Published:Updated:

கோவை: விபத்தில் சேதமடைந்த போலீஸ் வேன்... 40 ஆண்டுகளுக்குப் பிறகு வின்டேஜ் லுக்குடன் மறுபிறப்பு!

போலீஸ் வாகனம்
போலீஸ் வாகனம்

விபத்தில் சேதம் அடைந்த போலீஸ் வாகனத்தை கோவை காவல்துறை புதுப்பித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோவை மாவட்டம், மோட்டார் வாகன பிரிவில் காவலர்கள் அலுவல் பணிகளுக்கு வாகனங்கள் கொடுக்கப்படும். TNE 6000 என்ற எண் கொண்ட Hindusthan Bedford 1974 என்ற ஆம்னி வேன் கொடுக்கப்பட்டிருந்தது. டீசல் வகையான இதில் 17 பேர் வரை அமர முடியும்.

கோவை போலீஸ் வாகனம்
கோவை போலீஸ் வாகனம்
’வேன் டிரைவருடன் கூட்டுச் சேர்ந்த 6 பேர்.. சிறுமிக்கு நேர்ந்த துயரம்!’- மத்தியப்பிரதேச அதிர்ச்சி

இந்த வாகனம், கடந்த 1975-ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டு வரை கோவை சரகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனிடையே, 1987-ம் ஆண்டு அந்த வாகனம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிவிட்டது.

அந்த விபத்தில் சிக்கி வாகனத்தின் முன் பகுதி கடுமையாக சேதமடைந்தது. இதனால், 40 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டு வந்த அந்த வேன், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வாகனத்தை ஏலத்திலும் யாரும் எடுக்க முன்வரவில்லை.

சேதமடைந்த நிலையில்
சேதமடைந்த நிலையில்

இந்நிலையில், மேற்கு மண்டல ஐ.ஜியாக இருந்த அமல்ராஜ் அந்த வாகனத்தை கவனித்து அதை புதுப்பிக்கலாமே என்ற ஆலோசனையை வழங்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி செல்வநாகரத்தினம் வாகனத்தை புதுப்பிக்க தீவிர முயற்சி எடுத்துள்ளார். “கடந்த மூன்று மாதங்களாக இதற்கான பணிகள் நடந்துவந்தன. வாகனம் பழுது பார்க்கப்பட்டு, பெயிண்ட் அடிக்கப்பட்டு மீண்டும் செயல்படும் நிலைக்கு உருவாக்கப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட நிலையில்
புதுப்பிக்கப்பட்ட நிலையில்

இதைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள போலீஸ் அருங்காட்சியகத்திற்கு அந்த வாகனம் நினைவுச் சின்னமாக அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் காலத்தில் போலீஸ் வாகனம் எப்படி இருந்தது என்று பலருக்கு தெரியாது. மக்களுக்கு அதை எடுத்து சொல்லதான் இந்த முயற்சி” என்று காவல்துறை கூறியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு