Published:Updated:

விஷாலும் கறுப்பு ஜாகுவாரும்!

விஷால்
பிரீமியம் ஸ்டோரி
விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள், அங்கே விஷாலும் அவரது கறுப்பு ஜாகுவாரும்தான் செம ஹைலைட்.

விஷாலும் கறுப்பு ஜாகுவாரும்!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள், அங்கே விஷாலும் அவரது கறுப்பு ஜாகுவாரும்தான் செம ஹைலைட்.

Published:Updated:
விஷால்
பிரீமியம் ஸ்டோரி
விஷால்

பொதுவாக, தேர்தல் அறிவிப்புகள் 3 மாத இடைவெளியில் வெளியாகும். ஆனால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு எலெக்ஷன் ரிசல்ட் வந்தது. அது, தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல். போன மாசம், தேர்தல் முடிவுகள் வெளியாகி, நாசர் தலைமையிலான ‘பாண்டவர் அணி’ வெற்றி பெற்றது. வெற்றிக் கொண்டாட்டத்துக்கு நடிகர் சங்கத்துக்கு சும்மா ஒரு விசிட் அடித்தபோது… எல்லோரும் நடிகர்களைப் பார்த்துக் கொண்டிருக்க… நான் மட்டும் நடிகர்களின் பல வண்ணக் கார்களை லுக் விட்டுக் கொண்டிருந்தேன்.

அங்கே விஷாலும் அவரது கறுப்பு ஜாகுவாரும்தான் செம ஹைலைட். பாண்டவர் அணி சார்பில் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஷாலின் ஜாகுவார் பற்றி ஒரு சின்ன இன்ட்ரோ.

விஷாலும் கறுப்பு ஜாகுவாரும்!


விஷால், இதற்கு முன்பு பிஎம்டபிள்யூ எக்ஸ்5, டொயோட்டா ஃபார்ச்சூனர் வைத்திருந்தார். தற்போது இந்த ஜாகுவார் XF கார்தான் விஷாலின் லேட்டஸ்ட் செல்லம். இந்த காரின் விலை 64 லட்சம். இதன் டாப் ஸ்பீடு 234 கிமீ. ஆனால், விஷால் 20 கிமீ வேகத்தில் பொறுமையாக வந்தது செமயாக இருந்தது. ‘7 எண்றதுக்குள்ள’ இது 100 கிமீ–யை அடையும்.

இந்த சொகுசு ஜாகுவாரின் உள்ளே இருப்பது, 4 சிலிண்டர் கொண்ட 2.0லிட்டர் பெட்ரோல் இன்ஜின். 197 bhp பவரையும், 320 Nm டார்க்கையும் உருவாக்குகிறது இது. இதன் 19 இன்ச் அலாய் வீல்கள் ஜாகுவாருக்கும் விஷாலுக்கும் ஏற்ற மாதிரி கம்பீரத்தை வரவழைக்கிறது. ஜாகுவாரின் பாதுகாப்பு பற்றி உலகமே அறியும்.

விஷாலும் கறுப்பு ஜாகுவாரும்!

வதவதவெனக் காற்றுப்பைகளும், இதன் கட்டுமானமும், பிரேக்கிங் தொழில்நுட்பமும் வேற லெவலில் இருக்கும். பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மற்றும் ஆடி Q5 போன்றவற்றுக்குப் போட்டியாக இருக்கும் இந்த ஜாகுவார் XF கார்தான், ஜாகுவார் XE காரைவிட சொகுசிலும் பெர்ஃபாமன்ஸிலும் ஒரு படி மேலே இருக்கிறது. விஷாலில் உயரத்துக்கு ஏற்ற ஹெட்ரூமும் வீல்பேஸும் XE–யைவிட XF–ல்தான் நன்றாக இருப்பதால், விஷால் இதை டிக் அடித்திருப்பாரோ!

இது 10 கிமீ மைலேஜ் என்று க்ளெய்ம் செய்கிறது ஜாகுவார். ‘உங்க ஜாகுவாரோட மைலேஜ் என்ன’னு கேட்குறதுக்குள்ளே… விருட்டுனு ஜாகுவார் மாதிரி பறந்தே சென்று விட்டார் விஷால்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism