Published:Updated:

ஃபோக்ஸ்வாகன் ஏமியோ GT Line... இந்த டீசல் AT காம்பேக்ட் செடானில் என்ன ஸ்பெஷல்?

ஏற்கெனவே, போலோவில் GT மாடல் இருந்த நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் ஏமியோ மற்றும் வென்ட்டோவும் இணைந்துள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில், போலோ மற்றும் வென்ட்டோ ஆகிய கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் வெளிவந்தது தெரிந்ததே. அப்போதே ஏமியோவுக்கு எனப் பிரத்யேகமாக, ஃபோக்ஸ்வாகன் ஏதோ திட்டம் வைத்திருப்பது புரிந்தது. இந்தச் சூழலில், 9.99 லட்ச ரூபாய்க்கு (இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை) ஏமியோ GT Line காரை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, போலோவில் GT மாடல் இருந்த நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் ஏமியோ மற்றும் வென்ட்டோவும் இணைந்துள்ளன.

Ameo GT Line
Ameo GT Line
Volkswagen India

வழக்கமான மாடலுடன் ஒப்பிடும்போது, 110bhp பவர் & 25kgm டார்க் & 21.66 கிமி அராய் மைலேஜை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TDi டீசல் இன்ஜின் - 7 ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் மட்டுமே இந்த GT Line மாடலை வாங்கமுடியும்!

மற்றபடி, முன்பக்க ஃபெண்டரில் புதிதாக GT Line பேட்ஜ், கறுப்பு ஃபினிஷில் உள்ள மிரர்கள் - ரூஃப் - ஸ்பாய்லர், புதிய Sunset Red கலர், கதவுகளில் க்ரோம் வேலைப்பாடுகளுக்குப் பதிலாக GT Line Decals என காரின் தோற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. ஆனால், போலோ மற்றும் வென்ட்டோவின் பேஸ்லிஃப்ட் மாடல்களில் இருந்த புதிய பம்பர்கள் இதில் வழங்கப்படவில்லை; Highline Plus வேரியன்ட்டை அடிப்படையாகக்கொண்டே ஏமியோவின் GT Line மாடல் தயாரிக்கப்பட்டுள்ளதால், ஏறக்குறைய இதன் விலையும் வழக்கமான ஏமியோவின் Highline Plus வேரியன்ட்டின் விலையும் ஒன்றுதான்.

Ameo GT Line
Ameo GT Line
Volkswagen India

கூடுதலாக, ஃபோக்ஸ்வாகனின் Connect Suite வசதி மற்றும் 5 வருட வாரன்ட்டி & RSA (டீசல் மாடல்களுக்கு) கிடைப்பது ப்ளஸ். மேலும், டாப் வேரியன்ட் என்பதால், 16 இன்ச் Portago அலாய் வீல்கள் - க்ரூஸ் கன்ட்ரோல் - Rain Sensing வைப்பர்கள் - ஆட்டோ டிம்மிங் IRVM - பலவித கன்ட்ரோல்களுடன்கூடிய ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் - ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா - 2 காற்றுப்பைகள் & ABS - எலெக்ட்ரிக்கலாக மடிக்கக்கூடிய ரியர் வியூ மிரர்கள் - முன்பக்க ஆர்ம்ரெஸ்ட் - கூல்டு க்ளோவ் பாக்ஸ் - Footwell லைட்டிங் - கிளைமேட் கன்ட்ரோல் ஏசி - வாய்ஸ் கமாண்ட் என அதிக வசதிகளுடன் கிடைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த 2016-ம் ஆண்டு விற்பனைக்கு வந்த ஏமியோவில், இந்த இடைப்பட்ட காலத்தில் பெரிதாக எந்த மாற்றங்களையும் ஃபோக்ஸ்வாகன் செய்யவில்லை. இதனாலேயே, மாருதி சுஸூகி டிசையர், ஃபோர்டு ஆஸ்பயர், ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் எக்ஸென்ட், டாடா டிகோர்/JTP மற்றும் ஜெஸ்ட் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, வெளிப்புறத் தோற்றம் மற்றும் கேபினின் வடிவமைப்பு ஆகியவை கொஞ்சம் டல்லாகத் தெரிகிறது. இதனாலேயே, வென்ட்டோவில் இருக்கக்கூடிய LED ஹெட்லைட்ஸ். LED DRL, 4 காற்றுப்பைகள் போன்ற சிறப்பம்சங்களை, ஃபோக்ஸ்வாகன் இதில் சேர்த்திருக்கலாம். மற்றபடி கட்டுமானத் தரத்துக்கும், அதிவேக நிலைத்தன்மைக்கும், பாதுகாப்புக்கும் பெயர்பெற்ற இதில், ஏற்கெனவே இருந்த 1.2 லிட்டர் MPi பெட்ரோல் இன்ஜினுக்குப் பதில் 1.0 லிட்டர் MPi பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டது. என்றாலும், போலோ மற்றும் வென்ட்டோவில் உள்ள 1.2 லிட்டர் TSi இன்ஜின் இங்கே மிஸ்ஸிங்.

ஃபோக்ஸ்வாகன் போலோ மற்றும் வென்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்டில் புதுசா என்ன இருக்கு!

பண்டிகைக் காலத்தைக் கருத்தில்கொண்டு, 1.47 லட்ச ரூபாய் வரையிலான ஆஃபர்களை ஏமியோவில் ஃபோக்ஸ்வாகன் வழங்கிவருகிறது. இதனால் ஏமியோவின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை, 5.29 லட்ச ரூபாயாக மாறியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு