Published:Updated:

ஆக்ஸிலரேட்டரும் முறுக்கலாம்... பெடலும் மிதிச்சுக்கலாம்! வால்ட்ரிக்ஸின் புது பைக்சைக்கிள்!

இ-சைக்கிள்
பிரீமியம் ஸ்டோரி
இ-சைக்கிள்

அறிமுகம்: வால்ட்ரிக்ஸ் ட்ரெஸார் இ–சைக்கிள்

ஆக்ஸிலரேட்டரும் முறுக்கலாம்... பெடலும் மிதிச்சுக்கலாம்! வால்ட்ரிக்ஸின் புது பைக்சைக்கிள்!

அறிமுகம்: வால்ட்ரிக்ஸ் ட்ரெஸார் இ–சைக்கிள்

Published:Updated:
இ-சைக்கிள்
பிரீமியம் ஸ்டோரி
இ-சைக்கிள்

ரொம்பப் புதுசாக இந்த முறை ஒரு சைக்கிள் நம் அலுவலகம் வந்திருந்தது. அதாவது, இ–சைக்கிள். அட, எலெக்ட்ரிக் சைக்கிள் ஓட்டி ரொம்ப நாளாச்சே!

வால்ட்ரிக்ஸ் எனும் மொபிலிட்டி நிறுவனத்தின் ட்ரெஸார் எனும் எலெக்ட்ரிக் சைக்கிள் அது. பார்க்கவே அட்வென்ச்சர் சைக்கிள் மாதிரி இருந்தது. இதை சைக்கிள் மாதிரி பெடலும் செய்து கொள்ளலாம்; பைக் மாதிரி ஆக்ஸிலரேட்டரும் முறுக்கிக் கொண்டு போகலாம். இதில் 250 Watt பவர் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் கொடுத்திருக்கிறார்கள்.

சைக்கிளின் இடதுபக்கம் உள்ள பட்டனை ஆன் செய்தால், பைக்காக அவதாரம் எடுக்கிறது ட்ரெஸார் சைக்கிள். பைக் மாதிரி ஆக்ஸிலரேட்டர் முறுக்கிப் பார்த்தேன். 25 கிமீ வரை டாப் ஸ்பீடு போனது. இதில் ஃபுல் ரேஞ்ச் என்பது 60–80 கிமீ வரை போகலாம் என்கிறது வால்ட்ரிக்ஸ். முன் பக்கம் லித்தியம் அயன் பேட்டரியை நாம் தனியாக எடுத்தும் சார்ஜ் போட்டுக் கொள்ளலாம். இதன் சார்ஜிங் நேரம் பற்றித் தெரியவில்லை.

ஆக்ஸிலரேட்டரும் முறுக்கலாம்... பெடலும் மிதிச்சுக்கலாம்! வால்ட்ரிக்ஸின் புது பைக்சைக்கிள்!

பட்டனை ஆஃப் செய்தால்… சட்டென சாந்தமான அம்பியாக… அதாவது பெடல் சைக்கிளாக மாறிக் கொள்கிறது ட்ரெஸார். இதில் 5 வகையான பெடல்கள் கொடுத்திருக்கிறார்கள். வேகத்துக்கு ஏற்றபடி கியரை நாமே செட் செய்து கொள்ளலாம்.

‘‘மக்களிடம் உடல்ரீதியான செயல்பாடுகள் குறைந்துவிட்டது. அதைக் கருத்தில் கொண்டுதான் இதை லாஞ்ச் செய்திருக்கிறோம்!’’ என்கிறார் வால்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் CEO, விவேக் பழனிவாசன்.

சுமார் 56,000 ரூபாய்க்கு இதை லாஞ்ச் செய்திருக்கிறது வால்ட்ரிக்ஸ். இஎம்ஐ ஆப்ஷனும் இருக்கிறதாம். தினசரி 20 கிமீ–க்குள் அலுவலகம் போகும் கம்யூட்டர் அன்பர்களுக்கு, இந்த ட்ரெஸார் சரியான சாய்ஸாக இருக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism