ் கிளிப்பர், யுவராஜ் ஸ்ரீ ஹர்ஷ்வர்தன் சிங் மற்றும் துங்கர்பூரின் ஸ்ரீ ஹர்ஷ்வர்தன் சிங் அவர்களின் மெர்சிடிஸ் 190 மாடல் ஏ, 1939 ரோல்ஸ் ராய்ஸ் ராத், 1951 ஜாகுவார் XK120 மற்றும் 1932 எம்ஜி J2 ஆகியன இந்த ஷோவின் கவர்ச்சிகரமான கார்கள்.

Vintage Car rally
Vintage Car rally
போயிங் 757 கதவுகள், செல்லப் பெயர் கப்பல்.. ஆனால் இது ட்ரம்ப்பின் பீஸ்ட் கார்! #VikatanInfographics

இந்த நிகழ்ச்சி, 2011-ம் ஆண்டு முதல் நடந்துவருகிறது. உலகப் பாரம்பர்யத்தை முன்னெடுத்துக் காட்டுவதிலும் இந்திய மோட்டார் உலகு முன்னோக்கிச் செல்வதற்கும் காரணமாக இருந்தது இந்த நிகழ்ச்சிதான். இந்த வருட கண்காட்சிக்கு வைக்கப்பட்ட அனைத்து கார்களும் அரிதான மற்றும் தனித்துவமான கார்கள் ஆகும். இந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதி அனைத்தும் சிறப்புக் குழந்தைகளுக்காகக் கொடுக்கப்படுகிறது. இரண்டு கார்களில், சிறப்புக் குழந்தைகளுக்கு இலவமாக சவாரி செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதுமட்டுமில்லாமல், அந்தக் குழந்தைகளுக்கு இலவச புத்தகப் பைகளும் வழங்கப்பட்டன.

சிறப்புக் குழந்தையான கார்த்திக்கிடம் நாம் பேசியபோது, ``எனக்கு இந்த வின்டேஜ் காரில் சென்றது ரொம்பவே பிடித்திருந்தது. என் நண்பர்களுடன் இந்த காரில் சென்றது மிகவும் மகிழ்சியளிக்கிறது" என்றான்.

சிறப்புக் குழந்தைகளுக்கு சவாரி ஏற்பாடு செய்த ஒருவரிடம் பேசியபோது,``இந்தக் குழந்தைகளுக்கு இது மிகவும் சந்தோஷமாகவும் புதுமையாகவும் இருக்கிறது. போனமுறை ஒரு சிறுவன் காரில் சென்ற புகைப்படம் நியூஸ் பேப்பரின் முதல் பேஜில் வந்துவிட்டது, அதற்கு மேல அவனுக்கு என்ன வேணும் சந்தோஷப்படுவதற்கு. இந்தக் குழந்தைகளுக்கு இது ஒரு தனி அனுபவம்" என்றார்.

Vintage Car rally
Vintage Car rally

இந்த மாதம் பிப்ரவரி 17-ம் தேதி, 10 வின்டேஜ் கார்கள் உலகம் முழுவதும் சுற்ற, தனது பேரணியைத் தொடங்கியது. இந்தப் பேரணி, இந்திய அரசு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாகும். இது, இந்தியா முழுவதும் உள்ள பாரம்பர்ய மோட்டார் வாகனங்களை ஊக்குவிக்கும் நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு