Published:Updated:

தள்ளுபடி விலையில் BS-6 கார்கள்... எந்தெந்த மாடல்கள், என்னென்ன ஆஃபர்கள்?

Dzire Dualjet BS-6
Dzire Dualjet BS-6 ( Maruti Suzuki )

முந்தைய வாரத்திலேயே, இந்தியாவின் சில பகுதிகளில் ஆட்டோமொபைல் டீலர்கள் - சர்வீஸ் சென்டர்கள் - உதிரிபாக விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுவிட்டன. இதைப் பார்த்த BS-6 வாகன உற்பத்தியாளர்கள், உடனடியாக மே மாதத்துக்கான தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கிவிட்டார்கள்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சிவப்புப் பகுதியில் இருக்கக்கூடிய ஆட்டோமொபைல் டீலர்கள் - சர்வீஸ் சென்டர்கள் - உதிரிப்பாக விற்பனை நிலையங்கள் ஆகியவை இயங்குவதற்கான அனுமதியை, தமிழக அரசு வழங்கியது. அதற்கு முந்தைய வாரத்திலேயே, இந்தியாவின் சில பகுதிகளில் திறக்கப்பட்டுவிட்டன. இதைப் பார்த்த வாகன உற்பத்தியாளர்கள், உடனடியாக மே மாதத்துகான தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கிவிட்டார்கள். வீட்டிலிருந்தே ஊழியர்கள் வேலை பார்ப்பதுபோல, எங்கிருந்து வேண்டுமானாலும் கார்களை ஆர்டர் செய்யும்படி ஆன்லைன் வர்த்தகத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இறங்கிவிட்டன. எனவே டீலர்களைத் தவிர, இணையத்திலும் ஆஃபர்கள் கிடைக்கப் பெறுகின்றன. எந்த மாடலுக்கு எவ்வளவு தள்ளுபடி?

மாருதி சுஸூகி டிசையர்: 48,000 ரூபாய் (Arena டீலர்களில் இருக்கும் BS-6 ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் மீது)

20,000 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 25,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் போனஸ்) + 3,000 ரூபாய் (கார்ப்பரேட் போனஸ்)

Grand i10 Nios
Grand i10 Nios
Hyundai India

ஹூண்டாய் மோட்டார் இந்தியா: மருத்துவர்கள், ஆசிரியர்கள், கார்ப்பரேட் ஊழியர்கள், Chartered Accountants ஆகியோருக்குத் தள்ளுபடிகள் கிடைக்கும். ‘Hyundai EMI Assurance Program’ திட்டமும் பொருந்தும். Click To Buy - ஆன்லைன் தளத்தில் கிடைக்கக்கூடிய ஆஃபர்கள் பின்வருமாறு,

ஹூண்டாய் சான்ட்ரோ: 43,000 ரூபாய்

ஹூண்டாய் கிராண்ட் i10 - 48,000 ரூபாய்

ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் - 28,000 ரூபாய்

ஹூண்டாய் எலீட் i20 - 38,000 ரூபாய்

ஹூண்டாய் எலான்ட்ரா - 1.03 லட்ச ரூபாய்

`ராயல் என்ஃபீல்டு பைக் வாங்கப் போறீங்களா?' - அதிரடி ஆஃபரை வெளியிட்ட ஐஷர் குழுமம்
May Offers
May Offers
Tata Motors

டாடா மோட்டார்ஸ்: 8 வருட ஃபைனான்ஸ், ஆன்-ரோடு விலையில் ஃபைனான்ஸ் ஆகிய திட்டங்கள் உண்டு. காவல்துறை மற்றும் மருத்துவத்துறையில் பணியாற்றுவோர், கார்ப்பரேட் ஊழியர்களுக்கு ஆஃபர்கள் பொருந்தும். அல்ட்ராஸுக்கு எந்தத் தள்ளுபடியும் கிடையாது என்பதுடன், நெக்ஸானுக்கான தள்ளுபடியும் அறிவிக்கப்படவில்லை. அதிகபட்ச ஆஃபர் - 45,000 ரூபாய் வரை மட்டுமே.

டாடா டியாகோ: 25,000 ரூபாய் {15,000 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 10,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் போனஸ்)}

டாடா டிகோர்: 40,000 ரூபாய் {20,000 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 20,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் போனஸ்)}

டாடா ஹேரியர்: 30,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் போனஸ்)

Honda City BS-6
Honda City BS-6
Autocar India

ஹோண்டா கார் இந்தியா: ஐந்தாம் தலைமுறை சிட்டி அறிமுகமாக இருக்கும் சூழலில், ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் சிட்டியின் BS-6 மாடலில் கணிசமான ஆஃபர்களை அறிவித்திருக்கிறது ஹோண்டா. கேஷ் ஆஃபர், எக்ஸ்சேஞ்ச் போனஸ், கார்ப்பரேட் போனஸ் எல்லாம் சேர்ந்து, அதிகபட்சமாக 1 லட்ச ரூபாய் வரையிலான தள்ளுபடி கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

SV MT, V MT, V CVT: 45,000 ரூபாய் {25,000 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 20,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் போனஸ்)}

VX MT: 72,000 ரூபாய் {37,000 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 35,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் போனஸ்)}

ZX MT, VX CVT, ZX CVT: 1 லட்ச ரூபாய் {50,000 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 50,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் போனஸ்)}

ஹோண்டா அமேஸ்: 32,000 ரூபாய் {20,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் போனஸ்) + 12,000 ரூபாய் (4 & 5-ம் ஆண்டுக்கான நீட்டிக்கப்பட்ட வாரன்ட்டி)

Duster BS-6 Petrol
Duster BS-6 Petrol
Autocar India

ரெனோ இந்தியா: 60,000 ரூபாய் வரையிலான ஆஃபர்கள் டஸ்ட்டருக்கு வழங்கப்படுகிறது. 15,000 ரூபாய் (கேஷ் ஆஃபர்) + 25,000 ரூபாய் (எக்ஸ்சேஞ்ச் போனஸ்) + 20,000 ரூபாய் (லாயல்ட்டி போனஸ்). ரெனோ ஃபைனான்ஸ் வழங்கும் 8.99% வட்டி விகிதத்தில், 3 வருட லோனுக்கு அதிகபட்சம் 7.5 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம். இது தொடங்கப்பட்ட முதல் மூன்று மாதங்களுக்கு EMI Holiday கொடுக்கப்பட்டுள்ளது. கிக்ஸ் தொடர்ந்து, 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாடல் விரைவில் களமிறங்கக்கூடும்.

அடுத்த கட்டுரைக்கு