Published:Updated:

தனித்துவமான எஸ்யூவி ஸ்டைல் கொண்ட `டைகூன்' - இந்தியா 2.0-வில் இது ஃபோக்ஸ்வாகன் வெர்ஷன்!

ஃபோக்ஸ்வாகன் டைகூன்
ஃபோக்ஸ்வாகன் டைகூன்

ஸ்கோடா விஷன்-இன் போல க்ரெட்டாவின் செக்மென்ட்டில் ஃபோக்ஸ்வாகன் டைகூன் என்ற காரை கொண்டுவருகிறது.

ஃபோக்ஸ்வாகனின் ஸ்கோடா பிராண்டின் கீழ் விஷன்-இன் என்ற காம்பாக்ட் எஸ்யூவி வருவதைப் போல MQB A0 IN பிளாட்பார்மை அடிப்படையாகக் கொண்டு இதே செக்மென்ட்டில் ஃபோக்ஸ்வாகன் பேட்ஜ் உடன் வரும் எஸ்யூவிதான் டைகூன்(Taigun). வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் T-Cross எஸ்யூவி-யின் டிசைனைக் கொண்டுள்ளது டைகூன். பாசஞ்சர்களுக்கான இடவசதி மற்றும் கம்ஃபோர்ட்டை மையமாக வைத்தே இந்த எஸ்யூவி உருவாக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறது ஃபோக்ஸ்வாகன். இதன் 2651 மிமீ வீல்பேஸ் T-Cross விட 100 மிமீ அதிகம். 205 மிமீ கிரவுண்டு க்ளியரன்ஸ் இந்த செக்மென்ட்டிலேயே செம பெருசு.

கான்செப்ட் மாடலில் பெரிய வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், ப்ரொடக்‌ஷன் மாடலில் இந்த வீல்களும், டயர்களும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஸ்லீக்கான டெயில் லைட்டும், இந்த காரின் பாடி லைன்களுமே சொல்லிவிடும் இது ஃபோக்ஸ்வாகன் என்பதை. தற்போது இருக்கும் எஸ்யூவிகளை ஒப்பிடும்போது தனித்துவமான ஸ்டைல்! ஸ்கோடாவின் விஷன்-இன் போலவே மூன்று லேயர் டேஷ்போர்டு உண்டு. ஆனால், இன்டீரியர் டிசைன் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் விதத்திலும் விஷனிடமிருந்து வித்தியாசம் காட்டுகிறது டைகூன்.

XUV500 அடுத்த வெர்ஷன்... ஆட்டோ எக்ஸ்போவில் வருகிறது மஹிந்திரா ஃபன்ஸ்டர் கான்செப்ட் எஸ்யூவி!

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 8.0 இன்ச் டச் ஸ்கிரீன், கனெக்டட் தொழில்நுட்பம் மட்டுமல்ல 6 ஏர்பேக், ABS-EBD, எலெக்டரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், பெடஸ்ட்ரியன் பாதுகாப்பு வசதிகள் எனப் பாதுகாப்பிலும் இது ஸ்கோடாவுக்கு மேலே இருக்கும். T-Cross எஸ்யூவி லத்தின் அமெரிக்க Ncap டெஸ்ட்டில் 5 ஸ்டார் வாங்கியது குறிப்பிடவேண்டிய விஷயம். 

Volkswagen Taigun
Volkswagen Taigun

130bhp பவர் தரும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வரப்போகிறது டைகூன். டீசல் கிடையாது. ஆனால், CNG ஆப்ஷன் எதிர்பார்க்கலாம். ஸ்கோடாவின் விஷன்-இன் கான்செப்ட்டை ஒப்பிடும்போது டைகூன் ப்ரொக்‌ஷன் வெர்ஷனுக்கு அதிக நெருக்கமாக இருக்கிறது. விலைக்கும் விற்பனைக்கும்தான் எல்லோருமே வெயிட்டிங்.

அடுத்த கட்டுரைக்கு