Published:Updated:

`அட்டகாசமான இன்ட்டீரியர்'- இந்தியாவின் போட்டி நிறைந்த செக்மென்ட்டில் ஸ்கோடாவின் முதல் கார் #VisionIN

VisionIn
VisionIn

இந்தியாவுக்காகவே தயாரிக்கப்பட்ட MQB A0 IN என்ற பிளாட்ஃபார்மில் தயாராகி வருகிறது ஸ்கோடா விஷன்இன் கான்செப்ட்.

ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் `இந்தியா 2.0' திட்டத்தின் கீழ் முதல் காராக வருகிறது ஸ்கோடா விஷன்-இன் (VisionIN). ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தவிருக்கும் இந்த கான்செப்ட் காரை டெல்லியில் இன்று மீடியாவுக்காக பிரத்யேகமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது ஃபோக்ஸ்வாகன்.

ஸ்கோடா விஷன்-இன் | VisionIN
ஸ்கோடா விஷன்-இன் | VisionIN

இந்தியாவுக்காகவே தயாரிக்கப்பட்ட `MQB A0 IN' என்ற பிளாட்ஃபார்மில் தயாராகும் இந்த கார் ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்ட்டோஸ் போன்ற மாடல்களுக்குப் போட்டியாக வரவுள்ளது. இதன்மூலம் இந்தியாவின் கடும் போட்டி வாய்ந்த செக்மென்ட்டுக்குள் முதல் முறையாக நுழைகிறது ஸ்கோடா. விஷன்-இன் மாடலின் எக்ஸ்டீரியரைவிட இன்ட்டீரியர்தான் அதிக கவனம் ஈர்த்திருக்கிறது.

கியா கார்னிவல் எம்பிவி... டொயோட்டா & பென்ஸுக்குப் போட்டியா?

செல்வராகவன் படம்போல பல லேயர்களாக இருக்கும் டேஷ்போர்டில், மெல்லிய க்ரோம் கிளாசிக் டச். டிசைனில் ஆங்காங்கே பல இடங்களில் குரோம் டச் உண்டு. ஆரஞ்சு நிற இன்ட்டீரியர் இளசுகளைக் கவரும். சப்போர்ட்டே இல்லாமல் ஃபிளோட்டிங்கில் நிற்கும் 12.3 இன்ச் டச் ஸ்கிரீன், 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், வாய்ஸ் கமான்ட், லேன் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல், பானராமிக் சன்ரூஃப், ரியர் ஏசி வென்ட், டிரைவ் மோடு என எல்லா வசதிகளுமே உண்டு. இந்த செக்மென்ட்டுக்கு இவை எல்லாமே சகஜமான வசதிகளாகிவிட்டது.

எக்ஸ்டீரியர்

இன்ட்டீரியர்

விஷன்-இன், 150bhp பவர் தரும் 1.5 லிட்டர் 4cyl டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வரும். டீசல், CNG கிடையாது என ஃபோக்ஸ்வாகன் தெளிவாகச் சொல்லிவிட்டது. 19 இன்ச் அலாய் வீல், 4.26 மீட்டர் நீளம், 2.65 மீட்டர் வீல்பேஸ் மற்றும் பின்பக்க பாசஞ்சர்களுக்கு ஏகப்பட்ட இடவசதியோடு தயாரிப்பை நோக்கி விரைவில் வருகிறது இந்த கான்செப்ட் எஸ்யூவி.

அடுத்த கட்டுரைக்கு