Published:Updated:

BH நம்பர் ப்ளேட் என்றால் என்ன... மாநிலம் விட்டு மாநிலம் மாறினால் வாகன பதிவு எண்ணை மாற்ற வேண்டுமா?

BH மாதிரி நம்பர் ப்ளேட்
BH மாதிரி நம்பர் ப்ளேட்

வேறு மாநிலப் பதிவு எண் கொண்ட வாகனங்களை ஓட்டும்போது, ஹேட்ச்பேக் என்றால் சுமார் 30,000 ரூபாய், செடான் என்றால் 40,000, எம்யூவி அல்லது எஸ்யூவி போன்ற பெரிய வாகனங்கள் என்றால் இன்னும் கூடுதலாக அபராதத் தொகை விதிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முன்பெல்லாம் மாநிலம் விட்டு மாநிலம் போகும்போது, வாகன ஓட்டிகள் ரீ–ரிஜிஸ்ட்ரேஷன், NOC (No Objection Certificate) போன்ற விஷயங்களில் பெரிதும் அவதிக்குள்ளாவார்கள். பொதுவாக ஒரு வாகன உரிமையாளர், ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை, (12 மாதங்களுக்குள் அந்த வாகனத்தை மறுபதிவு செய்யாமல்) இன்னொரு மாநிலத்தில் ஓட்டுவது, மோட்டார் வாகனச் சட்டப்படிக் குற்றம்.

உதாரணத்துக்கு மகாராஷ்டிரா ரிஜிஸ்ட்ரேஷன் கொண்ட வாகனம், தமிழ்நாட்டுக்குள் ஓட வேண்டும் என்றால், போக்குவரத்து வாகன விதிகளின்படி அந்த வாகனத்தின் Parent State என்று சொல்லக்கூடிய மாநிலத்தில் NOC வாங்கி, புது மாநிலத்துக்கான ரிஜிஸ்ட்ரேஷன் நம்பரைப் பெற வேண்டும். அப்போது அந்தப் புது மாநிலத்துக்கான சாலை வரியை கூடுதலாகக் கட்ட வேண்டி இருக்கும். இதைவிட, சொந்த மாநிலத்தில் கட்டிய வரிப்பணத்தை ரீஃபண்ட் செய்து அக்கவுன்ட்டில் போடுவதற்குள், வாகனங்களுக்கான FC பீரியடே முடிந்துவிடும். இது சாதாரண விஷயமல்ல.

அப்படி வேறு மாநிலப் பதிவு எண் கொண்ட வாகனங்களை ஓட்டும்போது, ஹேட்ச்பேக் என்றால் சுமார் 30,000 ரூபாய், செடான் என்றால் 40,000, எம்யூவி அல்லது எஸ்யூவி போன்ற பெரிய வாகனங்கள் என்றால் இன்னும் கூடுதலாக அபராதத் தொகை விதிக்கப்படுகிறது.

BH Number Plate
BH Number Plate

ஆனால், இனி இந்த தொல்லையில்லை. BH சீரிஸ் நம்பர் ப்ளேட்டுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சகம். வாகனங்களில் BH எனும் நம்பர் ப்ளேட்டுகள் இருந்தால், அந்த வாகனங்கள் மாநிலம் விட்டு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு மாறும்போது மறு ரிஜிஸ்ட்ரேஷன் தேவையில்லை.

இந்த BH சீரிஸ் நம்பர், வாலன்ட்டியரி அடிப்படையில் தரப்படும்.
ஆனால் பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு இந்த வசதி இன்னும் வரவில்லை. அரசாங்கத்தைச் சேர்ந்த பாதுகாப்புப் பணியாளர்கள் (Defense Personnel), மத்திய அரசாங்க ஊழியர்கள், பப்ளிக் செக்டார் பணியாளர்களுக்கான வாகனங்கள், நான்குக்கு மேற்பட்ட மாநிலங்களில் கிளைகள் கொண்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் – தங்களின் சொந்த விருப்பத்தின்பேரில் இந்த BH சீரிஸ் நம்பர் ப்ளேட்டுகளைப் பதிவு செய்து கொள்ளலாம்.


இந்த BH சீரிஸ் நம்பர் ப்ளேட்டுகள் கொண்ட வாகனங்களுக்கு அந்த மாநிலத்துக்கான சாலை வரி மற்றும் பதிவு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இந்தியாவுக்குள் எந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குள்ளும் ஓட்டிக் கொள்ளலாம்.

MORTH அறிவிப்பு
MORTH அறிவிப்பு
HSRP நம்பர் ப்ளேட்
HSRP நம்பர் ப்ளேட்

இப்போது இந்தப் புதிய BH சீரிஸ் நம்பர் ப்ளேட் அறிமுகத்தைப் பற்றிச் சொல்கையில், ‘‘தகவல் தொழில்நுட்ப அடிப்படையில், மக்களின் இடம்பெயர்தலை எளிதாக்கும் பொருட்டு இப்படி ஒரு புதிய தீர்வைக் கொண்டு வந்துள்ளோம். இது மாநிலங்கள் விட்டு மாநிலங்கள் மாறும்போது பெரிய மனஉளைச்சலையும், நேரவிரயத்தையும் தடுக்கும்!’’ என்கிறது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்.

இந்த நம்பர் ப்ளேட்டுகள் YY BH 4144 XX YY – என்ற அடிப்படையில் இருக்கும்.

YY : வாகனம் பதிவு செய்யப்பட்ட முதல் ஆண்டு (Year of First Registration)

BH : பாரத் சீரிஸின் கோடு (Code for Bharat Series)

0000 to 9999 : வாகனத்தின் பதிவு எண் – (Vehicles Random Registration Number)

XX-YY: ஆங்கில எழுத்துகள் (English Alphabets)

morth.nic.in எனும் வலைதளத்தில் BH சீரிஸ் நம்பர் ப்ளேட்களை ரிஜிஸ்ட்ரேஷன் செய்து கொள்ளலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு